கேன்சருக்கான அறிகுறிகள் என்னென்ன? உங்களுக்கு தெரியுமா?....படிச்சு பாருங்க...

cancer symptoms in tamil மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது கேன்சர்தான். இந்த நோய் என்றாலே நோயாளியே பயந்துபோகிறார். படிச்சு பாருங்களேன்......

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கேன்சருக்கான அறிகுறிகள் என்னென்ன? உங்களுக்கு தெரியுமா?....படிச்சு பாருங்க...
X

புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் காட்டும் படம் (கோப்பு படம்)

cancer symptoms in tamil

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் உயிர்க்கொல்லி நோய் எது என்றால் புற்று நோய்தான். இந்நோயினை ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டு விட்டால் உயிர் பிழைத்துவிடலாம். ஆனால் நோய் முற்றிய பின் அலறி அடித்துக்கொண்டு ஓடினாலும் அவ்வளவுதான்... இதுதான் கேன்சர் எனும் புற்று நோய். எனவே நம் உடல் செயல்பாட்டில் ஏதாவது வித்தியாசம், மாறுபாடு காணப்படுகிறது என்றால் உடனடியாக டாக்டரிடம் சென்று காண்பியுங்கள். அப்போதுதான் நமக்கும் எல்லாம் தெரிய வரும்.... மறந்துடாதீங்க....

புற்றுநோய் என்பதுக் கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பல நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும்,இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன நோய் என்று பெயரிடப்படுகின்றது. கேடு விளைவிக்கா கட்டிகள் உடலின் வேறு பாகங்களுக்குப் பரவுவதில்லை.

cancer symptoms in tamil


நம் உடலின் நுரையீரலில் ஏற்படக்கூடிய கேன்சர் விளக்கும் படம் (கோப்பு படம்)

cancer symptoms in tamil

உடலானது பல வகைப்பட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான உயிரணுக்கள், கழலை அல்லது கட்டி எனப்படும் இழையங்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. தீங்கில்லா கட்டிகளைப் பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, அவை மீண்டும் தோன்றுவது இல்லை. குருதிப் புற்றுநோய் தவிர்த்த ஏனைய புற்று நோய்களில் பொதுவாகக் கட்டிகள் தோன்றும்.

முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்று நோய் உயிரணுக்களின் பரவல் குருதிச் சுற்றோட்டத்தொகுதி வழியாகவோ அல்லது நிணநீர்த் தொகுதி வழியாகவோ பரவக்கூடும். தமனி, சிரை, நுந்துளைக்குழாய்கள் மூலம் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது. இந்தக் குருதியானது புற்று நோய் உயிரணுக்களை உடலின் ஏனைய பகுதிகளுக்குக் கொஉ செல்லக் கூடும். அதேபோல், நிணநீர்த் தொகுதியில், நிணநீர்க் குழியங்கள் (அதாவது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும் வெள்ளை அணுக்கள், நிணநீர்க் குழாய்கள் நிணநீர்க்கணுக்களுக்குப் புற்றுநோய் உயிரணுக்களை எடுத்துச் செல்லக் கூடும். இவ்வாறு கேடு விளைவிக்கும் கட்டிகளில் உள்ள உயிரணுக்கள், முதலில் அருகிலுள்ள இழையங்களுக்குள் ஊடுருவிச் சென்று பின்னர் குருதி அல்லது நிணநீர் ஊடாக உடலின் ஏனைய பகுதிகளுக்குப் பரவுதலை மாற்றிடம் புகல் என்பர். இதனால் புற்று நோய் ஏனைய பகுதிகளிலும் தோன்றும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

cancer symptoms in tamil


உடலின் ரத்த செல்களில் ஏற்பட்டுள்ள கேன்சரை விளக்கும் படம்.... அப்பப்பா.... (கோப்பு படம்)

cancer symptoms in tamil

புகையிலைப் பயன்படுத்துவதால் 22% சதவீத புற்று நோய் இறப்புகளுக்குக் காரணமாகின்றது இன்னுமொரு 10% இறப்புக்கு உடற் பருமன், திட்ட உணவு இல்லாமை. போதியளவு உடற் பயிற்சி இல்லாமை, அளவுக்கதிகமான மது அருந்துதல் போன்றன காரணமாகின்றன.ஏனைய காரணிகளாக சில நோய்த்தொற்றுக்கள், அயனியாக்கும் கதிர், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்குக் காரணமான நச்சுப் பொருட்கள் இருக்கின்றன.வளர்ந்துவரும் நாடுகளில், 15% மான புற்று நோய்க்குக் காரணமாக, அல்லது புற்று நோயைத் தூண்டக்கூடிய காரணியாக மனித சடைப்புத்துத் தீ நுண்மம், , எச்.ஐ.வி, ஈரல் அழற்சி பி, ஈரல் அழற்சி சி எலிக்கோபேக்டர் பைலோரி என்னும் பக்டீரியா போன்றன காணப்படுகின்றன .இந்தக் காரணிகள் யாவும், பகுதியாகவேனும், உயிரணுக்களிலிருக்கும் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

புற்று நோய் ஆரம்பிப்பதற்குப் பல மரபணுப் பிறழ்வுகள் நடைபெற வேண்டும். கிட்டத்தட்ட 5–10% மான புற்று நோய்கள், பாரம்பரியமாக பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் இயல்பிலிருந்து மாறுபட்ட மரபணுக்களில் இருந்து வருபவையாக இருக்கின்றன. உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் புரதங்களில் அல்லது புற்று நோய் வரமால் அடக்கி வைக்கும் மரபணுக்களில் ஏற்படும் இழப்புகள் அல்லது பிறழ்வுகளினால், அவற்றின் தொழிற்பாடு இல்லாமல் போய் அல்லது குறைந்து, உயிரணு பிரிதல் கட்டுப்பாட்டை இழந்து, அல்லது ஒருங்கமைவுகள்(இல்லாமல், உயிரணுப் பெருக்கம் அடைந்து புற்று நோய் உருவாகிறது. சில சமயம் புற்றுநோயை உருவாக்கும் ஆற்றல் கொண்ட மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள், அவற்றின் செயற்பாட்டை அதிகரிப்பதனாலும் உயிரணு பிரிதல் கட்டுப்பாட்டை இழந்து, அல்லது ஒருங்கமைவுகள் இல்லாமல், உயிரணுப் பெருக்கம் அடைந்து புற்று நோய் உருவாகிறது.

தடுக்கும் வழிகள்

புற்று நோயைத் தடுப்பதில் புகை பிடித்தல் செய்யாமல் இருத்தல், அளவான உடல்நிறையைப் பேணல், அளவுக்கதிகமாக மதுசாரம் பயன்படுத்தாமை, அதிகளவில் காய்கறிகள், பழங்கள், முழுமையான தானியங்கள் போன்றவற்றை உண்ணுதல், அளவுக்கதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவற்றை உண்ணுவதைத் தவிர்த்தல், சூரிய ஒளிக்கு அளவுக்கதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருத்தல், சில தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பு மருந்தேற்றம் செய்துகொள்ளல் போன்றன முக்கிய பங்கு வகிக்கின்றனகருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் போன்றவற்றை திறத் தணிக்கைச் சோதனைகள் மூலம் ஆரம்ப நிலையில் கண்டறிவதால் நோயிலிருந்து மீள்வது இலகுவாக இருக்கும்.மார்பகப் புற்றுநோயைத் திறத் தணிக்கைச் சோதனை மூலம் கண்டறிவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன,

