/* */

நடிகர் விஜய் ஆக நடித்த 'டூப்' விஜய் - வைரலாகும் போட்டோ

vijay body double in varisu movie- ‘வாரிசு’ படத்தில், நடிகர் விஜய்க்கு பதிலாக, சில காட்சிகளில் நடித்த ‘டூப்’ நடிகரின் புகைப்படம் வெளியாகி, வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

நடிகர் விஜய் ஆக நடித்த டூப் விஜய் - வைரலாகும் போட்டோ
X

vijay body double in varisu movie- ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்

Vijay Use A Body Double In Varisu Movie, vijay body double in varisu movie- விஜய்யின் 'வாரிசு' படம் கடந்த ஜனவரி 11ம் தேதி திரைக்கு வந்தது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான இந்த படம், தற்போது 300 கோடி ரூபாய் வசூலை கடந்து இருப்பதாக அறிவிப்பு சமீபத்தில் வந்தது. போட்டிக்கு ரிலீஸ் ஆன 'துணிவு' படத்தை விட, 'வாரிசு' பட மொத்த வசூல்தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


'துணிவு' படத்தில் அஜித் சில காட்சிகளில். 'டூப்' பயன்படுத்தியதாக முன்பே விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது 'வாரிசு' விஜய்க்கும் ஒருவர் சண்டை காட்சிகளில், 'டூப்' ஆக நடித்து இருக்கிறாராம். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.


'வாரிசு' படத்தில் விஜய்க்கு 'டூப்'பாக நடித்தவரின் புகைப்படம், தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி, வைரலாகி வருகிறது. சமீபத்தில், விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த நடிப்பில் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான 'பீஸ்ட்' மற்றும் 'வாரிசு' என இரண்டும் ரசிகர்களை திருப்த்திப்படுத்த தவறிய நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால்தான். 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக, லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர்.


இவர்கள் காஷ்மீர் செல்கையில், படக்குழுவின் பல புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும், பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வந்தனர்.

இந்நிலையில்தான், படத்தில் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. அந்த ப்ரோமோவில் காலை காட்சியில் சாக்கலேட் தயாரிக்கும் விஜய், இரவு நேரத்தில் வாள் ஒன்றை தயாரிக்கிறார். பின்னர் அங்கு பல கார்கள் வருகின்றன. விஜய் வாளில் உள்ள சாக்கலேட்டை சாப்பிடும் படி அந்த ப்ரோமோ முடிந்தது. மேலும், இந்த படத்திற்கு ' leo ' என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


நடிகர் விஜய்க்கு 'டூப்'பாக நடித்த நடிகருடன், 'துணிவு' படத்தின் இயக்குநர் வம்சி

மேலும், இப்படம் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' மற்றும் 'வாரிசு' படத்திற்கு பிறகு நடிகர் விஜய்க்கு மாஸ் படமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் "வாரிசு" படத்துடன் ஒன்றாக, பொங்கலுக்கு வெளியாகிய அஜித்தின் "துணிவு" படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் 'துணிவு' படத்தில் வரும் சாகச காட்சிகளில் அஜித்திற்கு பதிலாக 'டூப்' நடித்திருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பல விதமான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த தகவலை பொய்யானது என்றும் அஜித் தான் முழுக்க முழுக்க 'துணிவு' படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

மேலும் 'துணிவு' படத்தின் கதாநாயகியான மஞ்சு வாரியாரும், 'துணிவு' படத்தில் நடித்த பிக் பாஸ் பிரபலங்கள் ஆமீர் மற்றும் பாவனி என பலர் படத்தில் வரும் 'ஜெட்ஸ்கி' காட்சியில் அஜித் தான் நடித்திருக்கிறார் என்று பேட்டிகளில் கூறிவருவது குறிப்பிடதக்கது.

இப்படிபட்ட நிலையில் தான் 'துணிவு' படத்துடன் வெளியாகிய 'வாரிசு' படத்தில் விஜய்க்கு 'டூப்' நடித்துள்ளதாக ஒரு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Updated On: 9 Feb 2023 7:40 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...