/* */

செம்பருத்திப் பூவிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?....படிங்க...

do you know medicinal character of hibiscus? மலர்களில் அதிக மருத்துவ பயன்களைக்கொண்ட செம்பருத்திப்பூவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

HIGHLIGHTS

செம்பருத்திப் பூவிலுள்ள மருத்துவ   குணங்கள் பற்றி தெரியுமா?....படிங்க...
X

செம்பருத்திப் பூ செடியில்  மலர்ந்து காணப்படும் அழகிய பூக்களின் காட்சி  (கோப்பு படம்)

do you know medicinal character of hibiscus?


do you know medicinal character of hibiscus?

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஒரு சில மலர்களும் மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் சித்த மருத்துவத்தில் இவ்வகைப்பூக்கள் அதிகம் பயன்படுகிறது. செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

அழகிய மலர்களில் செம்பருத்தி பூவும் ஒன்று. செம்பருத்திப்பூ மருத்துவ உலகிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. செம்பருத்தியின் வேல், இலை, மொட்டு,பூ எல்லாமே மருத்துவ பயன் மிக்கதாகும்.செம்பருத்தி, பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடியாகும். இதன் பூக்கள் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும். செம்பருத்திப்பூக்கள் இரண்டு வகையாக இருப்பதுண்டு.ஒரு வகைப்பூ, அடுக்கடுக்காகக் காட்சியளிக்கும் மற்றொன்று தனித்தனியாக அகலமாக காட்சியளிக்கும்.

do you know medicinal character of hibiscus?


do you know medicinal character of hibiscus?

செம்பருத்திச் செடி எட்டு அடி உயரம் வரையில் செழித்து வளரக்கூடியது. இந்த மரத்தில் பூக்கள் வருடம் முழுவதும் பூத்துக்கொண்டே இருக்கும். இதன் பூக்கள் மருத்துவத்தில் முக்கியப் பங்கை வகிக்கிறது.

மருத்துவ பயன்கள்

செம்பருத்திப்பூவை பச்சையாகவே சாப்பிடலாம். குழுகுழுப்பாகவும் சிறிது இனிப்பாகவும் இருக்கும். இதன் தளிர்களினால் செய்த கஷாயம் ரத்த புஷ்டியை அளிக்கும். பெண்களுக்கு உண்டாகும் கர்ப்ப வியாதிகளையும் சிறுநீர் சம்பந்தமான சகல நோய்களையும் இந்த பூவின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தலைக்குத் தேய்த்துக்கொள்ளும் தேங்காய் எண்ணெயில் இந்தப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி தைலமாகத் தயாரித்து தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும் கண்களும் குளிர்ச்சி பெறும்.

do you know medicinal character of hibiscus?


do you know medicinal character of hibiscus?

உடல் வலிமைக்கு

ஆண்மை பெருக்கத்திற்கும் உடல் வலிமைக்கும் நல்ல பலனை அளிப்பது செம்பருத்திப்பூவாகும். ஆகையினால் இந்தப் பூவைச் சூரணமாக்கிப் பயன்படுத்தி பலன் பெறலாம். தேவையான அளவு செம்பருத்திப்பூக்களைக் கொண்டு வந்து பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தக் காம்புகளை மட்டும் ஆய்ந்து தனியாக எடுத்துக்கொண்டு வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.

மகரந்தக் காம்புகள் நன்றாக உலர வேண்டியது மிகவும் முக்கியமாகும். உலர்ந்த மகரந்தக் காம்புகளை நன்றாக இடித்து சூரண பதத்திற்கு துாளாக்கிக்கொண்டு அந்தத் துாளை கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். இந்தத் துாளில் வேளைக்கு ஒரு ஸ்பூன் என்ற கணக்கில் காலை மாலை என தினசரி இரண்டு வேளைகள் பசுவின் பாலில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும்.உடல் நல்ல புஷ்டியாகவும் இருக்கும்.

பெண்களுக்கு

புஷ்பவதி ஆகாமல் காலம் கடந்தும் பெண்களுக்கு மூன்று செம்பருத்திப் பூக்களை நெய்யில் வறுத்து சாப்பிடக்கொடுத்து வந்தால் விரைவில் புஷ்பதியாவார்கள். மேலும் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு இருந்தால் இதே முறையைக் கையாண்டால் ரத்தப்போக்கு உடனே நின்றுவிடும்.

