/* */

பிரதமர் மோடியின் யோகா மணல் சிற்பம்: பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் அசத்தல்...!

பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பத்தில் பிரதமர் மோடி யோகா செய்வது போல வடிவமைத்தது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

HIGHLIGHTS

பிரதமர் மோடியின் யோகா மணல் சிற்பம்: பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் அசத்தல்...!
X

ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில், பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த பிரதமர் மோடியின் யோகா மணல் சிற்பம்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டது. மொத்தம் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு பா.ஜ கட்சி ஏற்பாடு செய்து இருந்தது..

கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்வை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிலையில் ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏழு அடி மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். சிற்பத்தின் கருப்பொருளாக யோகாவின் 12 ஆசனங்களின் வரிசை அந்த சிற்பத்தில் இடம்பெற்றுள்ளது .

இதன் சிறப்பம்சமாக, சிற்பத்தின் மையத்தில் பிரதமர் மோடி யோகா செய்வது போன்று வடிவமைக்கப்பட்டது. இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலக புகழ் பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், வித்தியாசமான மணல் சிற்பங்களை அடிக்கடி வடிவமைத்து பரபரப்பையும், ஆச்சரியத்தையும் உலக மக்களிடம் ஏற்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Jun 2022 1:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது