/* */

தமிழகம் முழுவதும் நாளை வங்கிகளுக்கு பொது விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் நாளை வங்கிகளுக்கு பொது விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
X

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 18- வது மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த தேர்தலானது நாளை ஏப் 19 தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழ் நாடு முழுவதும், புதுச்சேரி முழுவதும் மற்றும் சில வட மாநிலங்களின் சில பகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு தங்களது உரிமையான வாக்கினை பதிவு செய்யவேண்டும் என்பதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அதாவது இந்திய ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், 2வது கட்டம் ஏப்ரல் 26ம் தேதியும், 3வது கட்டம் மே 7ம் தேதியும், நான்காவது கட்டம் மே 13ம் தேதியும், ஐந்தாவது கட்டம் மே 20ம் தேதியும், 6வது கட்டம் மே 25ம் தேதியும், ஏழாவது கட்டம் ஜூன் மாதம் முதல் தேதி என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் நாளில் அனைத்து வங்கிகளும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: தமிழ்நாடு (39 இடங்கள்), உத்தரகாண்ட் (5 இடங்கள்), அருணாச்சல பிரதேசம் (2 இடங்கள்), மணிப்பூர் (2 இடங்கள்), மேகாலயா (2 இடங்கள்), மிசோரம் (1 இடம்), நாகாலாந்து (1 இடம்), சிக்கிம் (1 இடம்), லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள். சென்னை, டேராடூன், இட்டாநகர், ஜெய்ப்பூர், கோஹிமா, நாக்பூர் மற்றும் ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 19-ம் தேதி மூடப்பட்டிருக்கும்.

39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 19-ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On: 18 April 2024 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!