/* */

ரிலீஸ் ஆன, மூன்று நாளில் ரூ. 200 கோடியை வசூலித்த 'பதான்'

Pathaan Day 3 Box Office Collection- நடிகர் ஷாருக்கான் நடித்த 'பதான்' படம், ரிலீஸ் ஆன மூன்று நாட்களில் ரூ. 200 கோடியை வசூலித்துள்ளது.

HIGHLIGHTS

ரிலீஸ் ஆன, மூன்று நாளில் ரூ. 200 கோடியை வசூலித்த பதான்
X

Pathaan Day 3 Box Office Collection- மூன்று நாட்களாக வசூலில் பட்டையக் கிளப்பும் ‘பதான்’

pathan box office collection day 3, Pathaan Day 3 Box Office Collection- பாலிவுட் சினிமாவில் கொரோனாவிற்கு பிறகு எந்த படங்கள் வெளியானாலும் சரியான வசூலை பெறுவதில்லை. அமீர்கானின் லால் சிங் சத்தா, ரன்பீர்-ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்த்ரா என பெரிய நடிகர்களின் படங்கள் வந்தும் சரியான வரவேற்பு இல்லை. வசூலும் ஒவ்வொரு படத்திற்கு படு மோசமாக இருந்தது.


தற்போது பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் வெளியாகியுள்ளது. ஒரு சில இடங்களில் படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், (ஜனவரி 25) இப்படம் பிரமாண்டமாக வெளியாகி இருந்தது. முதல் நாள் முடிவில் படம் ரூ. 100 கோடி வரை வசூலித்த நிலையில், மூன்று நாட்களில், மொத்த வசூல் 200 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.


பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் பதான் படம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக்கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் கானும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரமாண்டமாக வெளியானது. இந்த நிலையில் ஷாருக்கின் 'பதான்' படம் ஓப்பனிங் நாளில், நூறு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


'பதான்' திரைப்படம் சர்வதேச அளவில், முதல் நாள் மட்டுமே 100 கோடி வசூல் செய்து, ஒரு அற்புதமான ஓப்பனிங் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பம்பர் அட்வான்ஸ் புக்கிங்கின் பெரும் பலனை 'பதான்' பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஷாருக்கானின் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் களைக்கட்டி உள்ளது. சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த 'பதான்' முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 55 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

'பதான்' படம் வெளியான முதல் நாளிலேயே வசூல் ரீதியாக அசத்தியுள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு வெளியான வார் திரைப்படம் 50 கோடியும், 2022ம் ஆண்டு வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் 52 கோடியையும் வசூல் செய்தது. அந்த வகையில் பதான் திரைப்படம் சர்வதேச அளவில் முதல் நாள் மட்டுமே 100 கோடி வசூல் செய்து ஒரு அற்புதமான ஓப்பனிங் பெற்றுள்ளது. மூன்று நாட்களில், ரூ. 200 கோடியை கடந்து, சாதனை படைத்துள்ளது.


இதனிடையே ஷாருக்கான் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பதான் படத்தின் மூலம், மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால், இப்படத்திற்கான முன்பதிவுகள் அமோகமாக விற்று வருகிறது. அவர் கடைசியாக 2018 ல் வெளியான 'ஜீரோ' திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில், ஷாருக்கான் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை பெரிய திரையில் பார்த்து திருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Jan 2023 10:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...