/* */

சந்திரபாபு நாயுடுவை கண்காணிக்கும் மைக்ரோ சிப் மோதிரம்

சந்திரபாபு நாயுடு வெளியே எங்கு சென்றாலும் மோதிரங்கள் அல்லது கடிகாரங்கள் கூட அணியமாட்டார்.

HIGHLIGHTS

சந்திரபாபு நாயுடுவை கண்காணிக்கும் மைக்ரோ சிப் மோதிரம்
X

அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் நடைபெற்ற தெலுங்கு தேச கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிந்திருந்தார். இதனை சில ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகத்தில் சந்திரபாபு நாயுடு அடுத்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஜாதகம் பார்த்து மோதிரம் தேர்ந்தெடுக்கப்பட்டு அணிந்திருப்பதாக செய்திகள் பரவியது.

தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முட நம்பிக்கைகள் மற்றும் அதை சார்ந்தவைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால் மதனப்பள்ளி கூட்டத்தில் வந்தவர்கள் சந்திரபாபு அணிந்திருந்த மோதிரம் குறித்தே விவாதிக்க தொடங்கினர். இந்த மோதிரம் குறித்த சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலானது. இதனை சந்திரபாபு நாயுடுவிற்கு கட்சி நிர்வாகிகள் கொண்டு சென்ற நிலையில் மோரத்தின் ரகசியத்தை தெரிவித்தார்.


உண்மையில் அது மோதிரம் அல்ல எனது உடல் நிலையை கண்காணிக்கும் அனைவரும் அணியக்கூடிய ஃபிட்னஸ் மானிட்டர் இதன் மூலம் உடல் வெப்பநிலை, சர்க்கரை அளவு , ரத்த கொதிப்பு, எவ்வளவு நேரம் தூங்கினேன், இதய துடிப்பு என்பதை கண்காணிக்கு விதமாக மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட மோதிரம். இதன் மூலம் எனது உடல் நிலை குறித்து அவ்வப்போது கம்ப்யூட்டருக்கு செல்லும் .

அதனை வைத்து மறுநாள் காலையில் உடல்நிலை பராமரிப்பில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப அதனை மீண்டும் செய்யாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக மோதிரம் போட்டுள்ளேன். உடல் நலனில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். சமூகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தெலுங்கு தேச கட்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனக் கூறிய மோதிரத்தின் மீது எழுந்த வின் சர்ச்சைகள் மற்றும் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Updated On: 8 July 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்