/* */

பிரதமர் மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளார் :அமித்ஷா பேச்சு

ஏழைகளின் நலனில் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்று அமித்ஷா கூறினார்.

HIGHLIGHTS

பிரதமர் மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளார் :அமித்ஷா பேச்சு
X

பைல் படம்

ஏழைகளின் நலனில் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்று அமித்ஷா கூறினார்.

கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி " (SVANidhi Yojana) திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ.20 ஆயிரமும், அந்த கடனை அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும். கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும். இந்தநிலையில், குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:ஆத்ம நிர்பார் பாரத் எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். ஏழைகளின் நலனில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார்.வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். உலகிலேயே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாக போடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 24 Dec 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  2. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  3. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  4. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  5. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  6. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  9. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  10. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!