/* */

சுதந்திரத் திருநாளில் பாரதத்தின் பெருமையை போற்றுவோம்.....

Independence Day Quotes Tamil-நம் நாட்டின் சுதந்திரமானது 1947ம்ஆண்டு ஆகஸ்ட் 15 ந்தேதி கிடைத்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தினை நாடுமுழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறோம்...

HIGHLIGHTS

Independence Day Quotes Tamil
X

Independence Day Quotes Tamil

Independence Day Quotes Tamil

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும் இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்

உலகின் வேறெந்த நாட்டையும் விட மேலான எனது நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டத்தையும், மகிழ்ச்சியையும், அன்பையும் காண சூரிய தேவன் இங்குவரட்டும்! - பகத் சிங்

என் தாய்த்திரு நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! ஜெய்ஹிந்த்

இந்திய வானில் விரிந்த சுதந்திரச் சிறகுகள் பல்லாயிரம் தியாக வீரர்களால் சாத்தியமாயிற்று! வேற்றுமை மலர்களால் ஆக்கப்பட்ட, ஒற்றுமை மாலையை சூட்டி மகிழ்ந்தோம்! பாரத அன்னைக்கு வண்ணம் மாறாமல் வாசம், பிறழாமல் வணங்கி காப்போம்! அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !

உலகெங்கும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.

ஒன்றிணைவோம்! நம் புகழ்பெற்ற தேசத்தை போற்றுவோம்! இந்தியராக பெருமை கொள்வோம்! சுதந்திரதின வாழ்த்துகள்!

உற்ற நட்பை கற்பென கொள்வோம்! கற்ற கல்வியை கண் எனப் போற்றுவோம்! பெற்ற சுதந்திரத்தை உயிர் எனக் காப்போம்.

எனதருமை இந்தியர்களே! எனது இதயம் நிறைந்த இந்திய சுதந்திர தின வாழ்த்துகள்!

பாரதத்தில் பிறந்து பாரதத்தில் வாழ்பவர்களுக்கு அல்ல எவருக்குள் பாரதம் வாழ்கிறதோ அவர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள் பல லட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திர தினம்! விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவு கூர்வோம்!

உழைத்து வாழ்வோம்! பகிர்ந்து உண்போம்! மனிதம் போற்றுவோம்! மகாத்மாவின் மாண்பு காப்போம்! சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்த பெருந்தொற்றிலிருந்து நம்மை விடுவிக்க, இன்னொரு சுதந்திர போரை நடத்தும் மருத்துவர் செவிலியர்- தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களை இந்நாளில் போற்றுவோம்

சுதந்திரத்திற்காகப் போராடும் லட்சியவாதிகள் அழியலாம்! சுதந்திர வேட்கை அழியவே அழியாது! - சுபாஷ் சந்திரபோஸ்.

எங்கள் கனவு சுதந்திரமே! அதை அடைய போராடுவோம்! நாங்கள் மரித்தாலும், எங்கள் சந்ததிகளும் அதை அடையும் வரை போராடுவதை நாங்கள் மகிழ்ச்சியோடு பார்த்திருப்போம்! -

நீ சுவாசிக்க நேசிக்க வாசிக்கஉனக்கென ஒரு நாடு!

விடுதலை கொண்டாடு!

சுதந்திர வேள்வித் தீயில் ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில் குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில் பிறந்தது பாரத கொடி

அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி!

அமைதி ததும்பும், அன்பு அணைக்கும்அறிவு அதிகமும், ஆனந்தம் பொங்கும்ஆச்சரியம் நிலவும், ஆற்றல் விருந்தும்ஆன்மிகம் நிறைந்தும், உள்ள உள் மடியில்எண்ணை தவழ அனுமதித்ததற்கு….

பல வண்ணங்கள், வடிவங்கள் உணர்வுகள், மொழிகள்

ஆகியவை உள்ளனஎனினும், அனைத்து இந்தியர்கள் ஒன்று!

