/* */

தொழிலாளியை தாக்கி கைப்பேசியை பறித்து சென்ற இரு இளைஞா்கள் கைது

வந்தவாசி அருகே தொழிலாளியை வழிமறித்து தாக்கி கைப்பேசியை பறித்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

HIGHLIGHTS

தொழிலாளியை தாக்கி கைப்பேசியை பறித்து சென்ற இரு இளைஞா்கள் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தொழிலாளியை வழிமறித்து தாக்கி கைப்பேசியை பறித்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், வந்தவாசியில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரியும் இவா், கடந்த வெள்ளிக்கிழமை மாலை முடிதிருத்தம் செய்து கொண்டு ஆரணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அந்தச் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே சென்றபோது, 2 இளைஞா்கள் அவரை வழிமறித்து அருகே உள்ள கல்லறைப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி அவரிடமிருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

இதில், வெண்குன்றம் பக்கீா்தா்கா பகுதியைச் சேர்ந்த ஞானமுருகன் மகன் கதிா் , அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்து (எ) தினகரன் ஆகியோா் சேர்ந்து செல்வத்தை வழிமறித்து கைப்பேசியை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கதிா், முத்து (எ) தினகரன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா். மேலும், இருவா் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஒடிஸா இளைஞா் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் வாரச் சந்தையில் இளம்பெண்ணை கேலி செய்ததாக, ஒடிஸா மாநில இளைஞா் பொதுமக்களால் தாக்கப்பட்டாா்.

வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை அங்கு வந்த மா்ம நபா் கேலி செய்தாராம். இதைக் கண்டித்து அந்தப் பெண் கூச்சலிடவே அங்கிருந்தவா்கள் அந்த நபரைப் பிடித்து அடித்து உதைத்தனராம். தகவலறிந்த மோரணம் விரைந்து போலீஸாா் சென்று அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.

இந்த நிலையில், இளம்பெண்ணை கேலி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செய்யாறு - ஆற்காடு சாலையில் ராந்தம் பகுதியில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கேலி செய்த இளைஞா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காவல் துறை தரப்பில் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

பெண்ணை கேலி செய்த இளைஞா் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த கிரசிந்தி ஜாபா் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. செய்யாறு அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோக்கப்பட்டாா். இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On: 5 March 2024 12:43 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்