/* */

உயிரையும் கொடுப்பான் உண்மையான நண்பன்.... உங்களுக்கு தெரியுமா?......படிங்க...

Best Friend Friendship Kavithai in Tamil-நட்பு என்பது ஆத்மார்த்தமானது. உண்மையான நண்பன் உயிரையும் கொடுப்பான்..அதுவே நட்பின் வலிமை

HIGHLIGHTS

உயிரையும் கொடுப்பான் உண்மையான  நண்பன்.... உங்களுக்கு தெரியுமா?......படிங்க...
X

நண்பர்கள் தினத்தில் கட்டப்படும் கயிறுகளுடன் உறுதியான பிடியில்  (பைல்படம்)

Best Friend Friendship Kavithai in Tamil

Best Friend Friendship Kavithai in Tamil

வாழ்க்கையில் நாம்அன்றாடம் பழகுகிறோம்... எல்லோரிடமும் எல்லோரும் எல்லா விஷயங்களையும் உண்மையாக சொல்லிவிடமுடியாது. அதில் பல சிக்கல்கள் உண்டு. அந்த வகையில் நம்பிக்கைக்கு உரியவர்,ரகசியம் காப்பவர், என நாம் நண்பர்களைப் பிரித்துவைத்திருப்போம் .அதிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து நம் சொந்தப்பிரச்னைகள், சோகப் பிரச்னைகள், என பலவிஷயங்களை அவர்களிடம் நாம் மனம் திறந்து பகிர்ந்து கொள்ளலாம் அதில் தப்பில்லை. அந்த ரகசியமானது கசிய வாய்ப்பில்லை.

சரிங்க...அதென்ன உண்மையான நண்பன்னு கேட்கறீங்களா? . நட்பில் பல வகைகள் இருக்குதுங்க... பழகிப்பார்த்திருந்தால் உங்களுக்கு அனுபவம் இருக்கும். அதாவது நம்மிடம் தேவை என்றால் மட்டுமே வந்து ஒட்டும் நட்பு ஒரு வகை. தேவை என்பது போக நம்மிடம் காசு பசை அதிகம்இருந்தால் அதுவரை நம்மிடமே இருக்கும் நட்பு இரண்டாம் வகை. அவ்வப்போது சந்தித்து ஆவலாக பேசிக்கொண்டு பிரிவது ஒரு வகை. தினந்தோறும் சந்தித்து பின்னர் பேசி பிரிவது ஒரு வகை, பேசி பிரிந்தாலும் போனிலும் தொடர்பு கொண்டு என்ன பிரச்னை என கேட்டு அவ்வப்போது நமக்கு அந்தரங்க ஆலோசகராகவும்இருந்துகொண்டு பிரச்னை என்றால் உடனே ஓடோடி வரும் நட்பு ஒரு வகை.. இந்த கடைசியில் சொன்னோம் பார்த்தீர்களா..இந்த நட்புதாங்க உயிரையும் கொடுக்கும் பண்பு கொண்ட நட்பு .மற்றது எல்லாம் அவ்வப்போது வந்து போகும் நட்புங்க...

Best Friend Friendship Kavithai in Tamil

Best Friend Friendship Kavithai in Tamil

ஆனால் இக்கால நட்பு போலி நட்புங்க.. காரியம் ஆனவுடன் கட்சி மாறிவிடுகின்றனர் ஒரு சிலர். இதில் பல சுயநலம் உள்ளது. தேவைக்கு பழகினால் போல் அசிங்கமாகிவிடுகிறது இந்த நட்பு.

உறவுகள் என்பது ஆத்மார்த்தமானது பாசத்தினால் வரும் நட்பு

ஆனால் ஒரு சில உறவுகள் பணத்திற்காகவும் வரும் நட்பு

விண்மீன்களினால் நிலவு அழகு பெறுவதைப்போல் மனிதர்களாகிய நமக்கு நண்பர்கள் தான் அழகு

இன்முகம் காட்டினால் போதும் நட்புகள் ஓடோடி வரும்

காதலித்தால் நேசிக்க வைக்கும்...கவிதை வாசிக்க வைக்கும். நல்ல நட்புகளே நம்மை மகிழ்ச்சியைத் தரும்

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே

நண்பன்... எதிர்பார்த்தால் அந்த நட்பு துாய நட்பல்ல...

Best Friend Friendship Kavithai in Tamil

Best Friend Friendship Kavithai in Tamil

உண்மையான நட்பு ஆயிரம் உறவுகளுக்கு மேலானது

நட்புகளில் ஊடல்,கூடல் என்பது உண்டு. .. அது தற்காலிகம்

பிரிதல் இல்லாத நட்புக்களே சிறந்த நட்பு...என்றென்றும்..

நாம் சாதி, இனம், மதத்தால் வேறுபட்டாலும் நம் நட்பு என்றும் நிலையானதே... யாராலும் பிரிக்க முடியாதது....

என் முன்னேற்றத்திலும் உன் பங்கு இருக்கும் தோழா...

அதேபோல் என் தோல்வியிலும் ஆறுதல் சொல்பவனே நல்ல நண்பன்...

பெற்றோர்கள் அனைவருமே பார்த்துப்பா... ஜாக்கிரதை என்று மட்டுமே சொல்வார்கள்...

மச்சான் உன்னால முடியாதது ஒண்ணுமே இல்லை... கவலைப்படாதே... ஜெயிச்சிடலாம் என்பவனே நட்பு...

Best Friend Friendship Kavithai in Tamil

Best Friend Friendship Kavithai in Tamil

வெற்றி தோல்விகளில் சரி சம பங்கெடுப்பவன் நண்பன்

இன்ப, துன்பங்களிலும் பங்கெடுத்துக் கொள்வான்...

மெய், பொய்,.என பேதமில்லாமல் உடனிருப்பான்..

சிரிப்புக்கும், கண்ணீருக்கும் உடனிருப்பவன்தாங்க நண்பன்...

என் தாயின் அரவணைப்பு போலிருந்தது உன் தோழமை நட்பு

தந்தையின் பாசத்தைப்போல் உன்னுடைய உறுதியான நட்பு

உண்மையான நட்பினை எந்த அளவுகோலாலும் அளக்க முடியாது... அதற்கு எல்லையும், பிரிவுகளும்எப்போதும் இல்லை...நண்பா... உனக்கு நான்.. எனக்கு நீ....

.நட்பு என்பது வெறும் கடற்கரை மணலில் எழுதுபவை அல்ல... இதயத்தில் பச்சை குத்துவது போல நட்பு....

கருவறையில் நானிருந்த போது எனக்கு நினைவுகள் இல்லை.... ஆனால் உன் அன்பு பிடியில் உள்ள போது

எதிர்பார்க்கிறேன்...உ ன்னை... உண்மையான நட்பை...

நண்பா....நீ அருகில் இருந்தால் போதும்...எனக்கு மெக பவர்... அதுவே நீ தொலைவிலிருந்தால் ....பியூஸ்பவர்...

கண்ணீர் காண கண்களும் கண்ணீர் விட்டு கலங்குகிறது உன்னை பிரிய நினைக்கும் போது நண்பா.

சிப்பிக்குள் பிறக்குது முத்து சின்ன சிரிப்பில் தான் பிறக்குது நட்பு.

Best Friend Friendship Kavithai in Tamil

Best Friend Friendship Kavithai in Tamil

நம்மை அறிந்து நன்மைகள் செய்வதை விட நம்மை அறியாமல் நன்மைகள் செய்வதே நட்பு.

கவலை கொள்ளாதே என்று சொல்வதைவிட கவலையும் நம்மை சிரிக்க வைப்பது நட்பு.

அறியாமையில் இருக்கும் போது நமக்கு அறிவை வளர்ப்பது தான் நட்பு.

பலவீனமாக இருக்கும்போது நமக்கு பலமாக எப்பொழுதும் துணையாக நிற்பது நம் நட்பு.

கைகொடுத்து பேசுவது மட்டுமல்ல நம்பிக்கை கொடுத்து தன்னம்பிக்கை வளர்ப்பது நம் நட்பு.

வாழ்க்கையில் பாதியில் வாழ்ந்தாலும் வாழ்வின் கடைசி வரை கூட வரும் நிழல் ஆக இருப்பதும் நட்பு தான்.

நான் என்று சொல்லிடும் இன்னொரு உடல் அவன் ஆடைகட்டி கூடவரும் இன்னொரு நிழலவன்.

நேரம் காலம் பார்க்காமல் உதவி செய்பவர்கள் நண்பர்கள் மட்டும் தான்.

ஆயிரம் உறவுகளை விட ஒரு நட்பு போதுமானது நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் சந்தோஷத்திற்கும்.

நண்பனின் குடும்பத்திற்கும் உதவி செய்பவர்கள் தான் நண்பர்கள் தான்.

நண்பர்களுக்கு இடையில் அன்பு மட்டுமே அதிகமாக இருக்கும்.

உயிருக்கு போராடும் பல உயிர்களை காப்பாற்றுபவர்கள் நண்பர்கள்தான் அதிலும் ஒரு நட்பு இருக்கிறது.

நண்பர்களின் அன்பு என்பது ஒளிவு மறைவு இல்லாததே.

தனக்கு கிடைத்த உணவை கூட பகிர்ந்து உன் உண்பவர்கள் இடையில் இருக்கிறது அழகான நட்பு.

காமம் தோற்றிக்கொள்ள அருமையான காதல் அவன் வார்த்தை சண்டை மட்டும் போடும் வலிமையான எதிரி அவன்.

என் சொல்லை அப்படியே கேட்டு செய்யும் மடையன் அவன் ....என் வாழ்வை வெளியிலிருந்து இயக்குகின்ற மதியும் அவன்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 March 2024 9:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்