/* */

படங்களின் தொடர் தோல்வி; அம்மனை வழிபட்ட நடிகை பூஜா ஹெக்டே

pooja hegde latest news- தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ படங்களில் நடித்த பூஜா ஹெக்டே வின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இதையடுத்து, அவர் பெத்தம்மா அம்மனை வழிபட்டார்.

HIGHLIGHTS

படங்களின் தொடர் தோல்வி; அம்மனை வழிபட்ட நடிகை பூஜா ஹெக்டே
X

pooja hegde latest news- நடிகை பூஜா ஹெக்டே

actress pooja hegde visited the sri peddamma talli temple, pooja hegde latest news- பூஜா ஹெக்டே, ஐதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலில் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டார்.

தமிழில் ஜீவா ஜோடியாக 'முகமூடி' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே. தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக, தற்போது இருக்கிறார் பூஜா ஹெக்டே. விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படம் தமிழில் வெளிவந்தது. இதில், பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்தார்.


தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரனுடன் இணைந்து 'ஆர்ச்சர்யா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுடனும் கைகோர்த்துள்ளார் பூஜா. 'கபி ஈத் கபி தீவாளி' என்னும் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா நடித்தார். இப்படம் 2014ம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வீரம்' படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து, பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவரது படங்கள் தொடர்ந்து நல்ல வசூல் பார்த்தன. இந்த நிலையில் கடந்தாண்டு, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான 3 படங்கள் தோல்வி அடைந்தன. பிரபாஸ் ஜோடியாக நடித்த 'ராதே ஷியாம்' படத்தை அதிக செலவில் எடுத்து இருந்தனர். பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தி இருந்தனர். இந்த படத்தின் தோல்வி பூஜா ஹெக்டேவுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது.


இந்தியில் ரன்வீர் கபூடன் நடித்த 'சர்க்கஸ்' படமும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பூஜா ஹெக்டே ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற பெத்தம்மா கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டார். அங்கு வேத பண்டிதர்களை சந்தித்து ஆசிர்வாதமும் பெற்றார். இந்த ஆண்டு அவர் நடிக்கும் படங்கள் வெற்றிபெற வேண்டி அம்மனை தரிசித்ததாக கூறுகின்றனர். கோவிலுக்கு வந்த பூஜா ஹெக்டேவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவரோடு செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

சினிமா உலகை பொருத்தவரை, ஓடுகிற குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவர் என்ற பழமொழியை போல, வெற்றி பெறும் படங்களில் நடித்த நடிகர், நடிகைகளுக்கே மீண்டும், மீண்டும் பட வாய்ப்புகள் அமையும். அப்போதுதான், சினிமா உலகில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். ஆனால், தொடர்ந்து தோல்வி படங்களாக ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ அமைந்தால், அவர்கள் ராசியில்லாதவர்களாக கருதப்படுவர். அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்காது.


தமிழில் பூஜா ஹெக்டே நடித்த 'முகமூடி', 'பீஸ்ட்' படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு விஜய், ஜீவா இருவருமே, தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்களாக இருந்தும், படத்தில் பூஜா ஹெக்டே பெரிய அளவில் பேசப்படவில்லை. எனவே, இனி வரும் படங்களில் இந்த நிலை நீடிக்காமல் தடுக்க, பெத்தம்மா அம்மனை வழிபட்டிருக்கிறார் பூஜா ஹெக்டே.

Updated On: 14 Jan 2023 12:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்