/* */

ரயில் வருமானத்தில் பங்கு...! யார் இந்த சம்புரான்சிங்

வீட்டில் அமர்ந்து கொண்டே அந்த ரயிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை வாங்கிக்கொள்கிறார் சம்புரான் சிங்.

HIGHLIGHTS

ரயில் வருமானத்தில் பங்கு...! யார் இந்த சம்புரான்சிங்
X

அரசர்களும் பேரரசர்களும் யானைகள், குதிரைகள், பல்லக்குகளை சொந்தமாக வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. காலம் மாறியதும், உலக கோடீஸ்வரர்கள் இத்தகைய காலத்திற்கு ஏற்ப வசதிகளை அனுபவிக்கத் தொடங்கினர். பலர் தங்களுக்கு சொந்தமாக விமானங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் யாருக்காவது சொந்தமாக ரயில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் இந்தியாவில் ரயில்வேதுறை இந்திய அரசின் கீழ் உள்ளது. இது ஒரு அரசாங்க சொத்து. ஆனால் லூதியானாவைச் சேர்ந்த சம்புரான் சிங் என்ற விவசாயி ஒரு ரயிலின் சொந்தக்காரராக இருக்கிறார். அவர் சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர். ரயில்வே துறையின் பெரிய தவறால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வீட்டில் அமர்ந்து கொண்டே அந்த ரயிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை வாங்கிக் கொள்கிறார் சம்புரான் சிங்.

சம்புரன் சிங் லூதியானாவின் கட்டானா கிராமத்தில் வசித்து வருகிறார். 2007ஆம் ஆண்டு லூதியானா- சண்டிகர் ரயில் பாதை அமைக்கும் போது விவசாயிகளின் நிலத்தை ரயில்வே துறை கையகப்படுத்தியது. அப்போது ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் என்ற மதிப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், அருகில் உள்ள கிராமத்தில் ஏக்கர் 71 லட்சம் ரூபாய் விலை போகும் பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் தான் சிக்கலே.

தனது நிலத்திற்கு குறைவான மதிப்பில் பணம் கொடுத்ததாக கூறி சம்பூரன் சிங், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழங்கிய முதல் உத்தரவில், இழப்பீட்டுத் தொகை 25 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தப்பட்டு, பின்னர் அதுவும் 1.47 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. முதல் மனு 2012ல் தாக்கல் செய்யப்பட்டது. 2015ஆம் ஆண்டுக்குள் வடக்கு ரயில்வேக்கு பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ரயில்வே வழங்கியது ரூ.42 லட்சம், ரூ.1.05 கோடி வழங்கப்படவில்லை. இவ்வளவு பெரிய தொகையை ரயில்வே துறையால் செலுத்த முடியவில்லை.

ரயில்வே நிர்வாகம் பணம் செலுத்தாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஜஸ்பால் வர்மா, லூதியானா நிலையத்திற்கு வரும் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். ரயில்வே நிர்வாகம் பணம் செலுத்தாத நிலையில் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகமும் ஜப்தி செய்யப்பட இருந்தது. வழக்கறிஞர்களுடன் சம்பூரன் சிங் ரயில் நிலையத்திற்கு சென்ற போது ரயில் சிறைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அந்த ரயிலின் உரிமையாளராகி விட்டார்.

இதன் மூலம் இந்தியாவில் ரயிலின் உரிமையாளராக இருக்கும் ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சம்பூரன் சிங் . ஆனால், நீதிமன்ற அதிகாரி மூலம் 5 நிமிடத்தில் ரயிலை விடுவித்தார்கள் ரயில்வே அதிகாரிகள். இந்த வழக்கும் இன்னும் நடைபெற்று வருவதாகவும், அந்த வகையில் ரயிலின் ஒரு பங்கு சம்பூரன் சிங்கிடம் வழங்கப்பட்டு வருவதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 1 Aug 2023 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்