'அஸ்வகந்தா'ன்னா குதிரை பலமாம்..! என்னன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

ashwagandha powder benefits in tamil-அஸ்வகந்தா என்பது உடல் ஆரோக்கியம் பேணுவதில் பிரதான மூலிகை மருந்தாக பயன்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ashwagandha powder benefits in tamil
X

ashwagandha powder benefits in tamil-அஸ்வகந்தா (கோப்பு படம்)

ashwagandha powder benefits in tamil-அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகை செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. 'அஸ்வம்' என்றால் வடமொழியில் குதிரை என்பாது பொருளாகும். 'கந்தம்' என்றால் கிழங்கு என்ற பொருளைக் குறிக்கிறது.

ஆகவே, குதிரை பலத்தை அஸ்வகந்தா வழங்குகிறது என்பதால், இந்தப் பெயரை இது கொண்டுள்ளது. இன்னொரு வகையில் இதன் இலை குதிரை வாசம் அடிப்பதால் அஸ்வகந்தா என்ற பெயர் வந்ததாக வடமொழியில் கூறுகிறார்கள்.

கட்டிகளின் மீது இந்த அஸ்வகந்தா இலையை அரைத்து பூசினால் கட்டியானது அமுங்கிவிடும். இதனாலேயே காரணமாக தமிழில் இதனை 'அமுக்கிரா' என்று அழைக்கிறார்கள். அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல பெயர்கள் உண்டு.

இந்த மூலிகையை குறைந்த அளவில் நெடுநாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், நம் உடல் நலத்திலும், மன நலத்திலும் நல்ல முன்னேற்றத்தை காணலாம். அஸ்வகந்தாவில் கிடைக்கும் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகளை பார்ப்போம்.

தூக்கம் இன்மை

அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனச் சோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பண்புகள் மனச்சோர்வை குறைக்கிறது. இதனால் நம் மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான உறக்கத்தை தருகிறது.

நீரிழிவு நோய்

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு. இந்த அஸ்வகந்தாவை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த அளவு உட்கொள்ள வேண்டும், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் எந்த அளவு உட்கொள்ள வேண்டும் என்பதனை மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

மூட்டு பிரச்னை

ashwagandha powder benefits in tamil-30 வயதைத் தாண்டியவர்களுக்கு மூட்டு நோய் பிரச்னை வந்துவிடுகிறது. மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் கீழ்வாதம், குடல் மற்றும் உடலின் செரிமான அமைப்பிற்கு நம் உடலில் உள்ள பீட்டா சத்தின் ஏற்றத்தாழ்வு மூலம் ஏற்படுகிறது. இந்த அஸ்வகந்தா விற்கு பீட்டா சத்தினை அதிகரிக்கும் சக்தி உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி இந்த அஸ்வகந்தாவில் "மைடேக் காளான் சாறு"(இது ஒருவகை ஆசியாவில் பயன்படுத்தப்படும் சமையல் காளான்) உடன் சேர்த்து பயன்படுத்தினால் நமக்கு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அஸ்வகந்தாவை தேநீருடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம் சரியாகும்.

ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தாவை இயற்கையாக காயங்களை குணப்படுத்த பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்தானது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க, நீரிழிவு பாதித்த விலங்குகளின் மீது இந்தியாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. விலங்குகளுக்கு அஸ்வகந்தாவை தோலின் மீது பயன்படுத்துவதை விட வாய்வழியாக உட்கொள்ள கொடுத்த போது காயங்கள் வேகமாக குணமடைவது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் மனிதர்கள் மீது இதுவரை ஆராய்ச்சி எதுவும் நடத்தப்படவில்லை. இதனை மனிதர்கள் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. தைராய்டு நம் உடலில் சுரக்கும் T4 ஹார்மோன் சுரப்பது குறைவாக உள்ளதால் தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஹார்மோனை அஸ்வகந்தா மருந்து அதிகரிக்கிறது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தைராய்டுக்கான நிரந்தர தீர்வினை கண்டறிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றது.

பெண்களுக்கு ஏற்படும் வெண் கழிவு

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை அஸ்வகந்தாவின் மூலம் குணப்படுத்த முடியும்.

இளமையை பராமரிக்க

இளமையான தோற்றம் பெற அரை ஸ்பூன் அஸ்வகந்தா உடன் நெல்லிக்காய் சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், உங்கள் சருமம் சுருக்கம் விழாமல் இளமையாக பராமரிக்கப்பட்டு நீண்டகாலம் அழகுடன் இருக்கலாம்.

பாலியல் சக்தி அதிகரிக்க ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா லேகியத்தை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பாலியல் சக்தி அதிகரிக்கும்.

அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியுடன், தேன் கற்கண்டு, மற்றும் நெய் கலந்து, உணவு அருந்தியபின் சாப்பிட்டு வந்தால், உடலுக்கும், நரம்புக்கும் புத்துணர்ச்சி ஏற்படும். இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடிக்க வேண்டும். பொதுவாக இந்த அஸ்வகந்தா தூளினை ஒரு தேநீர் வடிவிலோ அல்லது பால், நெய், தேன் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ஆனால் இதனை நாம் உட்கொள்வதற்கு முன்பு ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

அஸ்வகந்தாவின் பக்க விளைவுகளை பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.

1. மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவில் அஸ்வகந்தாவை உட்கொள்ளவேண்டும். அப்போது எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

2. கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிடக்கூடாது.

3. அஸ்வகந்தா தைராய்டை ஊக்குவிக்கும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. ஆனால் அதனை நீண்ட காலத்திற்கு அதிகமாக உட்கொள்ளும் போது சில பேருக்கு தைராய்டு பிரச்சினைகள் ஏற்படும்.

4. ரத்தக்கொதிப்பு, வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த கூடாது.

5. இயற்கையாகவே சிலருக்கு உடல் சூடான தன்மையைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

6. சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களாக இருந்தாலும் அல்லது சில நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்யப் போவதாக இருந்தாலும் இந்த மூலிகையை பயன்படுத்தக்கூடாது. அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

7. இந்த அஸ்வகந்தா மூலிகையானது லேசான மயக்கம் கொடுக்கும் தன்மை கொண்டது. ஆகவே தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது. அது அதிகப்படியான தூக்கத்தை தந்துவிடும்.

ashwagandha powder benefits in tamil-இந்த அஸ்வகந்தாவின் நன்மைகளை அறிந்து சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால் அதற்கான பலன் நிச்சயம் உண்டு.

Updated On: 23 Aug 2022 11:36 AM GMT

Related News