புற்றுநோய் அறிகுறிகள்

புற்றுநோய் மாற்றிடம் புகலுக்கான அறிகுறிகள் கட்டி அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும்.புற்றுநோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. கட்டி தோன்றும் நிலை அல்லது புண்ணாகும் நிலையிலேயே உணர்குறிகள் மற்றும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். என்ன வகைப் புற்றுநோய், எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகள் மாறுபடும். சில அறிகுறிகள் குறிப்பிடத்தக்கவையாக அல்லது திட்டவட்டமானவையாக இருக்கும். ஆனால் பல அறிகுறிகள், வேறு நோய்களிலும் தோன்றக்கூடியனவாக இருக்கும். அதனால் இது வேறு நோய் நிலைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. புற்றுநோய் என அறுதி ஆய்வு செய்யப்படும்போது மனிதர்கள் அதிக கவலை மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவர். புற்று நோயாளிகளில் தற்கொலைக்கான ஆபத்து கிட்டத்தட்ட இரட்டிப்பாக இருப்பதாக அறியப்படுகின்றது

cancer symptoms in tamil


கழுத்து பகுதியில் தைராய்டில் ஏற்படக்கூடிய புற்று நோய் (கோப்பு படம்)

புற்றுநோய் அறிகுறிகளை மூன்று குழுக்களாக பிரிக்கலாம்

முறை பிறழ்ந்த கட்டிகள் அல்லது வீக்கம் இருக்கும் இடத்தைப் பொறுத்து இவ்வறிகுறிகள் தோன்றும். எடுத்துக்காட்டுகள்:நுரையீரல் புற்றுநோயில் ஏற்படும் கட்டி மூச்சுக்குழல் வழியை அடைப்பதனால், இருமல், நுரையீரல் அழற்சி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.உணவுக்குழாய் புற்றுநோயில், உணவுக்குழாயை ஒடுக்குவதால், அல்லது குறுகச் செய்வதனால், உணவை விழுங்குவது கடினமாதல், அல்லது உணவுக்குழாய் அழற்சி போன்ற அறிகுறிகள் தோன்றும்.

பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் ஏற்படின், மனித இரையகக் குடற்பாதையில் ஏற்படும் ஒடுக்கம் குடல் தொடர்பான விடயங்களில் ஒழுங்கின்மையைக் காட்டும்.மார்பகப் புற்றுநோய், விந்தகப் புற்றுநோயில் கட்டிகள் தெளிவாகத் தெரியும்.

கட்டிகள் தோன்றும் ஆரம்ப நிலையில் வலி இருப்பதில்லை. ஆனால், நோய் தீவிரமடையும் நிலையில், குறிப்பிட்ட இடத்தில் வலி தோன்றும்.கட்டிகள் புண்ணானால், ரத்தக்கசிவு ஏற்படலாம். நுரையீரல் புற்றுநோயில் இவ்வாறு ஏற்படின் இருமும்போது குருதி வெளியேறும். குடலில் புற்றுநோயெனில், குருதிச்சோகை அல்லது மலவாய் வழியான குருதிப்பெருக்கு ஏற்படலாம். சிறுநீர்ப்பைப் புற்று நோயெனின், சிறுநீருடன் குருதி வெளியேறலாம். கருப்பைப் புற்றுநோய் அல்லது கருப்பை வாய்ப் புற்றுநோய் என்றால் யோனி ஊடாக குருதிப்பெருக்கு ஏற்படும்.

இது நேரடியாகவோ, அல்லது மாற்றிடம் புகல் பரவலுக்கோ தொடர்பில்லாத பொதுவான அறிகுறிகளைக் குறிக்கும். எதிர்பார்க்காத உடல்நிறைக் குறைவு, காய்ச்சல், பசியின்மை, உடல் மெலிதல், அளவுக்கதிகமான களைப்பு, குருதிச்சோகை, தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்றன, ரத்தப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் போன்றவற்றில், தொடர்ந்து விடாமல் காய்ச்சல் இருக்கும்,

மாற்றிடம் புகலுக்கான அறிகுறிகள்

புற்றுநோயானது தோன்றிய இடத்திலிருந்து, நிணநீர்த் தொகுதி மூலமாக, அருகிலுள்ள நிணநீர்க்கணுக்களுக்குப் பரவலாம். இதனைத் தொட்டுணர முடியும். குருதிச்சுற்றோட்டத் தொகுதி மூலமாக, தூரமாக உள்ள வேறு உறுப்புகளுக்குப் பரவலாம். இந்த இரு நிகழ்வுகளும் மாற்றிடம் புகல் எனப்படுகிறது. இதன் விளைவாக கல்லீரல், மண்ணீரல் என்பவற்றில் வீக்கம் தோன்றும். இவ்வாறு கல்லீரல், மண்ணீரல் வீக்கமடையும்போது, வயிற்றில் இவற்றை உணர முடியும். இவை தவிர எலும்பு, எலும்பு மச்சைகளுக்குப் பரவி இருப்பின், வலி அல்லது எலும்பு உடைவு ஏற்படலாம். அத்துடன் சில நரம்பியல் அறிகுறிகள் தோன்றலாம்,

