/* */

பூசணி விதையில இத்தனை சத்துக்களா? இத்தன நாள் தெரியாம போச்சே! Pumpkin Seeds in Tamil

பூசணியின் காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் தூக்கி எறியக்கூடிய பொருளல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள. இவற்றின் மருத்துவக் குணங்கள் அபாரமானவை

HIGHLIGHTS

பூசணி விதையில இத்தனை சத்துக்களா? இத்தன நாள் தெரியாம போச்சே! Pumpkin Seeds in Tamil
X

பூசணிக்காய் பெரிதாக இருந்தாலும் அதன் விதைகள் மிகவும் சிறியது. சிறியதாக இருந்தாலும் அதன் பலன்கள் மிகவும் பெரியது. முழுக்க முழுக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான் பூசணிக்காய் விதைகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, மருந்துத் தயாரிப்புகளில்தான் பூசணி விதை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உணவிலும் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

நம் ஆரோக்கியத்துக்கு பூசணி விதைகள் வாரி வழங்கும் நலன்களை பார்ப்போமா!

இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.


எலும்புகளுக்கு பலம் தரும்

எலும்புகளுக்குத் தேவையான ஒரு முக்கியமான மினரல் மெக்னீசியம். பூசணிக்காய் விதைகளில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் இவை எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இது எலும்புகள் அடர்த்தியாகவும் உறுதியாகவும் இருப்பதற்கு உதவுகிறது. சில எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இதயத்துக்கு நல்லது

இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். மக்னீசியம் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

நோய் எதிர்ப்புச் சக்தி

ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு போன்ற பிரச்னைகள் குணமாகும்.


சர்க்கரைநோயை தடுக்கும்

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

கல்லீரலை பாதுகாக்கும்

இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

நல்ல தூக்கம் வரும்

இந்த விதைகளில் உள்ள டிரிப்தோபான் என்னும் அமினோ அமிலங்கள் தூக்கத்தைத் தூண்டும். இதனால் தூங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் இந்த விதைகளைச் சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

உள்காயங்களைச் குணமாக்கும்

இந்த விதைகளில் உள்ள ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி பொருள்கள் உள்காயங்களை ஆற்றும் தன்மைகொண்டவை.

உடல் வலிமை தரும்

இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.

மாதவிடாய்க் கோளாறு நீக்கும்

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

உடல் உஷ்ணம் குறையும்

ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.


முடி வளர்ச்சிக்கு நல்லது

பூசணி விதைகளில் உள்ள ஒரு வகையான அமினோ ஆசிட் என்பவை முடி வளர பெரிதும் உதவுகின்றது. மேலும் முடி அடர்த்தியாகவும் பளபளவென்று அழகாகவும் வளர காரணமாக அமைகிறது. பூசணிக்காய் விதையை எண்ணெய்யாகத் தயாரித்து சில இடங்களில் விற்பனை செய்கிறார்கள் அதை நமது முடியில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பக்கவிளைவுகள்

இதில் நன்மைகள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன.

பூசணி விதைகளை நீங்கள் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடலில் ஏற்கனவே இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை இழக்கும் அபாயம் ஏற்படலாம்

பூசணி விதைகளை நீங்கள் சமைக்கும்போது நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் பி 6, நியாசின், ரைபோஃப்ளேவின், வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணாமல் போகிறது என்பதே உண்மை. எனவே நீங்கள் பூசணி விதைகளை சமைக்கிறீர்கள் என்றால், மிகக் குறைந்த அளவு வெப்பநிலையில் சமைக்க வேண்டும். அதேபோல் இதன் விதைகளை நன்கு மென்று மட்டுமே சாப்பிட வேண்டும், அப்படியே விழுங்கக்கூடாது.

பூசணி விதைகளில் புரதம் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவுகள் உள்ளன, இது குழந்தைகளை எளிதாக கவரும் ஒரு உணவாக அமைகிறது. இருப்பினும், இதன் விதைகளில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிரம்பியிருப்பதால், குழந்தைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்

இதன் விதைகள் அதிகளவில் ஹார்மோன்களை வெளியிடுவதால் கர்ப்ப காலத்தில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் பாலூட்டும் காலத்தில் பூசணி விதைகளை உண்பதால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் அளவாக உட்கொண்டு எதிர்விளைவுகளை தவிர்ப்பது நல்லது.

Updated On: 1 Sep 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!