/* */

புகை உங்களுக்கு பகை - மக்கள் நல்வாழ்வுத் துறை சொன்னது.

புகை உங்களுக்கு பகை - மக்கள் நல்வாழ்வுத் துறை சொன்னது.
X

-பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் நெறிமுறைகளின்படி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழி முறைகளை வகுத்துள்ளது. நோய் தொற்றுற்றுக்கு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தாங்களாகவே சுய வைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் தவறாகும்.

அவ்வாறான சிகிச்சைமுறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அழுத்தமான காற்று புகை போடுதல் என்ற ஒன்று தற்போது பொது மக்களிடையே வைரலாக பரவி வருகிறது இதன் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று அவர்களின் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது மட்டுமல்லாமல் அவர்கள் வாயைத் திறந்து புகையை பிடிக்கும் பொழுது வைரஸ் கிருமியானது அருகில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும் வாய்ப்பும் உள்ளது.

இது மருத்துவ நெறிமுறைகளின்படி இதனை மருத்துவ சிகிச்சையாக கருதமுடியாது. நோய்த்தொற்று ஏற்பட்ட உடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டுமுறை வைத்தியம் செய்வதை விட்டுவிட்டு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்

தமிழகம் முழுவதும் கோதிக் நோயாளிகளுக்காக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த கொரோனா வைரஸ் என்பது புதுமையான நோயாகவும் இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் தன்மை உடையதாகவும் இருப்பதாலும் மருத்துவருடைய அறிவுரை இல்லாமல் புகை போடுதல் என்பததை பயன்படுத்தக்கூடாது.

சித்தா கோவிட் கேர் மையத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ முறையானது மருத்துவர்களின் மேற்பார்வையில் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மாநில அரசு மருத்துவக் குழு ஒன்று அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி உள்மருந்து மற்றும் பிற மருத்துவ முறைகளை கூறியுள்ளது.

எனவே பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




Updated On: 17 May 2021 7:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!