இனிமேல் நமக்கு பிடித்த 'ஹீரோ' யாருன்னா, அது 'தக்காளி' தான்...

கிலோ ரூ 10க்கு விற்கப்படும் தக்காளி, சமையலில் சுவைக்காக பயன்படுத்தப்படும் முக்கிய பழமாக இருக்கிறது. அதன் உண்மையான மகத்துவங்களை தெரிந்து கொண்டால், ‘தக்காளி’ நோய்களின் எதிரி, மனித ஆரோக்கியத்தின் நண்பன் என்பது புரிந்து விடும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இனிமேல் நமக்கு பிடித்த ஹீரோ யாருன்னா, அது தக்காளி தான்...
X

இனிமேல் தக்காளியை ‘சாதாரணமாக’ நினைக்காதீங்க...

சினிமாவில், வில்லன்களை எதிர்த்து நின்று, போராடி சண்டையிட்டு காப்பாற்றுவன் 'ஹீரோ'. அதுபோல், நம் உடலுக்குள் வரும் நோய்களை தடுத்து, நம் ஆரோக்கியத்தை காப்பாற்றும் தக்காளியும், ஒரு விதத்தில் 'ஹீரோ'தான்.

நம்முடைய உணவு பொருட்களில் அன்றாட பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று தக்காளி. பார்ப்பதற்கு கண்களை கவரும் நிறத்தை கொண்ட இது பழமா இல்லை காய்கறியா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். பச்சையாக உண்ணும் காய்கறிகளில், தக்காளிக்கு முக்கிய இடமுண்டு. அதிக சத்துக்கள் கொண்ட தக்காளி நிறைந்த உணவை உட்கொள்வது குடலுக்கு நன்மையளிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது. குறிப்பாக குளிர்காலங்களில் தக்காளியை நம்முடைய தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியம் நிறைந்த தக்காளி


பொதுவாகவே தக்காளியில் வைட்டமின்கள் ஏ, பி,சி, கே,இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. தக்காளியில் அதிகமாக நீர்ச்சத்து உள்ளதால், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதிலும், உடல் நீரேற்றமாக வைத்து இருப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது..

மேலும், இதில் கலோரிகள் மற்றும் மாவுச்சத்து குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதனை எளிதாக சாப்பிடலாம். தக்காளியை பச்சையாக சாப்பிட விருப்பப்படாதவர்கள் ஜூஸ், சாலட், உணவு ஆகியவற்றில் சேர்த்து சாப்பிட வேண்டுமே தவிர அதனை தவிர்க்க நினைக்கக்கூடாது.

தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துகள்


தக்காளியில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. அவற்றோடு வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே1, வைட்டமின் பி9 (போலேட்) ஆகிய வைட்டமின் மற்றும் மினரல்கள் இருக்கின்றன.


இதய ஆரோக்கியத்துககு தக்காளி

தக்காளி நம்முடைய ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். ஆகையால், தொடர்ந்து நம்முடைய தினசரி உணவில் தக்காளியை சேர்த்து கொள்ளும் போது அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.


​புற்றுநோய் எதிர்ப்பு பண்பு கொண்ட தக்காளி

புற்றுநோய் செல்கள் கட்டுப்படுத்த முடியாமல் அபரிமிதமான அளவில் வளரக் கூடிய தன்மை கொண்டது. ஆனால் தக்காளியில் உள்ள சில உட்பொருள்கள் விதைப்பை, நுரையீரல், வயிற்று புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கச் செய்கின்றன. இதிலுள்ள அதிகப்படியான லைகோபின் மற்றும் கரோட்டீனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

சரும ஆரோக்கியத்துக்கு தக்காளி


சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு தக்காளி உதவியாக இருக்கிறது. இதிலுள்ள லைகோபின் சருமத்துக்கு மிகச்சிற்நத ப்ளீச்சிங் ஏஜெண்டாக இருப்பதோடு, சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கிறது.

மேலும், தக்காளி சருமத்தில் எத்திலினை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. மேலும், சருமத்தில் உண்டாகிற டேனை நீக்குவதோடு கருமையையும் போக்கி சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.


​குடல் நுண்ணியிரிகள் அதிகரிக்கும் தக்காளி

குடலில் இருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நன்மை செயயும் நுண்ணுயிர்கள் உடல்நலத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவது, பசியைக் கட்டுப்படுத்துவது, மனநல ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றில் குடல் நுண்ணியிரிகள் பங்கு இன்றியமையாதது ஆகும்.

தாவர உணவுகளை உட்கொள்வது, நொதித்த உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது, இரவு உணவுக்கும் அடுத்த நாள் காலை உணவுக்கும் 12 மணி நேர இடைவெளி விடுவது, உடற்பயிற்சி ஆகியவை நம்முடைய உடலின் குடல் நுண்ணுயிரிகளை அதிகரிக்கச் செயயும்.

Updated On: 2 Dec 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    elakkai benefits in tamil அடேங்கப்பா..... ஏலக்காயில் இவ்வளவு ...
  2. சினிமா
    லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
  3. உலகம்
    அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
  4. தமிழ்நாடு
    பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...
  5. சிவகாசி
    சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
  6. மொடக்குறிச்சி
    ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
  7. இந்தியா
    தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
  8. இராஜபாளையம்
    திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...
  9. திருப்பூர்
    ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள்
  10. தமிழ்நாடு
    புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள்...