உடல் உஷ்ணம் குறைய

உடல் உஷ்ணம் அதிகமாகி விட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு ஆதலின், ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டுவந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாக சுண்டக்காய்ச்சி எடுத்துவைத்துக்கொண்டு குடிநீருக்குப்பதிலாக இதனைப்பயன்படுத்தலாம்.இதனால் உடல் உஷ்ணம் தணித்துவிடும், சாதாரண சுரங்களுக்கும் இந்நீரைக்குடித்து நிவாரணம் பெறலாம்.

வெட்டை நோய்

ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயைச் செம்பருத்திப் பூ குணமாக்குகிறது. இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின்பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டுவந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

do you know medicinal character of hibiscus?


do you know medicinal character of hibiscus?

இருதய பலம் பெற

இருதயம் பலவீனமானவர்களுக்கு பலம் பெற செம்பருத்திப்பூ டானிக் பலனளிக்கிறது. செம்பருத்திப்பூ 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு கண்ணாடிப்பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம்பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி காலையில் வெயிலில் வைக்கவும்.

பின்னர் மாலையில்எடுத்து பிசையவும் .அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்து காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும்.

இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

செம்பருத்தி சர்பத்

க்ஷய ரோகத்தினால் கஷ்டப்படுபவர்கள் செம்பருத்தி சர்பத்தை தொடர்ந்து குடித்து வந்தால் நலம் உண்டாகும். செம்பருத்திப்பூ 100 கிராம் தயார் செய்து கொண்டு ஒரு பாண்டத்தில் போட்டு அதில் இரண்டரை லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி ஒரு லிட்டர் அளவு சுண்டக்காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். அதில் 1200 கிராம் கற்கண்டு சேர்த்து சர்பத்தாகச் செய்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். க்ஷய ரோகத்தினால் அவதிப்படுவர். இந்த செம்பருத்தி சர்ப்பத்தைக்குடித்து வரவும். அத்துடன் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஆறுபூக்கள் வீதம் சாப்பிட்டு வரவும்.

நீர்க்கடுப்பு- கல்லீரல் நோய்களுக்கு

நீர்க்கடுப்பு ,கல்லீரல் தொடர்பான வியாதிகளுக்கு செம்பருத்தி பூவைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தி பயன் பெறலாம்.செம்பருத்திப்பூக்களை 200 கிராம் சேகரித்து இதழ்களை ஆய்ந்துகொண்டு ஆய்ந்த இதழ்களை 150 கிராம் அளவு எடுத்து நன்கு நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.

வாய் அகன்ற கண்ணாடி பாத்திரத்தில் 500கிராம் அளவுக்கு தேனைவிட்டு அதில் உலர்ந்த செம்பருத்திப்பூக்களைப் போட்டு தவறாக கிளறிவிடவும். பின்னர் 50 கிராம் ஏலரிசியை எடுத்து நன்றாக இடித்து சன்னமாக துாளாக்கி, அதனையும் தேன் இட்ட பாத்திரத்தில் சேர்த்து நன்கு கிளறி பாத்திரத்தை நன்கு மூடி வைத்துவிடவும்.

இந்த பாத்திரத்தை 15 நாட்கள் அப்படியே வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். 15 நாட்கள் கழிந்ததும் இதிலிருந்து ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் காலை- மாலையும் இரண்டு வேளையும் சாப்பிட வேண்டும். மருந்து சாப்பிட்டதும் உடனே ஒரு கிளாஸ் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் நீர் தடுப்பு கல்லீரல் போன்ற நோய்கள் குணமாகும்.க்ஷயரோகம் சுவாச காசம் போன்ற வியாதிகளுக்கும் இதுபோன்ற 40 நாட்கள் மருந்து சாப்பிட்டால் குணமாகும்.

பேன்தொல்லை

சில பெண்களுக்கு பேன் பெருந்தொல்லை தரும். ஆதலின் இதுபோன்றோர் இப்பூக்களைப்பறித்து தலையில் வைத்து கட்டிக்கொண்டு இரவு படுத்துக்கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையில் உள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கி விடும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு

சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும் இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்திப் பூவை ஒரு மட்பாண்டத்தில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டிப் பனைவெல்லம் சேர்த்து கொடுத்து வரவேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால் சில நாட்களிலேயே குழந்தையின் வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

நன்றி:சூர்யநாத்

Updated On: 25 Dec 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்