/* */

திரும்பப் பெறப்பட்ட 93 சதவீத ரூ.2000 நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நாடுமுழுவதும் 93 சதவீத ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

திரும்பப் பெறப்பட்ட 93 சதவீத ரூ.2000 நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
X
பைல் படம்

ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் முடிவடையும் நிலையில், இதுவரை 93 சதவீத நோட்டுக்கள் திரும்பப் பெற்றப்படுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான வசதி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும், அனைத்து வங்கி கிளைகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

மேலும், கணக்கு வைத்திருக்காத ஒருவர் கூட அடையாளச் சான்று இல்லாமல் எந்த வங்கிக் கிளையிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இருப்பினும், ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு வரம்பு உள்ளது. ஒரு நபர் ரூ.2000 நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

இதனையடுத்து ரூ.2000 நோட்டுக்களை வாடிக்கையாளர்கள் வங்கி செலுத்தியும் மாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93 சதவீத நோட்டுகள் பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76 சதவீத வைப்புத் தொகையாகவும்,13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Updated On: 2 Sep 2023 2:26 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது