/* */

நொய்டா இரட்டைக் கோபுரங்கள் வெடிவைத்து இடிப்பு

நொய்டாவின் செக்டார் 93A இல் உள்ள சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதன் மூலம் பத்தாண்டு கால சட்டப் போராட்டம் இன்று நிறைவு பெற்றது

HIGHLIGHTS

நொய்டா இரட்டைக் கோபுரங்கள் வெடிவைத்து இடிப்பு
X

நொய்டா இரட்டை கோபுரத்தை வீழ்த்த 3,700 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன

நொய்டாவின் செக்டார் 93A இல் உள்ள 100 மீட்டர் உயரமான கட்டடங்கள் கட்டிட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்து, அவற்றை இடித்துத் தள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனம், கோபுரங்களில் 9,400 துளைகளை துளைத்து, 3,500 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை நிறுவியது.

பல வாரங்களாக ஆயத்தப்பணிகள் நடைபெற்றன. அருகிலுள்ள கட்டடங்களைப் பாதுகாப்பதற்கும், இடிபாடுகளினாள் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இடிப்பதற்கு குறிக்கப்பட்ட தேதியான ஆகஸ்ட் 28 இன்று, எமரால்டு கோர்ட் மற்றும் ஏடிஎஸ் வில்லேஜ் ஆகிய கட்டடங்களை ஒட்டிய இரண்டு வீட்டு வசதி சங்கங்களில் வசிக்கும் சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்தனர்.

பிற்பகல் 2:30 மணியளவில், வெடிப்பு பொத்தானை அழுத்தி, வெடிப்பு நீர்வீழ்ச்சி நுட்பத்தைப் பயன்படுத்தி இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்தன. குண்டுவெடிப்பால் கிளம்பிய ஒரு பிரமாண்டமான தூசி மேகம் வானுயர எழுந்தது.

கட்டடத்தை இடித்ததால் சுமார் 80,000 டன் குப்பைகள் சேர்ந்தன. அவை அடுத்த மூன்று மாதங்களில் படிப்படியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 28 Aug 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது