/* */

ஜெர்மனில் ஜி 7 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார்..!

Modi Live News Today - ஜெர்மனியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பாரத பிரதமர் மோடி ஜெர்மனிக்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.

HIGHLIGHTS

ஜெர்மனில் ஜி 7 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார்..!
X

பிரதமர் நரேந்திர மோடி.

Modi Live News Today - முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இதாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன.

முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன. அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998 ல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள். ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும். அதன்படி இந்த ஆண்டு ஜி 7 மாநாட்டை ஜெர்மன் நடத்துகிறது.

ஜெர்மனியில் இம்மாதம் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் ஜி 7 மாநாடு நடைபெற உள்ளது . இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார்.

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில், ஜெர்மனியில் ஸ்க்லோஸ் எல்மாவ், ஜெர்மன் பிரசிடென்சியின் கீழ் நடைபெறும் ஜி 7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார். ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஜூன் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் எனவும் மத்தியஅரசு உயரதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jun 2022 9:50 AM GMT

Related News