/* */

Request Letter in Tamil-குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய கடிதம் எழுதுவோமா?

அரசு அலுவலகங்களுக்கு நமது கோரிக்கை குறித்த கடிதம் ஒன்று எழுதுவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

HIGHLIGHTS

Request Letter in Tamil-குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய கடிதம் எழுதுவோமா?
X

request letter in tamil-குடும்ப அட்டையில் பெயர்மாற்றம் செய்ய கடிதம் (கோப்பு படம்)

Request Letter in Tamil

அரசு சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பள்ளி, கல்லூரி, வங்கி போன்ற அலுவலகங்களுக்கு நமக்குத் தேவைக்கு ஏற்ப நாம் கடிதம் எழுத வேண்டிய சூழல் வரலாம். அவ்வாறு அலுவலகங்களுக்கு கடிதம் எழுதும்போது சில அடிப்படை விதிமுறைகளை நாம் பின்பற்றவேண்டும்.

காரணம், அலுவலகங்களில் பெரும்பாலும் யாரும் முழு கடிதத்தையும் படிப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான சில குறிப்புகளை மட்டுமே கண்காணித்து அதை அடிக்கோடிட்டு மேல் நடவடிக்கைக்கு பரிந்துரைப்பார்கள். அதனால் ஒரு அரசு அல்லது பிற அலுவலகங்களுக்கு கடிதம் எழுதும்போது பின்வரும் முறைகளை பின்பற்றுங்கள்.

Request Letter in Tamil

சில வரைமுறைகளை கூறிய பின்னர், ஒரு மாதிரி கடிதம் எழுதுவோம்.

1. அனுப்புனர்

2. பெறுநர்

3. விழித்தல் -அதாவது ஐயா, அம்ம என்று தொடங்குவது

4. பொருள் - கடிதம் எதற்காக எழுதுகிறோம் என்பதன் சுருக்கம்

5. கடிதத்தின் உடற் பகுதி - அதாவது கடிதத்தின் நோக்கத்தை சற்று விரிவாக எடுத்துக்கூறுவது

6. நன்றி

7. முடித்தல் - இவண் அல்லது இப்படிக்கு என்று கடிதத்தை நிறைவு செய்வது

இந்த 7 பகுதிகளை உள்ளடக்கி ஒரு கடிதம் எழுதுவோம்.

உதாரணத்திற்கு உங்கள் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கு கடிதம் எழுதலாம். குடும்ப அட்டை முகவரி மாற்றம் செய்வதற்கு நாம் வட்ட வழங்கல் அலுவலருக்கு கடிதம் எழுத வேண்டும். சரி வாங்க, எப்படி கடிதம் எழுதுவது என்று பார்க்கலாம்.

Request Letter in Tamil

அனுப்புனர்

க.பூங்குன்றன்,

16/ 2R, காந்தி நகர்,

2வது குறுக்குத் தெரு

கோனேரிப்பட்டி,

ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம்.

பெறுநர்

வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள்,

வட்ட வழங்கல் அலுவலகம்

ராசிபுரம்.

நாமக்கல் மாவட்டம்.

ஐயா,

பொருள் : குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வது சார்பு.

வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது குடும்ப அட்டை எண் : AB 3579Y SR. ஏற்கனவே நான் குடியிருந்த வாடகை வீட்டின் முகவரி குடும்ப அட்டையில் உள்ளது. தற்போது எனது சொந்த வீட்டுக்கு நான் குடியேறிவிட்டதால், அந்த முகவரிக்கு எனது குடும்ப அட்டையை மாற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எனது புதிய முகவரி கீழே கொடுத்துளேன்:

க.பூங்குன்றன்,

16/ 2R, காந்தி நகர்,

2வது குறுக்குத் தெரு

கோனேரிப்பட்டி,

ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம்.

ஆகவே ஐயா அவர்கள், எனது குடும்ப அட்டையில் புதிய முகவரியை மாற்றம் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு,

உண்மையுள்ள,

(கையெழுத்து )

க.பூங்குன்றன்

.....................................

Request Letter in Tamil

சில குறிப்புகள்

  • அனுப்புனர், பெறுநர் எழுதியவுடன் அங்கு காற்புள்ளி அதாவது கமா, முற்றுப்புள்ளி எதுவும் வைக்கக் கூடாது.
  • முகவரி எழுதும்போது அடுத்தடுத்த வரிகளுக்கு கமா வைக்க வேண்டும்.
  • நன்றி குறிப்பிட்டு கமா வைக்கவேண்டும்.
  • இப்படிக்கு என்று எழுதி கமா வைக்க வேண்டும்.
  • இப்படிக்கு என்பதற்கு கீழ் கையெழுத்து இட வேண்டும்.
  • கையெழுத்துக்குக் கீழ் அடைப்புக்குறிக்குள் பெயரை எழுத வேண்டும்.

இப்படி எழுதினால் ஒரு முழுமையான கடிதமாக இருக்கும். அலுவலர்கள் முக்கிய குறிப்புகளை டிக் செய்து விரைவான நடவடிக்கைக்கு பரிந்துரைப்பார்கள்.

Updated On: 1 Nov 2023 7:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?