நடத்திய போராட்டங்கள் பசிக்கவே இல்லைவாங்கிய தடி அடிகள் வலிக்கவே இல்லைசிந்திய ரத்தத்தை உணரவே இல்லை

இழந்த வீரர்களை மறக்கவும் இல்லைசுதந்திரம் கிடைத்த இந்த தருணத்தில்

வாய்மையையும், அகிம்சையையும், அரவளியையும் போற்றும் நம் தேசம் இது!

ஒரே நாடு… ஒரே பார்வை…ஒரே அடையாளம்… ஒரே கொடி…நமது இந்தியா…

எந்த துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும்.

சாதனையாளரும் இந்த வார்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்:

"வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிக பெரிய அனுகூலதிர்கான விதை ஒளிந்திருக்கிறது"

காற்றில் புதிய வாசனை நுகர்ந்தேன் என் தாய் மண் சற்று நனைந்ததை உணர்ந்தேன் விடுதலை மலர்கள் அரும்புவதை அறிந்தேன்சுதந்திர மோகம் நம்மை சூழ்ந்ததை கண்டேன்புன்னகை மலையில் நானும் நனைந்தேன்

லட்சக்கணக்கான மூச்சு நின்று போன பின் தான் சுவாசிக்கிறோம்…

இன்று இந்த சுதந்திர காற்றை….பேணிக்காப்போம்நாம் பெற்ற சுதந்திரத்தை….

ஏராளமான உயிர் மூச்சுகளை தியாகம் செய்துவாங்கப்பட்ட ஒரு ஜீவா மூச்சுகாற்றே நம் சுதந்திரம்!

பாரி விண்ணில் பறந்து ஆடும் கொடியின் அழகை பாரத நாட்டினிலே போற்றி மகிழ்ந்திடசுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

மனதில் விடுதலை வார்த்தைகளில் நம்பிக்கைஉள்ளத்தில் பெருமை போங்க முழங்குவோம்வந்தே மாதரம்!

மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பெற்றதல்ல எங்கள் சுதந்திரம்:

உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும் கிடைத்தது எங்கள் சுதந்திரம்!

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்நற்றவ வானினும் நாணி சிறந்தனவே!

மனதில் விடுதலை வார்த்தைகளில் நம்பிக்கைஉள்ளத்தில் பெருமைபொங்கமுழங்குவோம்!வந்தே மாதரம்!

உதிரங்களை உரமாக்கிஉதித்த சுதந்திரம் – நம் சுதந்திரம்!

புது நாளில் உதயமாகும் கீதம் கேட்டு தென்றலில்வீரமாய் பறக்குது தேசியக் கொடி

மனதில் விடுதலை வார்த்தைகளில் நம்பிக்கை உள்ளத்தில் பெருமை வோங்க முழங்குவோம், வந்தே மாதரம்!

காந்தியடிகள் சொன்ன மந்திரம் கருணையுள்ளஅகிம்சை மந்திரம்

தேசமெல்லாம் போற்றும் மந்திரம்தேச மக்களையே இயக்கும் எந்திரம்எத்தனை பேர் இரத்தம் சிந்தி வந்த சுதந்திரம்எத்தனையோ தியாகம் செய்து பெற்ற சுதந்திரம்ஏழைகளும் கோழைகளாய் ஆகிடாமலே என்றும்ஏற்றம் பெற எல்லோருக்கும் கிடைத்த சுதந்திரம்!

கயிறுகள் அறுந்து நிறங்கள் திறந்து மலர்கள் சிந்தி அலை போல்

அசைந்து கம்பீரமாய் பறக்கும்நம் தேசிய கொடி போல்

இன்றும் என்றும் நம் வாழ்வில் புன்னகை சிறகடிக்கட்டும்!

வீண் போகவில்லை போராட்டங்கள்சிந்திய ரத்தமும் போர்க்கள புழுதியும்எடுத்த திலகமாய் இட்டுக்கொள்ள பெறப்பட்டது

சுதந்திரம்வென்றது இந்திய தேசிய ஒற்றுமை

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நம் நாட்டுப்பற்றுக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான்

சுதந்திரம்….பேணிக் காப்போம்!!!

பட்டொளி வீசும் பாரதக் கொடி ஏறட்டும்பாரத மாந்தர்கள் மகிழட்டும்நெஞ்சினில் இனிப்பு திகட்டட்டும்சித்திய தர்மம் நிலைக்கட்டும்சமாதானம் நிலவட்டும்பாரத தேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்

மனதில் விடுதலை வார்த்தைகளில் நம்பிக்கைஉள்ளத்தில் பெருமை பொங்கமுழங்குவோம், வந்தே மாதரம்!

சாஸ்திரமும் இல்லைசாதி மத வேறுபாடும் இல்லை

எந்த எல்லைக்கோடும் இல்லைஒன்றாக இந்தியனாய் கொண்டாட ஒரு நாள்

பெற்றது சுதந்திரமா அல்லது தொலைத்தது நம் உரிமையா?

எதுவாக இருந்தாலும், பெற்றதை பேணிக் காப்போம்

ஆகஸ்ட் 15 மட்டுமா நாம் நினைவில் கொள்ள வேண்டிய நாள்?

இல்லை நமக்காக இரத்தம் சிந்தி நம்மை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த வீரர்களை போற்ற, நமக்கு ஒவ்வொரு நாளும்

சுதந்திர தினமே!

ஏன் இன்று நமக்கு மிட்டாய் கொடுகின்றார்கள் என்ற கேள்விகளோடுமார்பில் தேசியக் கொடியை குத்திக்கொண்டு நிற்கும் நம் வரும்காலநம்பிக்கைகளுக்கு புரிய வைப்போம்

சுதந்திர தினம் என்றால் என்னவென்று!

எவ்வளவு பொன்னும் பொருளும் கொடுத்தாலும்

என் தாய் நாட்டிற்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை

வாழ்க என் தாய் நாடு!

. என் தாயின் கருவறையில் இருந்து சுதந்திரம் அடைந்த மறு நொடியில் என் மண்ணின் சுதந்திர காற்றை சுவசிகின்றேன்

இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த என் மண்ணின் தலைவர்களுக்கு என் நன்றி!சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

தம் உதிரம் சிந்த இம்மண்ணிற்கு சுதந்திரம் மட்டும் வாங்கி தரவில்லைஇம்மண்ணில் சுதந்திரத்தை விதைத்து சென்ற என் தலைவர்களின் பெருமையை நாம் தலை நிமிர்ந்து போற்றுவோம்

ஜெய்ஹிந்த்!

மாயத்திலும், துளி நிமிடத்திலும்அடைந்ததல்ல எங்கள் சுதந்திரம்

காயத்திலும், கடல் போரிலும்கண்டது எங்கள் சுதந்திரம்

என் அன்னை சுவாசித்தாள் சுதந்திரக் காற்றை – ஆதலால்

கருவறையில் சுவாசித்துக் கொண்டேன்நானும் சுதந்திரக் காற்றை!

தேசியக் கொடியில் சில நிறமுண்டுநிறத்தினில் சில காரணம் உண்டு

காரணத்தில் சில குருதி உண்டுகுருதியில் ஒரு வரலாறு உண்டு!

வீதியெங்கும் சுதந்திரக் காற்றுவானெங்கும் சுதந்திர மேகங்கள்

இதழில் சுதந்திர வார்த்தைகள்எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம்!

நிசப்தம் வேண்டாம்சுதந்திர வீரர்களின் கல்லறை முன்னே

உரக்கச் சொல்லலாம்!வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

அடைக்கலம் எங்கும் இல்லைஅடிமைகளால் எங்கும் இல்லை

அடிமைகளால் வாழ்ந்தவர்கள்அறுத்துவிட்ட சங்கிலியால்!

மறைமுக சிறகுகள் கொண்டுகம்பீரமாய் பறக்றது தேசிய கொடி

சிறகு படைத்த பிரம்மாக்கள்சுதந்திர போராட்ட வீரர்கள்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 April 2024 9:22 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!