/* */

என்னது.. 'கரி சோப்பு' முகத்துக்கு அழகு தருமா..? எப்படீங்க..? தெரிஞ்சுக்கங்க..!

Charcoal Uses in Tamil -என்னது.. 'கரி சோப்பு' முகத்துக்கு அழகு தருமா..? எப்படீங்க..? தெரிஞ்சுக்கங்க..!

HIGHLIGHTS

என்னது.. கரி சோப்பு முகத்துக்கு அழகு தருமா..? எப்படீங்க..? தெரிஞ்சுக்கங்க..!
X

charcoal soap benefits in tamil-கரி சோப்புக்கட்டிகள்.(கோப்பு படம்)

Charcoal Uses in Tamil -Charcoal சோப்புன்னா கரி சோப்புன்னு அர்த்தம். அதன் பயன்கள் என்ன? அதை எப்படி தயாரிக்கலாம்னு பார்ப்போம் வாங்க.

முகத்தில் கருமை நிறத்தை நீக்கும் அழகு தரும் சர்கோல் சோப் (Charcoal soap)என்றால் என்ன?

Charcoal என்றால் வேற ஒன்றும் இல்லீங்க. அது கரி தான். அட ஆமாங்க. முன்னெல்லாம்..கரிக்கொட்டையில்தான் ((Charcoal ) பல்விளக்குவோம். இப்போ பற்பசையிலும் இந்த Charcoal வந்துடிச்சி. முன்ன நாம செய்தப்ப கிண்டலாக பார்த்த உலகம் இப்போ நாகரிகமா பார்க்குது. நம்ம முன்னோர்கள் சாதாரண ஆளுங்க இல்லை. விஞ்ஞானிங்கன்னு இப்பத் தெரியுதா..?

அதே கரி தான் இப்போ சோப்புக்கும் வருது.

முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்காக பெண்கள் இப்போதெல்லாம் பல்வேறு வகையான பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் அழகு சோப்புகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அந்த சோப்புகள் எல்லாம் ஏதாவது பல ரசாயனங்கள் கலந்த சோப்பாக இருக்கும்.

ஆனால், இந்த கரி சோப்பு வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரித்துக்கொள்ளும் குளியல் சோப்பு. இதை பவுடராகவும் வைத்துக்கொள்ளலாம்.

இந்த சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதால், முகத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது? அதை எப்படி நாம் தயாரிக்கலாம் என்று பார்ப்போம் வாங்க.


கரி சோப் என்றால் என்ன?

  • இந்த சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் அழகு பெறும். முகம் மென்மையாகும்.
  • கரித்தூள் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை உறிஞ்சுவதால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் முகப்பருக்கள் வராமல் தடுக்கவும், முகத்தில் இருக்கும் பருக்களை சரி செய்யவும் உதவுகிறது.
  • சருமம் மற்றும் முகத்தில் இருக்கும் பள்ளங்களை சரி செய்யவும், கோடைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் சரும பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகிறது.
  • கரும்புள்ளிகள், சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்களை சரி செய்கிறது.
  • சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும், சருமத்தில் வேறு எந்தவித பாதிப்புகளும் தடுத்து பாதுகாக்கிறது. இந்த கரி சோப்பு ஒரு சரும பாதுகாவலனாக இருந்து பாதுகாக்கிறது.
  • சருமத்திற்கு தினமும் இந்த சோப்பை குறைந்தது இரண்டு முறை பயன்படுத்தவேண்டும். இது இயற்கையான அழகு சாதனப் பொருட்களில் ஒன்று. இந்த சோப்பு முகத்தில் PH அளவை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

சோப்பு தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்

கிளிசரின் கட்டிகள் -தேவையான அளவு

வைட்டமின் ஈ மாத்திரை – 1

கரித்தூள் – 1டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

கரி சோப்பு செய்முறை

கிளிசரின் சோப்புக்கட்டிகளை எடுத்துக்கொண்டு அதை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட கிளிசரின் சோப்புக்கட்டிகளை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவேண்டும். பின்னர் கிளிசரின் போட்ட பாத்திரத்தை தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தின் மீது வைக்கவேண்டும். தண்ணீர் சூடாகி நீராவி கிளிசரின் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் அடியில் பட்டு கிளிசரின் கட்டிகள் உருகத்தொடங்கும். கட்டிகளை உருக இதற்கு பெயர் டபுள் பாய்லிங் (Double Boiling) .

கிளிசரின் கட்டிகள் முழுவதும் உருகிய பின்னர் சிறிதளவு கரித்தூள் சேர்க்கவும். அதன் பிறகு வைட்டமின் ஈ மாத்திரையைப்போட்டு நன்றாக கிளறி விடவேண்டும். நன்றாக எல்லாம் கலந்தவுடன் நமக்குத் தேவையான அச்சில் ஊற்றி சோப்புக்கு ஒரு வடிவம் கொடுக்கலாம். விருப்பம் இருந்தால் நல்ல வாசனை வீச ஏதாவது இயற்கையான வாசனைப்பொருட்கள் பயன்படுத்தலாம்.

இப்போ சோப்பு ரெடி. ஓகே! பயன்படுத்துங்க..பலன்பெறுங்க..! கரி சோப்பை பல முன்னணி நிறுவனங்களும் தயாரித்து விற்பனை செய்கின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 March 2024 6:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்