/* */

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப். 24 முதல் ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப். 24 முதல் ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப். 24 முதல் ஹால் டிக்கெட்
X

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்பு படம்).

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் (பிப்ரவரி 24) ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 4ஆம் தேதி பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடங்கி 21ஆம் தேதி முடிவடைய உள்ளன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பள்ளிகள் வாயிலாக வழங்கப்படும். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை நாளை மறுநாள் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நடைபெறவுள்ள மார்ச்/ ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 24.02.2024 (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறை: தனித்தேர்வர்கள் www.dge.tn.govh என்ற இணையதளத்திற்குச் சென்று "HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள "SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL-2024 HALL TICKET DOWNLOAD"என்ற வாசகத்தினை "Click" செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) / நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச்/ ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் (Science Practical Examinations( 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரு தேர்வரும் தேர்வெழுத மார்ச்/ ஏப்ரல்-2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.h என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளலாம் என தேர்வுத்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Feb 2024 5:17 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  8. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  9. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  10. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்