/* */

12 சீன இராணுவ வீரர்களை ஒரு ஆளாக கொன்ற குர்தேஜ் சிங்!

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன வீரர்களிடையே நடந்த மோதலில் இந்திய வீரர்களின் திறனை பற்றி உலகம் வியந்து பேசி வருகிறது.

HIGHLIGHTS

12 சீன இராணுவ வீரர்களை  ஒரு ஆளாக கொன்ற குர்தேஜ் சிங்!
X

இந்திய- சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இன்னமும் இரு நாட்டு வீரர்களும் எதிரெதிரே நிற்கின்றனர். இவர்களிடையே முன்பு நடந்த மோதலில் இந்திய தரப்பில் 22 பேர் வரையும், சீன தரப்பில் 45 பேர் வரையிலும் உயிரிழந்தனர். இந்த மோதல் துப்பாக்கிகள், பீரங்கிகள் மூலம் நடைபெறவில்லை. இரு தரப்பினும் கைகளாலும், கம்புகள், ஆணிகள் பொறுத்தப்பட்ட கட்டைகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பலத்த அடி வாங்கியது சீனா தான். சீனாவை புரட்டி எடுத்த இந்திய வீரர்களின் சாதனை பற்றி ஒட்டுமொத்த உலகமும் வியந்து பேசி வருகிறது.

இதில் முக்கியமாக போற்றப்படக்கூடியவர் பஞ்சாப் கடக் கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த இந்த மாவீரன் குர்தேஜ்சிங். இவர் தனது இரு கைகளிலும் பிடித்து இருந்த 4 சீன இராணுவ வீரர்களை தாக்கி மலை உச்சியில் உள்ள முகடுகளில் தள்ளினார். அப்போது balance ஐ இழந்த இந்த வீரன் மலை முகடுகளில் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார். இருந்தும் தன்னுடைய தாக்குதலை நிறுத்தாமல் மேலும் கண்ணில் படும் சீன இராணுவ வீரர்களை தாக்கினார்.

இந்த சண்டையில் 12 பேரை வெறும் கைகளாலேயே அடித்தே கொன்று தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக வீரமரணம் அடைந்தார். தாய் நாட்டிற்காக 12 சீன இராணுவத்தினரை தனது வெறும் கைகளாலே கொன்ற இந்த வீரரின் வயது 23 தான். இவரை பற்றி இந்திய ராணுவம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த உலகமும் வியந்து பேசி வருகிறது. வியக்கத்தக்க விஷயம் தானே. இன்னமும் நம் எல்லையை காத்து வரும் இந்த இந்திய வீரரின் ஆன்மாவை நாமும் வணங்குவோம்.

Updated On: 28 Jun 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்