/* */

ஆதார் கார்டு இருந்தா மட்டும் தான் ஏழுமலையானையே பார்க்க முடியும்

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

HIGHLIGHTS

ஆதார் கார்டு இருந்தா மட்டும் தான் ஏழுமலையானையே பார்க்க முடியும்
X

பைல் படம்.

திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:

300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையிலான தரிசன டிக்கெட் உட்பட ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.

ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பக்தர்கள் இனிமேல் வோட்டர் ஐடி கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்த இயலாது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் விரைவில் துவங்க தேவையான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன.

மேலும், 300 ரூபாய் தரிசன டிக்கெட், இலவச தரிசன டோக்கன் ஆகியவை உள்ளிட்ட ஏதாவது ஒரு தரிசன டிக்கெட்டை வாங்கி இருக்கும் பக்தர்களும் நடந்து மலையேறும் போது அங்கு வழங்கப்படும் தரிசன டோக்கனையும் வாங்கி வருகின்றனர். இதனால் ஒரே பக்தர் ஒரே நாளில் இரண்டு வகையான தரிசன வாய்ப்புகளை பெறுகிறார். நிர்வாக அளவில் இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் திவ்ய தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்.

மேலும் கடந்த மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். 114 கோடி 29 லட்சம் ரூபாய் கடந்த மாதம் ஏழுமலையானுக்கு உண்டியல் மூலம் காணிக்கை வருமானமாக கிடைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 3 March 2023 12:52 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...