/* */

கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லைங்க... படிங்க...

Hard Work Quotes in Tamil-உழைப்பு உயர்வு தரும். உழைக்காமல் யாருமே முன்னேற முடியாது. உழைத்தால் மட்டுமே முன்னேற்றம் கிட்டும்... உழையுங்க.. கடினமாய்...

HIGHLIGHTS

Hard Work Quotes in Tamil
X

Hard Work Quotes in Tamil

Hard Work Quotes in Tamil-உழைப்பு....உழைப்பு.....உழைப்பு..... மும்பை டப்பா வாலாக்களின்உழைப்பே உழைப்பு..... வயதான காலத்திலும் உழைப்பு

மும்பையில் உணவுகளை எலக்ட்ரிக் ட்ரெயினில் எடுத்துச்செல்லும் வயதான டப்பாவாலா .உழைப்புக்கு வயது இல்லை....

இன்றைய வாழ்க்கையில் உயர்ந்த இடத்தினை அடைந்தவர்கள் யாரும் உழைக்காமல் இவ்வளவு உயரத்தை தொடவில்லை என்று சொல்லிவிட முடியாது. ஏதோ 10 ல் ஒருவர் மட்டுமே அவர் பிறந்ததில் இருந்து வசதி வாய்ப்புகளைப் பெற்று அவருடைய பூர்வீக சொத்துகளுக்கு வாரிசாக வலம் வந்து கொண்டிருக்கலாம்.ஆனால் பெரும்பாலானோர் தன் வாழ்க்கையில் கடின உழைப்பால் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் ஏராளமானோரை கை காட்டலாம். அந்த வகையில் பலரும் இன்று விஐபிக்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் கஷ்டத்தினை சந்தித்தவர்கள்தான். ஏன்? அவர்களே பலர் தன்னுடைய கட்டுரையில் மற்றும் பேட்டிகளில் பழையதை மறைக்காமல் சொல்லி வருகின்றனர்.

ஏன் அப்படி சொல்கின்றனர். யாருக்கு தெரியப்போகிறது இவர் இவ்வளவு கஷ்டப்பட்டதென்று கூட நீங்கள் நினைக்கலாம். ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்க.. நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உச்சத்தினையும் தொடலாம்... அப்படியிருந்தாலும் நீங்கள் வந்த பாதையினை சற்று மனதளவில் அடிக்கடிநினைத்து பார்த்தால்தான் நீங்கள் அந்த உச்சத்தில் நிரந்தரமாக தங்க முடியும்.இல்லாவிட்டால் தொபுக்கடீர் என கீழே விழுந்து விடுவீர்கள்.

உழைப்பவர்களே முன்னேறுவதற்கான தகுதி வாய்ந்தவர்களாக சமூகத்தில் கருதப்படுகிறார். எப்படி வேண்டுமானாலும் பணத்தினை சம்பாதித்துவிடலாம் .உழைத்து முன்னேறியவர்கள் கஷ்டத்தினை உணர்ந்தவர்கள் அனைவருமே பணத்தின் அருமையை உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் அக்காலத்தில் இருந்து பணத்தின் அருமை தெரிந்ததால்தான் இவ்வளவு உச்சத்தினை அவர்கள் வாழ்க்கையில் தொட முடிந்தது என்றால் யாராலும் மறுக்க முடியாது.

நம்மிடம் பணம் அதிகம் இருக்கிறதே என சிக்கனமாக இல்லாமல் அள்ளி அள்ளி செலவு செய்தால் இதுபோல் முன்னேற முடியுமா? பணம் இருக்கிறதென்றால் கூடவே கூடும் காக்கா கூட்டம் இவ்வுலகில் அதிகம். அந்த பணம் இருக்கிற வரை அக்கூட்டம் கூடவே வட்டமிடும்.. பணம் காலியான பின் மாற்றுஅணிக்கு பறந்து போய்விடும். இதுபோல் காக்கா கூட்டங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது.

Hard Work Quotes in Tamil

உழைப்பினை யார் மதிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் தானாக உயர்வு வரும். சோம்பேறிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எப்போதும் இருக்காது. வளர்ச்சிக்கே தடைதான் அங்கு. எதையும் யோசிக்காமல் , திட்டமிடாமல்இருந்தால் எப்படி வாழ்வில் முன்னேற முடியும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது. நாமும் அ வர்களைப்போல் முன்னேற வேண்டும் என உங்கள் மனதில் லட்சியத்தினை வளர்த்துகொள்ளுங்க.. நீங்களும் நிச்சயமா முன்னேறுவீங்க....

உழைப்பும் வெற்றிக்கான வாசகங்கள் இதோ... உங்களுக்காக ...

வெற்றிக்கும்,தோல்விக்கும் சிறிய வித்தியாசம் தான்

கடமையாய் செய்தால் வெற்றி கடமைக்கு செய்தால் தோல்வி.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போதுகூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்.

நம்பிக்கை உள்ள மனிதனுக்குஎப்போதும் ரோஜா மட்டும் தான்

கண்ணில் படும் முட்கள் இல்லை.

சிந்திக்க தெரிந்தவனுக்குஆலோசனை தேவை இல்லை துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

அதிகாலை நீ நினைத்தநேரத்தில் எழுந்து விட்டாலேதோல்விகள் உன்னை விட்டுஒதுங்கி கொள்ளும்!

ஆண்டவன் சோதிப்பதுஉன்னை மட்டும் இல்லை

உன்னை போல சாதிக்க துடிக்கும்புத்திசாலிகளை மட்டும்!

எல்லோரையும் திருப்திப்பட வைக்கநினைப்பவனால் வாழ்க்கையில்வெற்றி பெற முடியாது!

உன் மீதுஉனக்கே நம்பிக்கை இல்லை என்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

தோல்வி அடைந்தவன்மாற்ற வேண்டியதுவழிகளைத்தான்இலக்கை இல்லை!

யானையால்!தும்பிக்கை இல்லமால் வாழ முடியாது

மனிதனால்!நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது.

உலகம் உன்னை அறிவதை விடஉன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறதுஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் தான் உனக்கான இடம் தோல்வியா வெற்றியா என்பது அமைகிறது.

நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்கஒரு வழியை கண்டு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இறக்கும் வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும்

மற்றவர்களின் எண்ணங்கள்ஒரு போதும் என்னை வீழ்த்தியதில்லைகாரணம் என் மனா வலிமைக்கு பலம் அதிகம்.

முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைஇந்த உலகில் முடியாது என்பது எதுவுமே இல்லை.நீ முடியாது என்று சொல்வதைஎவனாவது ஒருவன் கண்டிப்பாகபிற்காலத்தில் செய்து முடிப்பான்.

நீங்கள் வெற்றிபெற விரும்பினால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற முடியும்; நீங்கள் தோல்வியைப் பொருட்படுத்தாவிட்டால் மட்டுமே நீங்கள் தோல்வியடைய நேரிடும்

மலைகள் ஏறுவதால் உலகம் உங்களைப் பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் உலகைப் பார்க்க முடியும்

போராட்டம் இல்லை என்றால், முன்னேற்றம் இல்லை

வெற்றி என்பது முடிவும் அல்ல; தோல்வி ஆரம்பமும் அல்ல: அதைத் தொடர தைரியம்தான் முக்கியம்

பெரிதாக தோல்வியடையத் துணிந்தவர்களால் மட்டுமே எப்போதும் பெரிய அளவில் சாதிக்க முடியும்

ஒரு கனவை நிறைவேற்றுவதற்கு எடுக்கும் நேரத்தின் காரணமாக அதை ஒருபோதும் கைவிடாதீர்கள். நேரம் எப்படியும் கடந்து போகும்

வெற்றி என்பது சரியானதைச் செய்வதே தவிர, எல்லாவற்றையும் சரியாகச் செய்வதல்ல

பல வருட தோல்வியே ஒரு நிமிட வெற்றியை செலுத்துகிறது

வெற்றியின் விதைகளை விதைப்பதற்கு தோல்வி காலம் சிறந்த நேரம்

நான் தோல்வியடையவில்லை. வேலை செய்யாத 10,000 வழிகளை நான் இப்போது கண்டுபிடித்துள்ளேன்

ஒரு வெற்றிகரமான மனிதன் தான் மற்றவர்கள் எறிந்த செங்கற்களால் உறுதியான அடித்தளத்தை அமைக்க முடியும்

உங்களிடம் விமர்சகர்கள் இல்லையென்றால், நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள்

பிறர் சாயலில் வெற்றி பெறுவதை உனது அசல் தன்மையில் தோல்வி அடைவது நல்லது

வெற்றி என்பது சிறிய முயற்சிகளின் கூட்டுத்தொகை

நீங்கள் தவறான விஷயங்களைத் துரத்துவதை நிறுத்தும்போது தான், சரியான விஷயங்கள் உங்களைப் பிடிக்க வாய்ப்பளிக்கின்றன

மகிழ்ச்சி என்பது ஒரு பட்டாம்பூச்சியாகும், நீங்கள் அதை பின்தொடரும்போது, எப்போதும் உங்கள் கைகளில் கிடைப்பதில்லை, ஆனால் நீங்கள் அமைதியாக உட்கார்ந்தால், உங்கள் மீது அமரலாம்

வாழ்க்கை என்பது உன்னைக் கண்டுபிடிப்பது அல்ல. வாழ்க்கை என்பது உன்னையே உருவாக்கிகொள்வது

உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஏற்ற தாழ்வுகள் வந்தாலும் சிந்தனை உங்கள் மூலதனச் சொத்தாக மாற வேண்டும்

தைரியம் ஒரு தசை போன்றது. அதைப் பயன்படுத்துவதன் மூலம் தான், நாம் அதை வலுப்படுத்துகிறோம்!!

அனைத்து சாதனைகளின் தொடக்கப் புள்ளி ஆசைவெற்றிக்கான பாதையும் தோல்விக்கான பாதையும் கிட்டத்தட்ட ஒன்றே

தோல்விகளிலிருந்து வெற்றியை வளர்த்துக் கொள்ளுங்கள். ஊக்கமின்மை மற்றும் தோல்வி ஆகியவை வெற்றிக்கு உறுதியான இரண்டு படிக்கட்டுகளாகும்

உண்மையான சிரமங்களை சமாளிக்க முடியும்; கற்பனையானவை மட்டுமே வெல்ல முடியாதவை

தோல்வி என்பது வெற்றிக்கு அதன் சுவையை கொடுக்கும் மசாலா

ஒரு போரில் வெற்றி பெற நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை போராட வேண்டியிருக்கும்

ஒரு கேப்டனின் உயர்ந்த குறிக்கோள் அவருடைய கப்பலைப் பாதுகாப்பதாக இருந்தால், அவர் அதை எப்போதும் துறைமுகத்தில் தான் வைத்திருப்பார்

அதிகப்படியான முயற்சியே நம்பிக்கையின் பற்றாக்குறையை சமாளிக்கும்

உன்னால் இன்னும் பெரிய விஷயங்களைச் செய்ய முடியாவிட்டால், சிறிய விஷயங்களைச் சிறந்த முறையில் செய்

நீங்கள் உறுதியாக நிற்கும் முன், உங்கள் கால்கள் சரியான இடத்தில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

அனுபவம் ஒரு கடினமான ஆசிரியர், ஏனென்றால் அவள் முதலில் சோதனையையும், பிறகு பாடத்தையும் கொடுக்கிறாள்

தெரிந்து கொள்ள எவ்வளவு இருக்கிறது என்பதை அறிவது வாழ கற்றுக்கொள்வதற்கான ஆரம்பம்

"உன்னால் வெல்ல முடியாது" என்று உன்னால் மட்டுமே சொல்ல முடியும், நீ பிறரிடம் கேட்க வேண்டியதில்லை

ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் பின்னால் பல தோல்வியுற்ற ஆண்டுகள் உள்ளன

வேறு யாருக்கும் தெரியாத ஒன்றை அறிவதே வெற்றியின் ரகசியம்

வெற்றி போல் எதுவும் வெற்றிபெறாது

வெற்றியின் ரகசியம் பொதுவான விஷயங்களை அசாதாரணமாகச் செய்வது

வெற்றி என்பது கற்றலின் தவிர்க்க முடியாத துணை தயாரிப்பு ஆகும்

கனவுகளுக்கும் வெற்றிக்கும் இடையே நிறைய இரத்தம், வியர்வை மற்றும் தைரியம் இருக்கிறது

செய்யக்கூடாததைத் திறமையாகச் செய்வது போல் பயனற்றது எதுவுமில்லை

நமது இருண்ட தருணங்களில் தான் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும்

தோல்வி பட்ட உனக்குமட்டும் தானே தெரியும்வெற்றியின் அருமை!தன்னம்பிக்கை ஒன்றை

மட்டும் நினைவில் வைத்துஉன் வெற்றிக்காக வரிந்து கட்டு.

ஒரு விஷயத்தைஉன்னால் கனவு காண முடியுமானால்அதனை உன்னால் செய்யவும் முடியும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 8 April 2024 9:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்