/* */

தேவிகா-ராணி சௌத்ரி என்ற இயற்பெயர் கொண்ட தேவிகா-ராணி பிறந்த நாளின்று

இந்திய சினிமாவில் முதன் முதலாக லிப் லாக் கிஸ் கொடுத்து அதிர்வலையை ஏற்படுத்திய தேவிகா ராணியின் பிறந்த நாளின்று

HIGHLIGHTS

தேவிகா-ராணி சௌத்ரி என்ற இயற்பெயர் கொண்ட தேவிகா-ராணி பிறந்த நாளின்று
X

இந்திய சினிமாவில் முதன் முதலாக லிப் லாக் கிஸ் கொடுத்து அதிர்வலையை ஏற்படுத்திய 'தேவிகா-ராணி சௌத்ரி' என்ற இயற்பெயர் கொண்டதேவிகா ராணி பிறந்த நாளின்று

'தேவிகா-ராணி சௌத்ரி' என்ற இயற்பெயர் கொண்ட தேவிகா-ராணி 1908 ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ம் நாள், இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில், எம்.என் சௌத்ரி என்பவருக்கும், லீலாவுக்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை மதராசின் முதல் இந்திய சீஃப் சர்ஜன் டாக்டராக பணியாற்றியவர். அதுமட்டுமல்லாமல், இவருடைய குடும்பம் 'நோபல் பரிசு' பெற்ற ரவீந்தரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையதாகும்.

சின்ன வயசிலேயே சிறந்த மாணவியாக விளங்கிய இவர், 1920 ம் ஆண்டு தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு லண்டனில், ரேடாவில் ஸ்காலர்ஷிப் பெற்ற அவர், ஐக்கிய ராஜ்யத்தின் நாடகக் கலைக்கான வேந்திய அகாதமியிலும் மற்றும் வேந்திய இசை அகாடமியிலும் பயின்றார். அவர் எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பெற்றது மட்டுமல்லாமல், கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்விக்கற்று வந்தார். இங்குதான் இவருடைய பல வெற்றித் திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய நிரஞ்சன் பால் என்பவரை சந்தித்தார்.

1929 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான இமான்ஷூ ராயைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு தன்னுடைய திரைப்படங்களில் நடித்து வந்த நஜம் உல் அசனுடன் ஏற்பட்ட காதலால், 1936 ஆம் ஆண்டு தேவிகா ராணி நஜம் உல் அசனுடன் இணைந்தார். ஆனாலும், அவர் மீண்டும் தன்னுடைய கணவரான இமான்ஷூ ராவிடமே வந்து சேர்ந்தார். பிறகு, தன்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு, 1945 ஆம் ஆண்டு இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் செய்துக் கொண்டார்.

1933 ஆம் ஆண்டு வெளிவந்த கர்மா திரைப்படத்தில் தன் கணவருடன் இணைந்து நடித்தார். தனது கணவரான இமான்ஷூ ராயுடன் நடித்த "கர்மா" என்ற திரைப்படத்தில் நீண்ட நேரம் இதழோடு இதழ் முத்தக்காட்சியில் நடித்திருப்பார். இந்திய சினிமாவில், இதற்கு முன் எந்த சினிமாவிலும் முத்தக்காட்சி எடுக்கப்பட்டது கிடையாது. இந்தக் காட்சி, இக்காலக் கதாநாயகிகளுக்குப் போட்டிபோடும் வகையில் நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

1934 ஆம் ஆண்டு தன்னுடைய கணவருடன் இணைந்து "பம்பாய் டாக்கிஸ்" என்ற திரைப்படத்தலத்தை நிறுவினார். அந்தக் காலக்கட்டத்தில், பாம்பே டாக்கிஸின் வருகையால், இந்திய திரைப்படங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்ததாக அமைந்தது. 'அச்சுத் கன்யா', 'ஹமாரி பாத்' (1943), 'துர்கா' (1939), நிர்மலா' '(1938), 'வசன்' (1938), 'இஜத்' (1937), 'ஜீவன் ப்ரபாட்' (1937) போன்ற திரைப்படங்களில் நடித்த தேவகா-ராணி அவர்கள், இந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட நடிகை என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

1940 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் இமான்ஷூ ராய் இறந்த பிறகு, பாம்பே டாக்கிஸ் நிர்வாகத்தை, சசாதர் முகர்ஜியுன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், சசாதர் முகர்ஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் பாம்பே டாக்கிஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, பிலிம்ஸ்தான் என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினர். இதனால் பாம்பே டாகிஸின் வளர்ச்சி சற்று குறைந்தது எனக் கூறப்படுகிறது.

விருதுகளும், மரியாதைகளும்

1958 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான "பத்ம ஸ்ரீ" விருது வழங்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத்துறையில், தேவிகா ராணியின் பங்களிப்பை பாராட்டி, 'தாதாசாகேப் பால்கே விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு "கௌரவ பல்கேரிய பதக்கம்" வழங்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் ஆண்டு சயின்ஸ் இந்திய அகாடமியிலிருந்து 'சிறப்பு விருது' வழங்கப்பட்டது.

தன்னுடைய கணவரின் இறப்புக்கு பிறகு, 1945 ஆம் ஆண்டு இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் செய்துக் கொண்டு பெங்களூரில் வாழ்ந்து வந்த தேவிகா ராணி , 1994 மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி தன்னுடைய 86 வது வயதில் இறந்தார்

Updated On: 30 March 2022 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்