/* */

விக்கி- நயன் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழா

nayanthara vignesh shivan celebrate christmas with assistant directors- விக்கி - நயன் உடன் உதவி இயக்குநர்கள் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழா, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

விக்கி- நயன் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழா
X

nayanthara vignesh shivan celebrate christmas with assistant directors- நயன் - விக்கி குஷியாக கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழா.

nayanthara vignesh shivan celebrate christmas with assistant directors- சமூக ஊடகங்களில் அதிகளவில் கவனிக்கப்படுகிற சினிமா நட்சத்திரங்களில், நடிகை நயன்தாராவுக்கு எப்பவுமே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் 'ஐயா' படத்தில் சரத்குமார் ஜோடியாக நயன்தாரா அறிமுகமானார். அடுத்தடுத்த படங்களில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார். 'சந்திரமுகி' படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்ததை அடுத்து, பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகையானார். அடுத்தடுத்து, வெற்றி படங்களில் நடித்ததுடன், 'லேடி சூப்பர் ஸ்டார்' என புகழப்படும் அளவுக்கு, நம்பர் ஒன் நடிகையாக மாறினார். தமிழில், 30 கோடி ரரூபாய் வரை, அதிக சம்பளம் பெறும் நடிகை நயன்தாரா என்றும் பேசப்படுகிறது.


தற்போது, நயன்தாரா கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழா, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு - வரலட்சுமி ஜோடியாக நடித்த 'போடா போடி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

அவர் கடைசியாக இயக்கிய "காத்துவாக்குல ரெண்டு காதல்" படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதி வெளியானது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை தமிழ் படங்களில் வராத, மிக வித்யாசமான காதல் கதையாக இது இருந்தது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை 'லைக்கா' நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.


சில வாரங்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.


சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனர் பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 31 Dec 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?