/* */

Clove Benefits-கிராம்பு தரும் நன்மைகள், அவற்றின் பக்க விளைவுகள் பற்றித் தெரிந்துக்கொள்வோம்!

Clove Benefits- கிராம்பு என்பது சமையலில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாக, மிக முக்கியமானதாக இருக்கிறது. அவற்றின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றித் தெரிந்துக்கொள்ளலாம்.

HIGHLIGHTS

Clove Benefits-கிராம்பு தரும் நன்மைகள், அவற்றின் பக்க விளைவுகள் பற்றித் தெரிந்துக்கொள்வோம்!
X

Clove Benefits- கிராம்பு குறித்த மருத்துவ தகவல்களை அறிவோம் (கோப்பு படம்)

Clove Benefits, Side Effects- கிராம்பு பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு என்பது கிராம்பு மரத்தின் காய்ந்த பூக்களில் இருந்து கிடைக்கும் நறுமணப் பொருளாகும். சீனாவிற்கு அருகில் உள்ள ஸ்பைஸ் தீவுகளில் கிராம்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு பாரம்பரிய உணவுகளில் கிராம்பு பயன்படுத்தப்பட அது ஐரோப்பியா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பரவியது. தற்போது கிராம்பு பிரபலமான மசாலா பொருளாக உள்ளது. இது உணவுகளின் சுவையை சற்று அதிகரித்து தருகிறது.

கிராம்பின் ஊட்டச்சத்து

கிராம்புகளில் நிறைய மாங்கனீசு உள்ளது, இது உங்கள் எலும்பு பிரச்சினைகளை சரி செய்யவும் ஹார்மோன்களை உருவாக்கவும் உதவும்.

கிராம்பில் உள்ளவை :

வைட்டமின் கே

பொட்டாசியம்

பீட்டா கரோட்டின்

யூஜெனால்

கிராம்பு பீட்டா கரோட்டின் சிறந்த மூலமாகும். இது கிராம்புகளுக்கு பழுப்பு நிறத்தைக் கொடுக்க உதவுகிறது. நிறமிகளின் குடும்பமான கரோட்டின்கள் முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் புரோ வைட்டமின்களாகச் செயல்படுகின்றன. கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறக்கூடும். இது உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.

கிராம்பின் ஆரோக்கிய நன்மைகள்:

கிராம்புகள் அவற்றின் அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்கு அறியப்பட்ட பல சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன. இதில் யூஜெனால் மிக முக்கியமானது. கீல்வாதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

பல்வலிக்கு தீர்வு :

கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் பல் வலிக்கு ஒரு சிறந்த தீர்வாக அறியப்படுகிறது. கிராம்புகளின் பிளேக், ஈறு அழற்சி மற்றும் துவாரங்களில் காணப்படும் பாக்டீரியாவைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்க பல் மருத்துவ சங்கத்தின் (American Dental Association) படி கிராம்பு எண்ணெய் ஒரு பல் மயக்க மருந்தாக அமெரிக்க பல் மருத்துவ சங்கம் அங்கீகரித்துள்ளது.

எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது :

கிராம்பில் யூஜெனால் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஹைட்ரோ-ஆல்கஹாலிக் சேர்மங்கள் நிரைந்துள்ளன. இவை எலும்புகளில் தாதுக்களை அதிகரித்து எலும்புகளி வலிமைப் படுத்த உதவுகின்றன. பலவீனமான எலும்புகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் குறைபாடு உடையவர்கள் தொடர்ந்து சிறிதளவு கிராம்பை உட்கொள்வதால் பலன் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

கிராம்பில் உள்ள யூஜெனால் எனும் பொருள் பல நோய்களைத் தோற்றுவிக்கும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல் படுகிறது. கிராம்பு இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை குறைத்து வெள்ளை இரத்த அணுக்களை தூண்டுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடல் வலியைக் குறைக்கிறது:

கிராம்பில் உள்ள யூஜெனால் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது உடலில் வலி ஏற்பிகளைத் தூண்டுவதன் மூலம் வலியைக் குறைப்பதில் உதவுகிறது. கிராம்பு எண்ணெய் அல்லது கிராம்பு சாறு கீல்வாதம், வீக்கம் போன்ற வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

புற்றுநோய்த் தடுப்பு :

கிராம்பில் உள்ள யூஜெனால் சிறந்த ஆன்டி கார்சினோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் போன்ற புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது:

தினசரி உணவில் கிராம்பு சேர்த்துக்கொள்வது உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப் படுத்துகிறது. மேலும் உடல் வெப்ப நிலையை ஒழுங்கு படுத்துகிறது.

இரத்த சுத்திகரிப்பு :

கிராம்பில் நிறைந்துள்ள ஆக்சிஜனேற்றிகள் இரத்தத்தை சுத்திகரித்து, சருமத்திற்கு உள்ளிருந்து பளபளப்பை அளிக்கிறது.

இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது :

கிரம்பில் உள்ள யூஜெனோல் எனும் சேர்மம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று சில ஆரம்பகால ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளன. இருப்பினும், பெரும்பாலான ஆராய்ச்சிகள் விலங்குகளிலேயே நடத்தப் பட்டுள்ளன. மனிதர்களில் கிராம்பு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்குமா என்பது பத்தி போதுமான உறுதி செய்யப்பட்ட நம்பகமான தகவல்கள் இல்லை.

மனநிலையை அமைதிப் படுத்துகிறது :

கிராம்பு எண்ணெயை லேசானா சூடான வெந்நீரில் கலந்து தலை, கழுத்து மற்றும் முதுகில் தேய்த்தால் பதட்டம் நீக்கி மனதை அமைதிப் படுத்துவதில் உதவும்.

கிராம்பு தீமைகள் :

கிராம்பு சிறிதளவு உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, இருந்தாலும் தொடர்ந்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்.

இவை இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.

சிலருக்கு தலைச்சுற்றல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தலாம்.

கிராம்பில் உள்ள யூஜெனோல் எனும் சேர்மம் சில இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் வினைபுரிந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

அதிகப் படியான யுஜெனால் நச்சுத் தன்மையை ஏற்படுத்தலாம்.

பாரம்பரிய மருத்துவ முறையின் படி, கிராம்பு மசாலா வகைப் பொருள் ஆகும். இது மூக்கில் இரத்தப்போக்கு, வாய் புண்கள், வயிற்றில் எரிச்சல் மற்றும் தொண்டை வெடிப்புகளை ஏற்படுத்தலாம்.

Updated On: 19 Jan 2024 2:48 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...