புறவணியிழையப் புற்றுநோய் (Carcinoma): புறவணியிழையத்தில் இருந்து உருவாகும் புற்றுநோய் இப்பெயரில் அழைக்கப்படும். மிகப் பரவலாகக் காணப்படும் புற்றுநோய்கள் இந்த வகைக்குள் அடங்கும். அநேகமான மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், கணையப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய் எல்லாம் இந்த வகையையே சாரும்.

இணைப்பிழையப் புற்றுநோய் (Sarcoma): இணைப்பிழையத்தை உருவாக்கும் உயிரணுக்களை மூலமாகக் கொண்டு உருவாகும் புற்றுநோய்கள் இந்த வகையைச் சாரும். எடுத்துக்காட்டாக எலும்பு, குருத்தெலும்பு , தசை, குருதிக்குழல், கொழுப்பிழையம், நரம்பு போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களாகும். இவ்வகை இழையங்கள், முளைய விருத்தியின்போது எலும்பு மச்சைக்கு வெளியாக இருக்கும் இணைப்பிழைய உயிரணுக்களில் இருந்து விருத்தியாகும்.

நிணநீர்ப் புற்றுநோயும், குருதிப் புற்றுநோயும்(Lymphoma and Leukemia): எலும்பு மச்சையிலிருந்து வெளியேறி, நிணநீர்க் கணுக்களிலும், குருதியிலும் முதிர்ச்சியடைந்து குருதியின் கூறுகளை உருவாக்கும் குருத்தணுக்களைத் தோற்றுவாயாகக் கொண்ட புற்றுநோய் வகைகளாகும். குருதியை உருவாக்கும் உயிரணுக்களில், நிணநீர்க் கணுக்களில் முதிர்ச்சியடையும் நிணநீர்க் குழியங்கள் தொடர்பான புற்றுநோய்கள் நிணநீர்ப் புற்றுநோயெனவும், பொதுவாக வெண்குருதியணுக்களில் ஏற்படும் புற்றுநோய்கள் குருதிப் புற்றுநோயெனவும் அழைக்கப்படும்.

நுரையீரல் புற்று நோயானது புகை பிடித்தலுடன் நெருங்கிய தொடர்புடையது

புற்றுநோய் ஊக்கிகளான சில வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட வகைப் புற்றுநோய் உருவாதலை ஊக்குவிக்கின்றன. எடுத்துக்காட்டாக புகைப் பிடித்தல் 90% சதவீத நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும்.அத்துடன் புகைப்பிடித்தலானது குரல்வளை, தலை, கழுத்து, வயிறு, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், உணவுக்குழாய், கணையம் போன்றவற்றிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம். புகையிலையானது ஐம்பதுக்கு மேற்பட்ட புற்றுநோய் ஊக்கிகளைக் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது.

புகையிலையானது உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்பில் ஐந்தில் ஒரு பங்குக்கும், வளர்ந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் காரணமாக இருக்கின்றது.

உணவும் உடற்பயிற்சியும்

உணவு, அமர்ந்தியங்கும் வாழ்முறை, உடற் பருமன் என்பன புற்றுநோய் இறப்புடன் 30-35% தொடர்புடையதாக இருக்கின்றது.ஐக்கிய ராச்சியத்தில், 5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை உள்ளடக்கிச் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவானது, அதிகரித்த உடல் நிறை குறியீட்டெண் ஆனது 10 க்கு மேற்பட்ட புற்றுநோய் வகைகளுடன் தொடர்புபட்டு இருப்பதாகவும், அந் நாட்டின் ஆண்டொன்றிற்கு 12,000 மக்கள் இக்காரணத்தால் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும் குறிப்பிடுகிறது அமர்ந்தியங்கும் வாழ்முறை காரணமாக உடற் பருமன் அதிகரிப்பது மட்டுமன்றி, அது நோய் எதிர்ப்பாற்றல் முறைமை, மற்றும் அகச்சுரப்பித் தொகுதி தொழிற்பாட்டிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதனால் புற்றுநோய்க்கான சூழிடரை அதிகரிக்கிறதுகிட்டத்தட்ட அரைவாசிக்கும் அதிகமான உடற்பருமன் ஏற்படுவதற்குக் காரணமாக குறைந்த காய்கறி மற்றும் உடல்நலம் தரும் உணவுகளை உண்ணல் என்பதைக் காட்டிலும், அளவுக்கதிகமான உணவை உட்கொள்ளலே இருக்கின்றது.

ரேடான் வளிமமும் புகைத்தலும் இணைந்து சூழிடர் காரணியாக மாறுதல்.கதிரியக்கமானது உடலின் எந்தப் பகுதியிலும், எந்த ஒரு மிருகத்திலும், எந்த வயதிலும் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக இருக்கின்றது. கதிரியக்கத் தூண்டுதலால் ஏற்படும் ரத்தப் புற்றுநோய் பெரியவர்களை விடக் குழந்தைகளில் இரட்டிப்பாக இருப்பதாகவும், பிறப்பிற்கு முன்னர் கதிரியக்கத்திற்கு வெளிப்படுத்தப்படும்போது, சூழிடர் 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அறியப்படுகின்றது

மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அயனியாக்கும் கதிர்களினால் ஏற்படும் பாதிப்புக் குறைவாக இருப்பினும், கதிரியக்கத் தூண்டலால் ஏற்படக்கூடிய புற்றுநோயில் இவற்றின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. ஒரு குறிப்பிட்ட புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படும் அயனியாக்கும் கதிரானது, வேறு ஒரு இரண்டாம் நிலை புற்றுநோயைத் தோற்றுவிக்கலாம் என நம்பப்படுகின்றது.இவ்வகையான கதிரியக்கம் மருத்துவப் படிமவியலிலும் பயன்படுகின்றது

சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களுக்குத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டால், மெலனோமா, மற்றும் வேறு தோல் புற்றுநோய்கள் உருவாகலாம் உலகில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் வகையான, மெலனோமா வகையல்லாத ஏனைய தோல் புற்று நோய்களுக்கான காரணியாக புற ஊதாக்கதிர், முக்கியமாக அயனியாக்கமற்ற, நடுத்தர அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர் இருப்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

செல்லிடத் தொலைபேசிகளிலிருந்து பெறப்படும் அயனியாக்கமற்ற, வானொலி அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு, மின்திறன் செலுத்தல், மற்றும் அவை போன்ற புற்று நோயைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் உள்ளது.

cancer symptoms in tamil


நம் உடல் உறுப்பின் செல்களில் புற்று நோய் பாதித்த செல் (வண்ணமிடப்பட்டுள்ளது) மற்றது சாதாரணசெல்கள் (கோப்பு படம்)

cancer symptoms in tamil

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினைக் கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போன்றவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியுமா?

புகையிலை பயன்படுத்தக்கூடாது.கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள் யாவை?

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.

குணப்படாத புண்கள்.

கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்னை.

விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.இயல்புக்கு மாறாக ரத்தப்போக்கு மற்றும் ரத்த கசிவுபாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்

புற்று நோய் வகைகள்

புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலன்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என வழங்குகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

Updated On: 21 Dec 2022 10:50 AM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 2. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 3. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 4. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 5. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 6. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 7. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்
 8. சோழவந்தான்
  பாலமேடு முத்தையா சுவாமி கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா
 9. இந்தியா
  சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு?
 10. கோவை மாநகர்
  கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே பெண்கள் நடத்திய கோவில்...