/* */

இன்ஸ்டாநியூஸ் சண்டே சமையல்- முட்டை பிரியாணி

இன்ஸ்டாநியூஸ் சண்டே சமையல்- முட்டை பிரியாணி
X

இன்ஸ்டாநியூஸ் சண்டே சமையல்- முட்டை பிரியாணி

இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை இந்த சமையல் குறிப்பை காலையில் சொல்லி இருக்கணும். இந்த பக்கம் முதல்ல முட்டை பிரியாணியை சமையல் செய்து பார்த்து விட்டு வாசகர்களுக்கு கொடுக்கலாம் அப்படீங்குற சாப்பாட்டு எண்ணத்துல லேட் ஆகி விட்டது. இருந்தாலும் ஏன் ராத்திரி செஞ்சு தான் பாருங்களேன்..

சரி வாங்க கிச்சனுக்கு போவோம்.

முட்டை நல்ல உணவல்ல அப்படின்னு தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association - AHA) .சொன்னது சிலருக்கு தெரியும். அதாவது இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்' என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது. சரி விடுங்க அதெல்லாம் நமக்கு எதுக்கு பாஸ் முட்டை பிரியாணி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


முட்டை பிரியாணி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - அரை கிலோ,

முட்டை - 10,

தக்காளி - 4,

பெரிய வெங்காயம் - 3,

கடைந்த தயிர் - 1 கப்,

எண்ணெய் - அரை கப்,

நெய் - கால் கப்,

உப்பு - 2 டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.

அரைக்க :(அம்மியோ அல்லது மிக்ஸியோ உங்கள் விருப்பம்)

பட்டை - 2,

லவங்கம் - 2,

ஏலக்காய் - 6,

பச்சை மிளகாய் - 5,

புதினா - ஒரு கைப்பிடி,

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி.

அடுத்து செய்முறை பற்றி பார்ப்போமா?

அரிசியைக் கழுவி நன்றாக ஊற விடவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். பிறகு, அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலாவை, தக்காளியோடு சேர்த்து நன்றாக நன்கு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி எண்ணெய் ஓரங்களில் வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு கொதிக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்க விடுங்கள்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சுடுநீர் வைத்து, ஊற வைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி 'தம்' போட்டு இறக்கவும். அவ்வளவு தான்..

சுவையான முட்டை பிரியாணி ரெடி. அப்புறம் என்ன சாப்பிட்டு விட்டு இந்த சேதியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Updated On: 13 Jun 2021 1:38 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி