/* */

அள்ள அள்ள குறையாத அற்புத சத்துகள் உள்ள சோம்புக்கீரை..

Dill Leaves in Tamil-சோம்புக்கீரை பெரும்பாலும் சாலட் மற்றும் சூப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலிற்கு தேவையான உடனடி சத்துக்கள் கிடைக்கின்றன

HIGHLIGHTS

Dill Leaves in Tamil
X

Dill Leaves in Tamil

Dill Leaves in Tamil-மூலிகை குணமிக்க சோம்பு, ‘செலரி’ கீரை வகையான அபிசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது. மணமும் மருந்தும் ஒருசேர இணைந்த சோம்புக்கீரை வரலாற்று சிறப்புடையது.

பல நூற்றாண்டுகளாக ஆசியா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம்பிடித்திருக்கும் ‘சோம்புக்கீரை’ கீரை அள்ள அள்ள குறையாத பல அற்புத சத்துக்களை கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.

மிகவும் வாசனையுடைய இந்த கீரை விட்டமின் ஏ, விட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளவின், நியாசின், தையமின், விட்டமின் பி6, பாந்தனிக் அமிலம், மினரல்ஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், ஜிங்க், காப்பர் என உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்களை தன்னகத்தை கொண்டுள்ளது

ஊட்டச்சத்து உள்ளடக்கம்

கார்போஹைட்ரேட்டுகள் 7.02 கிராம்

புரதம் 3.46 கிராம்

லிப்பிடுகள் 1.12 கிராம்

நார்ச்சத்து 2.1 கிராம்

இரும்பு 6.59மி.கி

சோடியம் 61 மிகி

பாஸ்பரஸ் 66 மிகி

வெளிமம் 55மி.கி

கால்சியம் 208 மிகி

பொட்டாசியம் 738 மிகி

துத்தநாகம் 0.91 மிகி

மாங்கனீசு 1.26 மிகி

செம்பு 0.146 மிகி

வைட்டமின் ஏ 386 μg

வைட்டமின் பி1 (தியாமின்) 0.058மிகி

வைட்டமின் B2 (ரைபோஃப்ளேவின்) 0.296மிகி

வைட்டமின் B3 (நியாசின்) 1.57மி.கி

வைட்டமின் B5 (பாந்தோதெனிக் அமிலம்) 0.185 மிகி

வைட்டமின் B9 (ஃபோலேட்) 150 μg

வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) 85 மிகி

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயிரிடப்படும் இந்த செடி மத்திய தரைக்கடல், ஆசியா, தெற்கு ரஷ்யா மற்றும் வட அமெரிக்கா போன்ற பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த கீரை தற்போது உலகம் முழுவதும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது

தூக்கமின்மை என்பது நாம் தூங்குவதில் சிக்கலை எதிர்கொள்ளும் ஒரு கோளாறைக் குறிக்கிறது. தூக்கமின்மை கடுமையானதாகவோ, நாள்பட்டதாகவோ அல்லது எப்போதாவது ஏற்படலாம். நாம் கடைப்பிடித்த பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் போதுமான தூக்கம் நம்மை சோம்பேறியாகவும் விரக்தியாகவும் ஆக்குவதன் காரணமாக பலருக்கு தூக்கமின்மை தூண்டப்படுகிறது. சோம்புக்கீரையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஒரு கலவை தூக்கமின்மையை ஒழிக்க உதவும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன.

முந்தைய காலங்களிலே கிரேக்கர்களும், எகிப்தியர்களும் இதன் நற்பயனை தெரிந்துக்கொண்டு தங்களின் மருத்துவப்பயன்பாட்டில் பயன்படுத்தி வந்துள்ளனர். எகிப்தியர்கள் வலிகளை குறைக்கும் மருந்தாகவும், கிரேக்கர்கள் தூக்கமின்மையை போக்கும் மருந்தாகவும் சோம்புக்கீரையை பயன்படுத்தி வந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சோம்புக்கீரை இலைகள் பெரும்பாலும் சாலட் மற்றும் சூப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது உடலிற்கு தேவையான உடனடி சத்துக்கள் கிடைக்கின்றன.

உணவில் மட்டுமல்ல, மருத்துவத்திலும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக உள்ளது. இதன் இலை மற்றும் விதைகளில் கரோவோவன், ஏபியால், தில்-ஏபியால், பிளோவோனாய்டுகள், கௌமெரின்கள், ஸான்தோன்கள் மற்றும் டிரைடெர்பின்கள் என எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இது பல்வேறு தொற்று நோய்கள், காய்ச்சல், வறட்டு இருமல், சளி, குடல் மற்றும் வயிறு பிரச்சனைகள் போன்றவைகளை சரிப்படுத்துக்கிறது.

பெண்களுக்கு கருப்பையில் இருக்கும் அழுக்குக்களை சுத்தப்படுத்துவதோடு, மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது. அத்தோடு தாய்ப்பால் சுரத்தலையும் அதிகப்படுத்துவதோடு, குழந்தைகளின் வயிறு தொந்தரவு போன்ற பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.

.நூறு கிராம் இலையில் 43 கலோரிகள் அடங்கியிருக்கின்றன. அதனால், தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்

பக்கவிளைவு

எல்லா உணவும் அனைவருக்கும் ஒத்துப்போவதில்லை. ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியதுதான் சோம்புக்கீரை.

கேரட் அலர்ஜி இருப்பவர்களுக்கு இந்த சோம்புக்கீரை இலைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.எனவே, தவிர்ப்பது நல்லது.

ஒவ்வாமையின் அறிகுறிகளாக வாந்தி, உமிழ்நீர் சுரத்தல், தொண்டை மற்றும் நாக்கில் எரிச்சல் உணர்வு, டயரியா போன்றவையும் ஏற்படும்.

அடுத்து இதை பயன்படுத்துவது எவ்வாறு என்று பார்க்கலாம்,

சோம்பு கீரை பொரியல்:

தேவையான பொருட்கள் :

சோம்பு கீரை – 2 கப்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

காய்ந்த மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

துருவிய தேங்காய் – தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது


செய்முறை:

  • முதலில் சோம்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பின் சின்ன வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அடுத்து கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள சோம்பு கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • கீரை சரியான பக்குவத்தில் வெந்தவுடன் அதனுடன் சிறிது துருவிய தேங்காயை போட்டு கிளறி இறக்கவும் .

சத்தான சோம்பு கீரை பொரியல் தயார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 16 April 2024 9:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்