/* */

பிரகாஷ் ராஜ் பர்த் டே டுடே

தனி முத்திரை பதித்து பல மொழிகளில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்த பிரகாஷ் ராஜ் பிறந்தநாளின்று

HIGHLIGHTS

பிரகாஷ் ராஜ் பர்த் டே டுடே
X

'எனக்கு அந்த நடிகரைப் பிடிக்கும்! உனக்கு இந்த நடிகரை பிடிக்குமா?' -அப்படி இப்படி கச்சை கட்டிப் பிரிந்து கிடப்பார்கள் ரசிகர்கள். அதே சமயம், சில நடிகர்களை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். பிரகாஷ் ராஜ்… அப்படியானவர். சகல ரசிகர்களும் கொண்டாடும் கலைஞர். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகமான நடிகர், நடிகைகளின் பட்டியல் மிகப்பெரியது. அந்தப் பட்டியலில் பிரகாஷ் ராஜ் மிக முக்கியமானவர்.

ஒரு படத்தில் ஹீரோ, அடுத்த படத்தில் கம்பீரமான போலீஸ் ஆபீசர், வேறொரு படத்தில் வில்லன், இன்னொரு படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரம் என ஆல்ரவுண்டராக அதகளம் பண்ணுவதே பிரகாஷ் ராஜ் ஸ்டைல்.

'கில்லி'யில் த்ரிஷாவைத் துரத்தித் துரத்தி 'லவ்யூடா செல்லம்' என்று சொன்ன அதே பிரகாஷ் ராஜ், 'அபியும் நானும்' படத்தில், த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் மகளை கொடூரமான முறையில் பறிகொடுத்துத் தவிக்கும் போலீஸ் ரிட்டையர்டு பிரகாஷ் ராஜ், 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில், சிரித்துக்கொண்டே, காமெடி செய்து வில்லத்தனத்தில் வெளுத்துக் கட்டுவார்.

'இருவர்', 'காஞ்சிவரம்', 'சொக்கத்தங்கம்', 'அசுரன்' என்று பிரகாஷ் ராஜ் பின்னிப்பெடலெடுத்ததெல்லாம் தனிக்கதை. இந்தப் படங்களில் பிரகாஷ் ராஜ் கேரக்டர் அவரின் சிறந்த நடிப்பைக் காட்டும் ஆடுகளமாக அமைக்கப்பட்டிருக்கும்.

இப்படி அவர் ஏற்று நடித்த கேரக்டரில் தனி முத்திரையில் பதிப்பார். பல மொழிகளில் நடித்து, தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ஒரு தனித்துவ நடிகராக பெயர் வாங்கிய பெருமைக்கு உரியவர் பிரகாஷ் ராஜ்.

நல்ல நடிகனாக இருக்கும் பிரகாஷ் ராஜ், நல்ல சினிமா மீதான காதலும் ஏக்கமும் கொண்டவர். அதனாலேயே 'அபியும் நானும்', 'மொழி' போன்ற அற்புதமான சில படங்களை தயாரிக்கவும் செய்தார். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்யும் கலைஞர்களில் ஒருவராக இருக்கும் பிரகாஷ் ராஜுக்கு, இன்று (மார்ச் 26) 57 வதுபிறந்த நாள்.

'ஹாய் மோடி ஹேட்டர்… ஹேப்பி பர்த் டே செல்லம்'

Updated On: 26 March 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...