/* */

எப்பவும் இளமையா இருக்கணுமா? அப்போ காரம், மசாலா சாப்பிடாதீங்க...!

காரம், மசாலா அதிகமாக சாப்பிடுபவர்களின் முகத்தோற்றம் விரைவில், முதுமையாக மாறிவிடும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

HIGHLIGHTS

எப்பவும் இளமையா இருக்கணுமா? அப்போ காரம், மசாலா சாப்பிடாதீங்க...!
X

இளமை  தோற்றம் நீடிக்க, முதுமை தோற்றம் தவிர்க்க காரம், மசாலா சாப்பிடாதீங்க...

அதிக அளவு காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், தோலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சருமம் சேதமடையும். இதுவும் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும்.

எப்போதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதே பலருக்கும் ஆசை. இதற்கு சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் போன்றவை அவசியமாக இருந்தாலும், நாம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியது உணவில்தான். நாம் சாப்பிடும் உணவுக்கும், நம்முடைய உடற்தகுதி, தோற்றம், வாழ்க்கைத் தரம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தொடர்பு உண்டு.


முதுமையை விரட்டும் ஊட்டச்சத்துகள்

முதுமையைத் தள்ளிப்போட்டு இளமையை நீட்டிப்பதற்கு, உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. அவை பெரும்பாலும் உணவில் இருந்தே கிடைக்கும். சில வகை உணவுகள் உடலில் எதிர்மறையாக செயல்பட்டு, விரைவாக முதுமையான தோற்றத்தை உண்டாக்கும். அவற்றை தவிர்ப்பதன் மூலம் இளமையை தக்கவைக்க முடியும்.

உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டுக்கு சர்க்கரை அவசியம். அதேசமயம், அதிகப்படியான சர்க்கரை மூலக்கூறுகள் கொழுப்பாக மாறி உடலில் படியும். அதுமட்டுமில்லாமல் சருமத்தை இளமையாகவும், உறுதியாகவும் வைத்திருக்கும் 'கொலாஜன்' எனப்படும் புரதத்தையும் சேதப்படுத்தும். இதனால் சருமத்தில் சுருக்கம், கோடுகள் போன்றவை ஏற்படும். தோலின் நெகிழ்வுத்தன்மை குறைந்து முதுமைத் தோற்றம் உண்டாகும். எனவே சர்க்கரை சேர்த்த மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள், பழச்சாறு, இனிப்புகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.


உப்பு, காரம், மசாலா தவிர்க்கணும்

உடலில் தண்ணீர், தாதுக்கள் ஆகியவற்றின் அளவைப் பராமரித்தல், தசைகள் சுருங்குதல் மற்றும் தளர்த்துதல் போன்ற முக்கியமான செயல்பாடுகள் நடப்பதற்கு, ஒரு நாளுக்கு 500 மில்லி கிராம் உப்பு தேவை. அதிக உப்பை உட்கொள்வது ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். செல்களில் தண்ணீர் சேர்வதை அதிகரிக்கும். இதனால் விரைவாக முதுமையான தோற்றம் ஏற்படும். எனவே அதிக அளவு உப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவு காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகள், தோலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சருமம் சேதமடையும். இதுவும் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும்.

'டிரான்ஸ் பேட்' எனப்படும் கெட்டக் கொழுப்பு, இதய ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், இளமையையும் குறைக்கும். இவை உடலின் வீக்கத்தை அதிகரிக்கின்றன. இதனால் சருமத்தில் உள்ள கொலாஜன் சேதமடையும். எனவே, எண்ணெய்யில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தரமில்லாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


முகத்தில் எப்போதும் இதுபோன்ற இளமையும், அழகும், பொலிவும் நீடித்திருக்க வேண்டுமா?

மாவுச்சத்து பொருட்கள் தவிர்க்கணும்

மாவுச்சத்து அதிகம் உள்ள அரிசி, கோதுமை போன்ற தானிய உணவு வகைகளை குறைத்துக்கொண்டு, புரதம் அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து அதிகம் உள்ள தினை அரிசி, வரகு அரிசி, சாமை, குதிரைவாலி, பனிவரகு, மூங்கில் அரிசி போன்ற சிறுதானிய உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவற்றை முளை கட்டிய பிறகு சாப்பிடுவது 'வைட்ட மின் சி'யை அதிகரித்து இளமையைப் பாதுகாக்கும்.

Updated On: 9 Feb 2023 12:29 PM GMT

Related News