/* */

'வாரிசு' துவக்கமே வசூல் மழை; பட்டையக் கிளப்புது 'ப்ரீ புக்கிங்'

vijay varisu overseas pre booking collection-விஜய் நடிப்பில் வெளிவர உள்ள ‘வாரிசு’ படத்துக்கு, ‘ப்ரீ புக்கிங்’ ஆக ரூ. 165 கோடி வசூலாகி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

வாரிசு துவக்கமே வசூல் மழை; பட்டையக் கிளப்புது ப்ரீ புக்கிங்
X

vijay varisu overseas pre booking collection- நடிகர் விஜய்.

vijay varisu overseas pre booking collection, Varisu movie overseas advance booking collection- நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' படம் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர். காரணம், இதற்கு முன் அவரது நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' சரியான வசூலை பெறவில்லை, விமர்சனமும் மோசமாக வந்தது.

கடந்த டிசம்பர் 24ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்ற விஜய்யின் 'வாரிசு' பட ஆடியோ வெளியீட்டு விழா பெரிய அளவில் ஹிட்டானது. கடந்த ஜனவரி 1ம் தேதி நியூஇயர் ஸ்பெஷலாக ஆடியோ வெளியீட்டு விழாவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. படத்தின் பாடல்கள் வரை அனைத்தும் ரிலீஸ் ஆனது, ஆனால் ட்ரெய்லர் இன்னும் வரவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்ய விஜய் பெயர் ஒன்றே போதுமானதாக உள்ளது. இயக்குநர் வம்சி, நடிகை ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம், பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ட்ரெய்லர் இன்னும் வரவே இல்லை, ஆனால், வெளிநாடுகளில் இதுவரை விஜய்யின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டுமே ரூ. 1.65 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. இந்த விவரம் கூட ஒரு சில இடங்களை வைத்தே கூறப்பட்டுள்ளதாம்.


தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் மட்டுமே, வசூல் மன்னர்களாக விளங்கி வருகின்றனர். அந்த காலத்தில், எம்ஜிஆர் தான் வசூல் சக்கரவர்த்தி. அடுத்த நிலையில், சிவாஜி இருந்தார். அதன்பிறகு, ரஜினி மற்றும் கமல் படங்கள், வசூலில் அள்ளிக் குவித்தன. இடைப்பட்ட காலத்தில், 'மக்கள் நாயகன்' என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ராமராஜன் படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது. உதாரணமாக, 'கரகாட்டக்காரன்' படத்தை சொல்லலாம்.

அந்த வகையில், சமீபகாலமாக விஜய், அஜீத், சிவகார்த்திகேயன் படங்கள் அந்த வகையில் முன்னணி பெற்றது. அதேபோல், நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' கடந்தாண்டு, 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் மழை பொழிந்தது.


அடுத்த இடத்தில், நடிகர் கமல் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படம், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆனது. அதுபோல், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'காந்தாரா', 'லவ்டுடே' போன்ற படங்களும் 200 கோடி ரூபாய்க்கு மேல், வசூலில் சாதனை படைத்தது.

இந்நிலையில், பொங்கலுக்கு வெளிவர உள்ள 'வாரிசு' படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறி வருவதால், படம் ரிலீஸான பிறகு, பல நுாறு கோடிகளை தொடும் வாய்ப்பு இருப்பதாக, விஜய் ரசிகர்கள் உற்சாகமாக இருந்து வருகின்றனர்.

Updated On: 4 Jan 2023 6:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது