/* */

பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை

Coconut Oil Massage for Babies, Method of Use பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது மற்றும் அதனை பயன்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.

HIGHLIGHTS

பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
X

பச்சிளம் குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மூலம் மசாஜ் செய்வது மற்றும் அதனை பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Coconut Oil Massage for Babies, Method of Useகுழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய கலை ஆகும். ஐரோப்பிய நாடுகளில் குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் அதனை பார்த்து கொள்வதற்கு என்று தனியாக தாதிமார்களை அதாவது செவிலியர்களை நியமித்துக் கொள்வது உண்டு. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பாரம்பரிய முறையில் குழந்தைகளை பராமரிப்பது ஒரு பெரிய கலையாக தொன்று தொட்டு இருந்து வருகிறது.


Coconut Oil Massage for Babies, Method of Useஇந்திய கலாச்சாரத்தில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் வழக்கத்தை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாரித்து வைத்திருப்பார்கள். அதில் முக்கியமானவை மசாஜ் செய்வதற்கான எண்ணெய் மற்றும் குளியல் பொடி.

Coconut Oil Massage for Babies, Method of Useமசாஜ் செய்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது சரும வறட்சி நீங்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவாகும் ரத்த ஓட்டமும் சீராகும்.


Coconut Oil Massage for Babies, Method of Useதேங்காய் எண்ணெய் அடர்த்தி குறைவாக இருப்பதால் சருமத்தில் எளிதாக ஊடுருவும் இது கோடைகாலத்தில் சருமத்தை குளிர்விக்கும். பனிக்காலத்தில் சருமத்திற்கு தேவையான வெப்பத்தை கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் அலர்ஜியை நீக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற அலர்ஜி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளுக்கு சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

Coconut Oil Massage for Babies, Method of Useகுழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

Coconut Oil Massage for Babies, Method of Useஅதிக முற்றல் அல்லது இளசாக இல்லாமல் நடுத்தரமாக இருக்கும் தேங்காய் இரண்டு அல்லது மூன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை துருவி தண்ணீர் சேர்க்காமல் இரண்டு முறை பால் பிழிந்து கொள்ள வேண்டும். அடி பகுதி கனமான பாத்திரத்தில் தேங்காய் பாலை ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்த வேண்டும். சிறிது நேரத்தில் பால் சிறு சிறு கட்டிகளாக மாறத் தொடங்கும். அவ்வப்போது அதை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக பாலில் இருக்கும் தண்ணீர் சத்து முழுமையாக வற்றி எண்ணெய் மேலே மிதந்து வரும்.

Coconut Oil Massage for Babies, Method of Useஇப்போது தீயை அணைக்க வேண்டும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டி கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைக்க வேண்டும். இதை அறை வெப்ப நிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த எண்ணெயை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றாலும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது.


Coconut Oil Massage for Babies, Method of Useகுழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பிரசவித்த தாய்மார்களும் இதை பயன்படுத்தலாம். கோடைகாலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய்யை சூடு படுத்தாமல் அப்படியே பயன்படுத்தலாம். அதே சமயம் குளிர் காலத்தில் மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது. முதலில் குழந்தையின் மார்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி கைகளால் மேல் நோக்கி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.அதை தொடர்ந்து தலை, கைகள், கழுத்து, கால்கள் மற்றும் பாதங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.வட்ட மற்றும் மேல் நோக்கிய இயக்கங்களில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். குழந்தையின் தொப்புள், மூக்கு, கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.

Coconut Oil Massage for Babies, Method of Useகிராமங்களில் இன்றும் நமது தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். பிறந்த குழந்தை எண்ணெய் தண்ணீரில் வளரும் என்று. ஆதலால் அந்த எண்ணெயை நாம் எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவு குழந்தை வளர்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Updated On: 24 March 2023 4:06 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு