/* */

திருச்சியில் கல்வி துறை சார்பில் மாநில அளவிலான விருது வழங்கும் விழா

திருச்சியில் பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவிலான விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் கல்வி துறை சார்பில்  மாநில அளவிலான விருது வழங்கும் விழா
X

திருச்சியில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான விருதுகளை அமைச்சர் அன்பிம் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி கலையரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (06.03.2024) நடைபெற்ற மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநில அளவில் குழுவால் தேர்வு செய்யப்பட்ட 100 தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதினையும் மற்றும் 76 தலைமையாசிரியர்களுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் முன்னிலையில் வழங்கினார்.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொpவித்ததாவது:-

பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது அரசு தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர்அண்ணா தலைமைத்துவ விருது 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கல்வி விளையாட்டு, மாணவர் மேம்பாடு. பள்ளிக் கட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு, இல்லம் தேடிக் கல்வி என அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கி பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பள்ளிக்கு ரூ.10 இலட்சம் ஊக்க நிதி, தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்குதல் உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.10,03,000 வீதம் மொத்தம் 100 பள்ளிகளுக்கு ரூ.10,03,00,000 (ரூபாய் பத்து கோடியே மூன்று இலட்சம் மட்டும்) 2023-2024 ஆம் நிதியாண்டு முதல் நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கிட 100 பள்ளிகளின் தலைமை ஆசிரியர;கள் மாநில தேர;வு குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு அரசு தொடக்க அல்லது நடுநிலைப்பள்ளி மற்றும் ஒரு உயர;நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளி என இரு வகைப் பள்ளிகளைத் தெரிவு செய்து மொத்தம் 76 பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கிட அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிகளைத் தெரிவு செய்வதற்கான மாவட்ட அளவில் மாவட்டத் தேர்வுக் குழுவும் மாநில அளவில் மாநிலத் தேர;வுக் குழுவும் அமைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் மாநில தேர்வுக் குழுவால் பரிசிலிக்கப்பட்டு 38 வருவாய் மாவட்டத்திற்கும் இரு பள்ளிகள் வீதம் மொத்தம் 76 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர்அன்பழகன் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், சிறந்த பள்ளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட 38 அரசு உயர;நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளியின் உட்கட்டமைப்பு பராமரிப்புக்காக தலா ரூ.10 இலட்சம் இன்று மாநில அளவில் நடைபெறும் இந்த விழாவில் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு இதுவரை ஒரு இலட்சத்து 57 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மற்ற துறைகளை காட்டிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகமான முக்கியத்துவத்தை வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வி துறையை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் மேலும் நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 3521 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் நான் அமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை 136 தொகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர;நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு இருக்கக்கூடிய கட்டுமான வசதிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர;கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியாற்றும் விதம் குறித்து ஆய்வு நடத்திய உள்ளேன். எனவே தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் உள்ள கட்டுமான குறைகள் குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அதை உடனடியாக சரி செய்து கொடுப்பது அரசின் கடமை. எனவே ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் உள்ள சுற்றுப்புற சூழல் மற்றும் கட்டுமானங்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம். எனவே அரசு பள்ளியில் கல்வி கற்று கொடுக்கக்கூடிய ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி பேசினார்.

Updated On: 6 March 2024 6:07 PM GMT

Related News