/* */

குடியரசுத்தலைவரை சந்தித்த இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள்

இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

HIGHLIGHTS

குடியரசுத்தலைவரை சந்தித்த இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள்
X

இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி (ஐ.இ.எஸ்) அதிகாரிகள் குழுவினர் (2022 மற்றும் 2023 தொகுப்புகள்) இன்று (ஏப்ரல் 16, 2024) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவைக் குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டின் வளர்ச்சியில் பொருளாதார மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். பேரியல் மற்றும் நுண் பொருளாதாரக் குறியீடுகள் முன்னேற்றத்தின் பயனுள்ள அளவீடுகளாகக் கருதப்படுகின்றன. எனவே, அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் பயனுள்ளவையாக மாற்றுவதில் பொருளாதார வல்லுநர்களின் பங்கு முக்கியமானதாகும். உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா முன்னேறி வருவதால், அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தவும் வரும் காலங்களில் எண்ணற்ற வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். இந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2022 மற்றும் 2023 தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள ஐ.இ.எஸ் அதிகாரிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண் அதிகாரிகள் என்பதைக் குறிப்பிட்டு குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தீர்மானத்தை நிறைவேற்ற உதவும் என்று அவர் கூறினார். பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பெண் அதிகாரிகள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கொள்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்போது அல்லது பணியிடத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது, நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினரின் நலனை இளம் அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் என்பதைக் குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்.

ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

இகுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் ராமரின் வாழ்க்கை நீதி, ஒருமைப்பாடு மற்றும் சகிப்புத்தன்மைக்கு காலத்தால் அழியாத உதாரணமாக விளங்குகிறது. அவரது கொள்கைகள் பலருக்குப் பல யுகங்களாக வழிகாட்டியுள்ளன; நல்லொழுக்க வாழ்க்கையை நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இன்று ராமபிரான் ஏற்றுக்கொண்ட நிலைபேறுடைய மாண்புகளை நாம் சிந்தித்து, அவர் காட்டிய பாதையில் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.

வளமான மற்றும் வலுவான பாரதத்தை உருவாக்க நாம் உறுதியுடன் பணியாற்றும் அதே வேளையில், ஸ்ரீ ராம பிரானின் நிலைபேறுடைய கொள்கைகளால் நமது வாழ்க்கை வழிநடத்தப்படட்டும்.

Updated On: 16 April 2024 3:16 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?