/* */

5 திருமணம் செய்து, 6-வதில் சிக்கிய போலி சாமியார் கைது : இது உத்தரபிரதேசத்தில்

5 திருமணம் செய்து, 6-வது திருமணம் செய்வதற்குள் போலீசாரிடம் போலி சாமியார் சிக்கி, கைதானார்.

HIGHLIGHTS

5 திருமணம் செய்து, 6-வதில் சிக்கிய போலி சாமியார் கைது : இது உத்தரபிரதேசத்தில்
X

போலி சாமியார் கைது (மாதிரி படம்)

உத்தர பிரதேசத்தில் ஒரு போலி கில்லாடி சாமியார் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார் ஒருவர் மெயின்புரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை 2005ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். கொஞ்ச நாளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொள்ள விண்ணப்பித்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முதல் மனைவியை விவகாரத்து பெரும் முன்னரே 2010ம் ஆண்டு பரேலியில் இருந்து இன்னொரு பெண்ணை அனுஜ் சேட்டன் திருமணம் செய்தார். விதி விட்டதா..? அந்த பெண்ணுக்கும் போலி சாமியாரோடு, வாழ பிடிக்காமல் விவாகரத்து வரை சென்றது.

சாமியார் சும்மா இருப்பாரா 2014ம் வருஷத்துல மீண்டும் அனுஜ் திருமணம் செய்தார். அந்த மூணாவது மனைவியுடனும் வாழவில்லை. 3வது மனைவியின் உறவு பெண்ணுடன் மற்றும் ஒரு திருமணம். இத்தோடு போலி சாமியார் 4 திருமணம் செய்துவிட்டார். 4வது மனைவிக்கு போலி சாமியாரின் முந்தைய திருமணம் குறித்து தெரிய வந்ததால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

போலி சாமியாரும் சளைக்கவில்லை. 2019ம் ஆண்டில் மீண்டும் 5வது திருமணம் செய்தார். அந்த பெண்ணை போலி சாமியார் அனுஜ் துன்புறுத்தி கொடுமை செய்துள்ளார். அந்த பெண் மட்டுமே துணிந்து போலீசில் புகார் அளித்தார்.

இது தெரிய வந்ததும் அவரது மற்ற மனைவிகளுக்கும் போலி சாமியாரின் லீலைகள் தெரியவந்தது. ஒரு முதல் மனைவியிடம் இருந்தே இன்னும் விவகாரத்து பெறாத நிலையில் 5 திருமணம் செய்து ஒவ்வொருவரையும் ஏமாற்றியுள்ளார். இவரிடம் பாதிக்கப்பட்ட எல்லா மனைவிகளும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால், மீண்டும் 6வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தது தெரிய வந்ததால் போலீசார் கைது செய்தனர். இன்னும் பல பெண்களை வலையில் வீழ்த்த திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

Updated On: 20 Jun 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து