/* */

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்:  வருமானவரித்துறை நோட்டீஸ்
X

கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது ரூ.1,800 கோடி அபராதம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2024 1:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  2. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  3. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  4. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  5. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  6. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  8. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  10. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு