/* */

அவதாருக்கு போட்டியாக வரும் தமிழ்ப்படம்! 163 மொழிகளில் வெளியீடு!

டி ஆர் இசையில் புதிய படம் 163 மொழிகளில் வெளியிடுகிறார்களாம்!

HIGHLIGHTS

அவதாருக்கு போட்டியாக வரும் தமிழ்ப்படம்! 163 மொழிகளில் வெளியீடு!
X

'அவதார்-2' படமே 160 மொழிகளில் திரையிட்டுள்ள நிலையில் டி ராஜேந்திரன் தனது படத்தை 163 மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம். இதனை பலரும் பாராட்டி வரும் நிலையில், மீம்களும் தெறிக்கவிடப்படுகின்றன.

தமிழனின் பெருமை சொல்லும் இந்த படத்தை 163 மொழிகளில் உருவாக்கி வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பிரச்னைகளை களைந்து விரைவில் ஷூட்டிங் செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

நான் கடைசி வரை தமிழன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சி.ஆர்.டி. நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார். இந்த படத்துக்கு இசை நம்ம டி.ராஜேந்தர். கூடுதலாக இந்த படத்தில் இடம்பெறவுள்ள அத்தனை பாடல்களையும் அவரே எழுதி இசையமைக்கிறார்.

நான் கடைசி வரை தமிழன் படம் தமிழின் பெருமை சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்-நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் 163 மொழிகளில் தயாராக இருக்கிறது என அப்படத்தின் இயக்குனர் எம்.ஏ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அது என்ன கணக்கு 163 என்று உங்களைப் போலவே எங்களுக்கும் கேள்வி எழுந்த நிலையில் அதையும் அவரிடமே கேட்டோம். அவர் அளித்த பதில் பின்வருமாறு;

நான் கடைசி வரை தமிழன்' படம் ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. மகாத்மா காந்தி,அகிம்சை வழியில் கடைசி வரை போராடி தான் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தை பெற்று தந்தார்.

தஞ்சை பெரிய கோவிலை பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு தான் ராஜராஜ சோழன் கட்டினார்.ராஜேந்திர சோழன் கடைசி வரை போராடி தான் புலிக்கொடியை நாட்டினார். கரிகால சோழன் கடைசி வரை போராடி தான் கல்லணையை கட்டினார்.

முல்லைப் பெரியாறு அணையை கட்டியும் இடிந்து விழுந்து விட்டது. ஆனால் மீண்டும் கடைசி வரை போராடி முல்லைப் பெரியாறு அணையை கட்டினார்கள்.

இதைப்போலத்தான் இந்த படத்தை எந்த படத்துக்கும் இல்லாத வகையில், 163 மொழிகளில் தயாராக்க இருக்கிறோம். அந்தவகையில் நாங்களும் கடைசி வரை வென்று காட்டுவோம்.

'அவதார்-2' படம் 160 மொழிகளில் திரையிட்டுள்ளார்கள். தமிழனின் பெருமை சொல்லும் இந்த படத்தை 163 மொழிகளில் திரையிட்டு காட்ட முடியாதா? நிச்சயம் செய்து காட்டுவோம், வென்றும் காட்டுவோம்.

இந்த படம் தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு படமாகவும், தமிழரின் பெருமை சொல்லும் அடையாள பாடமாகவும் இருக்கும். நடிகர்-நடிகைகள் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். வரலாற்று படங்கள் எப்போதுமே தோற்றது கிடையாது.

அந்தவகையில் பழமை வாய்ந்த, உலகத்தில் ஒப்பில்லாத இனமாம் தமிழரின் பெருமைகளை, மேன்மைகளை உணர்த்தும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும்.

பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் இந்த படத்துக்கு இசையமைத்தது பெரும் பலம். அவரது ரசிகர்கள் காத்திருங்கள். நல்ல இசை விருந்துக்கு, என இயக்குனர் எம்.ஏ.ராஜேந்திரன் தெரிவித்தார்.

Updated On: 13 Sep 2023 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  6. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  8. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  9. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  10. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு