/* */

அடுத்த 2ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள்: ராஜீவ் சந்திரசேகர்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

HIGHLIGHTS

அடுத்த 2ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள்: ராஜீவ் சந்திரசேகர்
X

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

தற்போது 80 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.2 பில்லியன் இந்தியர்கள் படிப்பு முதல் வேலை, பொழுதுபோக்கு வரை பல்வேறு நோக்கங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையில், இணைய பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இணையத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு இந்திய அரசு பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

தேசிய தரவு மைய மற்றும் கிளவுட் வரைவு கொள்கை குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசினார். மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இணையம் தவிர்க்க முடியாததாகி வருவதால், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதைத் தவிர, இணையவெளியை பாதுகாப்பானதாக்கவும் மத்திய அரசு மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்படுகிறது.

தரவு மைய கொள்கையின் (டேட்டா சென்டர் பாலிசி) பலன்களை விளக்கிய அவர், உலகம் அடுத்த தலைமுறைக்கு (கிளவுட் தலைமுறை) நகர்ந்து வரும் நிலையில், ஸ்டார்ட்-அப்களுக்கு பரந்த வாய்ப்பை இந்த கொள்கை வழங்கும் என்றார் . நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உலக தரவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தை இந்தியா வழிநடத்தும் தருணம் வந்துவிட்டது, இதை அடைய உதவும் சூழலை உருவாக்க இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அளவு 2025-26-ல் 200 பில்லியன் டாலர்களிலிருந்து 1 டிரில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், 3 லட்சம் கோடி முதலீட்டை இந்திய அரசு எதிர்பார்க்கிறது.

முன்னணி தொழில்துறையினருடன் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. கிளவுட் ஸ்பேஸ் பாதுகாப்பு மற்றும் கிளவுட்களுக்கு இடையிலான இடைமுகம் உள்ளிட்டவற்றில் அவர்களின் பரிந்துரைகள் குறித்துக் கொள்ளப்பட்டு, அவை இறுதிக் கொள்கையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Updated On: 26 Feb 2022 12:42 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !