/* */

இதய நோய்க்காக பயன்படும் ''ஸ்டென்ட்'' அத்தியாவசிய பட்டியலில் சேர்ப்பு:விலைகுறைய வாய்ப்பு

stent added to essential medical list by cent.govt இந்தியாவில் தற்போதைய நாகரிக வாழ்க்கை முறையில் இதய நோய் அதிகம் பேரைத்தாக்கி வருகிறது. இதனால் இதற்கு பயன்படும் கரோனரி ஸ்டென்ட் சாதனத்தினை மத்தியஅரசு அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்த்துள்ளது.

HIGHLIGHTS

இதய நோய்க்காக பயன்படும் ஸ்டென்ட் அத்தியாவசிய பட்டியலில் சேர்ப்பு:விலைகுறைய வாய்ப்பு
X

நீங்கள் கையில் காண்பதுதாங்க ஸ்டென்ட் என்று சொல்லக்கூடிய செயற்கை உலோக குழாய் (கோப்பு படம்)


stent added to essential medical list by cent.govt


முதல் படம் சிக்கலான இதய ரத்த குழாய் , ஸ்டென்ட் பொருத்தப்படும் விதம், ஸ்டென்ட் பொருத்திய பின் ரத்தக்குழாயின் படம் (கோப்பு படம்)

stent added to essential medical list by cent.govt

இந்தியாவில் அண்மைக்காலமாக இதயநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்து வருகிறது. மாறிவரும் உணவுப்பழக்கம், உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை, உடல்பருமன், மன உளைச்சல் என பல காரணிகளை இதற்காக சொல்லலாம்.

காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக ஆபீஸ் கிளம்புவது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை தற்கால வாழ்க்கை முறையானது பெரும் டென்ஷனாகவே பலருக்கு கழிகிறது.அதுவும் கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு செல்வோர்என்றால் சொல்லவே தேவையில்லை... காலை நேர பரபரப்பு சாப்பிட்டும் சாப்பிடாமலும் என்று இருக்கும். இதுவும் இதய நோய் வருவதற்கு ஒரு காரணம் என்றும் சொல்லலாம்.இதையெல்லாம் சரிக்கட்டிவிட்டு ஆபீசுக்கு சென்றால் அங்கு கம்ப்யூட்டர், சர்வர் கோளாறு என போராட்டமோ போராட்டமாக இருக்கும்.இதுபோல் தொடர் வாழ்க்கை முறை இருந்தால் நோய் வராமல் என்னங்க செய்யும்...

அதுவும்முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அல்லது 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே இருதய நோய் அதாவது ஹார்ட் அட்டாக் என்பதுஏற்படும். ஆனால் தற்காலத்தில் 19 வயதுள்ள நபர்களும்இதற்கு பலியாவது பெரும் வருத்தத்தினை அளிக்கிறது. இருதய நோயைப் பொறுத்தவரை வலி ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதித்துக்கொள்வது நலம். அதேபோல் கை வலி , தொடர் முதுகுவலி உள்ளிட்டவைகளும்இந்நோய்க்கு அறிகுறிகள் என டாக்டர்கள் சொல்கின்றனர். வழக்கத்துக்கு மாறாக இதுபோன்ற வலிகள் ஏற்பட்டால் உடனடியாக டாக்டரைச் சந்திப்பது உங்கள் ஆரோக்யத்துக்கு நல்லது.



இதய ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பைப் போக்க பயன்படும் ஸ்டென்ட் பொருத்தும் விதத்தினை விளக்கும் படம் (கோப்பு படம்)

stent added to essential medical list by cent.govt

மனிதர்களுக்கு இதுபோல் இதயத்தில் பிரச்னைகள் அதிகரிப்பதற்கு நாம் மேற்சொன்ன காரணிகள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. - இதய ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்காக தற்காலத்தில் டாக்டர்கள் ஓபன் ஆர்ட்சர்ஜரியைக் குறைத்துக்கொண்டு கரோனரி ஸ்டென்ட் என்ற சாதனைத்தினை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதற்காக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஆஞ்சியோ செய்கின்றனர். அதன்மூலம் இதய ரத்தக்குழாய்களில் உள்ள பிரச்னைகளைத் துல்லியமாக அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஸ்டன்ட்டைப் பொருத்துகின்றனர்.தற்போது இந்த ஸ்டென்டின் விலை சற்று அதிகம். ஆனால் மத்திய அரசு இந்த ஸ்டென்ட் சாதனத்தினை அத்யாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இதன் விலை இனி கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

அண்மையில் மத்திய அரசானது தேசிய அத்யாவசிய மருந்துகள் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ளது. புற்று நோய் மருந்துகள், தடுப்பூசிகள்,உட்பட புதியதாக 34 மருந்துகள் மற்றும் சாதனங்களை இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

stent added to essential medical list by cent.govt


இதய நாளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலைப் போக்க பயன்படும்ஸ்டென்ட் எவ்வாறு பொருத்தப்படுகிறது என்பதை விளக்கும் படம் (கோப்பு படம்)

stent added to essential medical list by cent.govt

மத்தியஅரசின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இதோடு தற்போது 384 மருந்துப்பொருட்கள் எண்ணிக்கையில் உள்ளது.அண்மைக்காலமாக நாடுமுழுவதும் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு கரோனரி ஸ்டென்ட் சாதனத்தினையும் மத்திய அரசானது அத்யாவசிய பட்டியலில் சோ்த்துள்ளது.

தேசிய மருந்துகள் நிலைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இது சேர்க்கப்பட்டுள்ளது. இதய ரத்தக்குழாய் அடைப்பைப் போக்கும் கரோனரி ஸ்டென்ட் விலையினை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளதால் ஸ்டென்ட்டின் விலை இனி கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

Updated On: 21 Nov 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...