/* */

2000ம் ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது ஏன்? இது சர்வதேச அரசியல்..!!

பல ஆயிரம் கோடிகளை பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகளை குறி வைத்தே 2000ம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

2000ம் ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது ஏன்? இது சர்வதேச அரசியல்..!!
X

டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,

வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த உலக அளவில் பல திட்டங்கள் தயாராகி வருகிறது. இதை வீழ்த்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் பெரிய அளவில் உதவும். இது குறித்து பா.ஜ., மருத்துவர் அணி பிரிவைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., (எம்.எம்., பல் ஆஸ்பத்திரி) கூறியதாவது:

மோடியை இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் எதிர்க்கிறார்களோ இல்லையோ... ஆனால் உலகம் முழுவதும் எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் கூட இருந்து குழிபறிக்க முயன்றது முதல், எதிரியை தூண்டிவிட்டு விதைத்தது வரை எதுவும் முளைக்கும் முன் கருகி விட்டது. ஆம். கொரோனா விஷயத்தில் மோடியை வீழ்த்திட நினைத்த மேற்கத்திய நாடுகள் தான் வீழ்ந்தது.


ஆனால் இந்தியா வீறுகொண்டு எழுந்தது. இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம், அரபுநாடுகளை திருப்பி விட அமெரிக்கா பகிரங்கமாக முயன்றது. ஆனால் அமெரிக்காவிற்கு பதிலாக அந்த நாடுகள் இந்தியாவிடம் நட்பு பாராட்டி அமெரிக்காவை பகைத்தன. உக்ரைன் போரின் மூலம் கடுமையான க்ரூட் ஆயில் மற்றும் விலைவாசி ஏற்றத்தில் இந்தியா பொருளாதாரத்தில் வீழும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் உண்மையில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே வீழ்ந்தன.

ரஷ்யாவை வீழ்த்தி விட்டால், இந்தியா பொட்டிப் பாம்பாக அடங்கி விடும் என்று நினைக்க, BRICS நாடுகள் ஒன்று சேர்ந்து Dedollatization மூலம் அமெரிக்காவினை பள்ளத்தில் தள்ளி விட்டன. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் டாலர் வீழ்ச்சியால் 200 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கிறது, சரிகிறது என்று சொன்னார். டாலரை சரி செய்ய முடியவில்லை. ட்ரம்பை சரி செய்ய ஆரம்பித்து விட்டனர்.


சீனாவுடன் போரைத் தூண்டிவிட்டு இந்தியாவை நசுக்க நினைத்த அமெரிக்கா, இன்று தைவானுக்காக சீனாவுடன் மோதி சீரழிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டது. அம்பானி மூலம் மோடியை அடக்கி விடலாம் என்று நினைக்க, அமெரிக்க வங்கிகள் அதன் ரிவர்ஸ் எஃபர்டில் வீழ்ந்தன. சீக்கியர்கள் மூலம் உலகெங்கும் போராட்டம் செய்து இந்தியாவை சிதைக்க நினைத்தது. ஆனால் அதுவும் பலிக்கவில்லை. வழக்கம்போல மத சுதந்திரம் இல்லை என்ற பிரசாரம் மூலம் தனது முன்னெடுப்பை நிகழ்த்த அமெரிக்கா நினைத்த போது, ஏற்கனவே பல நாடுகள் பாஜகவிடம் சாய்ந்து விட்டது என்ற செய்தி, அமெரிக்காவை ஆட்டி விட்டது.

இப்படி ஒவ்வொன்றாக வீழ்ந்த நிலையில், சமீபத்திய மீடியாக்கள் மூலம் ஏதாவது திட்டமிடுமுன், எல்லா விஷயங்களும் இந்திய அரசுக்கு தெரிந்து விடுகிறது. எப்படி என்று தேடினால், மீடியாக்கள் போர்வையில் RAW போன்ற உளவு அமைப்புகளின் ஏஜெண்டுகள் கூடாரத்தில் ஓட்டை மட்டுமல்ல பள்ளமே போட்டு விட்டதாக அமெரிக்காவின் CIA எச்சரித்துள்ளது. இப்போது அவர்களுக்கு யாரிடம் பேசுவது, யாரிடம் பேசக்ககூடாது என்ற மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது.


ஆனால் இப்போது ஒரு புதிய ஃபார்முலாவை முன்னெடுக்கிறார்கள். பாஜகவை தோற்கடிக்க முடியாது. ஆனால் 200 சீட்டுக்கள் என்ற அளவில் அதன் வெற்றியை குறைப்பதன் மூலம், மோடியை அடுத்த பிரதமர் ஆக்காமல், நிதின் கட்காரி போன்றவர்களை பிரதமராக்கலாம் என்ற வகையில், கட்சியில் உட்பூசலுக்கு வழி செய்கிறார்களாம். ஏன், யோகி வந்தாலும் கூட பரவாயில்லை, அவரின் போல்டான என்கவுண்டர் வகை மூவ்கள் எதிரிகளை தோற்றுவிக்க உதவும் என்ற நிலை உதவலாம் என்கிறார்களாம். அதாவது ஆதரவு தருவது, உசுப்பி விடுவது, பாதியில்.ஆட்சியை கவிழ்ப்பது என்பது வழக்கமான ஃபார்முலா.

அதற்கு பாஜகவின் ஆதரவாளர்களை உசுப்பேற்றுவது. ஆம். 2014 ம் ஆண்டு பதவியேற்ற மோடி இன்றுவரை நேரடியாக கையும் களவுமாக பிடிபட்டவனைக்கூட தண்டிக்கவில்லை என்ற வருத்தம் எல்லோரிடமும் உண்டு. இந்த வருத்தம் உண்மையில் பா.ஜ.,வினருக்கு கூட உண்டு. பா.ஜ.,வினரிடம் உள்ள இந்த கோபத்தை தூண்டுவது என்பது தான் அமெரிக்காவின் நோக்கம். முன்பெல்லாம், இப்படிப்பட்டவர்களை நிறைய பார்ப்பதுண்டு. பகைவன் என்றாலும் மன்னிக்கும் குணம் என்பது அவனுக்கு கடவுள்.என்ற பட்டத்தை கொடுப்பதற்கு பதிலாக, பிழைக்கத்தெரியாதவன், இளிச்சவாயன் என்ற பட்டத்தைத்தான் தந்தது. அதுவே வாஜ்பாய் ஆட்சிக்கு முடிவுரை எழுதியது. அது மக்களின் மோசமான முடிவு என்பதை உணர 10 ஆண்டுகள் ஆனபோது, இந்தியா 20 ஆண்டுகள் பின்னோக்கி போயிருந்தது.

அந்த தவறை மோடி செய்யவில்லை. செய்ய யோசித்தபோது அதை அமித்ஷா அனுமதிக்கவில்லை. யோகியோ அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஆனாலும், கோடிகோடியாக கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படாமல் இருந்தது மட்டுமல்ல, நேர்மையானவர்களுக்கு அவர்கள் எடுத்து வந்த பாடம் தொண்டர்களை கோபப்படுத்தியது.


இந்த சூழலில், சமீபத்தில் மோடியின் காலடிகளில் அடிப்படை மாற்றங்களை பார்க்கிறோம். ஒரு பக்கம் மோசடி புகாரில் சிக்கிய அரசியல்வாதிகளோடு சிரித்து பேசிக்கொண்டு, மறுபக்கம் அண்ணாமலையை போன்ற ஆட்களை இந்தியா முழுவதும் வைத்து ஊழல் அரசியல் வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அதுவும் மோடி இப்போது 2000ம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற அறிவிப்பு, கோடி, கோடியாய் கொள்ளையடித்து வைத்துள்ள அரசியல்வாதிகளை குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த தகவல் வெளியானதில் இருந்து பா.ஜ.க.வினர் குஷியாகி விட்டனர். காரணம் 2000ம் நோட்டுகள் வாபஸ் என்ற அறிவிப்பு, ஏழை, நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கத்தை மீண்டும் பாதிக்காது. ஆனால் கோடி, கோடியாய் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்து விடும். கர்நாடகா இடைத்தேர்தலில் காங்., கட்சியினர் மக்களிடம் ஓட்டு வாங்க இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைத் தான் அள்ளி இறைத்தனர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.


இதனால் தற்போது நாடு முழுவதும் ஊழல் அரசியல்வாதிகள் மோடியை நம்புவதா, நம்பாமல் இருப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். மோடியின் இந்த ஃபார்முலாவை உணர்ந்த பா.ஜ.,வினரும் தற்போது நிமிர்ந்து கொண்டனர். இந்த விஷயத்திலும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் மோடியின் பதவியை பறிக்க நினைத்த திட்டம் தவிடு பொடியாகிவிட்டது. இதனால் மோடிக்கு எதிராக எந்த ஒரு பெரிய கோப அலையையும் ஏற்படுத்த முடியவில்லை.

இன்று பாஜக அரசுக்கு எதிராக உள்ள விஷயங்கள் கேஸ் விலை உயர்வு, வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு இந்த விஷயங்களை அரசியலாக்கினால் எப்படி கையாள்வது என்று பா.ஜ., தெளிவாக திட்டமிட்டுள்ளது. எப்படியும் இன்னும் சில ஆண்டுகளுக்கு மோடி ராஜ்ஜியம் அமைந்தால் மட்டுமே சில விஷயங்களையாவது உறுதியுடன் சரி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Updated On: 20 May 2023 8:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்