/* */

ambedkar tamil quotes-தீண்டாமைக்கு எதிராக தீயாக கொதித்தவர் அம்பேத்கர்..!

ambedkar tamil quotes-சட்டமேதை, இந்திய அரசியல் சாசனம் வடிமைத்த சிற்பி அம்பேத்கரின் பொன்மொழிகளை படீங்க.

HIGHLIGHTS

ambedkar tamil quotes-தீண்டாமைக்கு எதிராக தீயாக கொதித்தவர் அம்பேத்கர்..!
X

ambedkar tamil quotes-அம்பேத்கர் மேற்கோள்கள்.(கோப்பு படம்)

ambedkar tamil quotes-பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென அமைப்பு ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் கை தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'நவ புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர். இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

  • நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.
  • மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை.
  • வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான்.

ambedkar tamil quotes

  • எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.
  • அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
  • ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

ambedkar tamil quotes

  • அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழிதோண்டிப் புதையுங்கள்.
  • உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.
  • மகாத்மாக்கள் வந்தார்கள் மகாத்மாக்கள் மறைந்தார்கள் ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
  • தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.
  • கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்.

ambedkar tamil quotes

  • சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.
  • எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டான்.
  • அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.
  • ஆடுகளை தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல.. ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள்.

ambedkar tamil quotes

  • நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று

முதல் தெய்வம் அறிவு.

இரண்டாவது சுயமரியாதை.

மூன்றாவது நன்னடத்தை.

இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

  • ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால் அவன் அடிமைபட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும் பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
  • நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமை இல்லை.

ambedkar tamil quotes

  • சாதி அமைப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண்களே ஆவர். ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு சாதியை கடத்துவது அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது.
  • சாதிகள் அனைத்துமே தேசவிரோத சக்திகள்.
  • இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை.. சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை.
  • சமுதாய சிந்தனைகளை விட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு.

ambedkar tamil quotes

  • சாதிய அமைப்பு முறை என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை சமூகங்களாக பிரித்து வைத்திருக்கின்றது.
  • குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை ஆண்கள் பட வேண்டியிருந்தால் அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்.
  • சாதி அமைப்பு புனிதமாக கட்டப்பட்டிருக்கிறது இந்த புனிதத்தன்மையை முதலீடாக கொண்டு இயங்கும் மதத்தையும் சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கையும் ஒழிக்க வேண்டும்.
  • பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.
  • ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

ambedkar tamil quotes

  • கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
  • ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும் சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின் அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து.
  • சிந்தனை விடுதலையே அனைத்து விடுதலைக்கும் அடிப்படையானது.
  • ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
  • எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.

ambedkar tamil quotes

  • சாதி எனும் கீழ்த்தனத்தினால் தான் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மை இல்லாமல் வாழ்கிறார்கள்.
  • இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்.
  • நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை.
  • பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.

ambedkar tamil quotes

  • ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
  • எப்போதும் ஊக்கமாக சமூகசேவை செய்தால் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாகச் சாதிக்க முடியும்.
Updated On: 22 Sep 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!