/* */

லியோ கிளைமாக்ஸ்.... நிறைவடையும் காஷ்மீர் ஷெட்யூல்!

மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருடன் விஜய்க்கு இருக்கும் காம்பினேஷன் காட்சிகள் தனித்தனியே படம்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமேக்ஸ் காட்சி கடைசியாக படம்பிடிக்கப்பட இருக்கிறதாம்.

HIGHLIGHTS

லியோ கிளைமாக்ஸ்.... நிறைவடையும் காஷ்மீர் ஷெட்யூல்!
X

காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்த வாரத்துடன் பேக் அப் செய்துவிட்டு சென்னை திரும்புகிறது லோகேஷ் அன்ட் கோ. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். leo vijay movie heroine


leo movie update today

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இரண்டாவது படம் லியோ. மாஸ்டர் படத்துக்கு பிறகு இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் எனும் மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்த பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் லோகேஷ். விஜய்க்கும் ஏற்கனவே இந்திய அளவில் ரசிகர்கள் இருப்பதால் இந்த படத்துக்கு மிகப் பெரிய டாக் எழுந்துள்ளது.

லியோ படத்தில் விஜய் மட்டுமின்றி திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். கொடைக்கானல், சென்னை என சின்ன சின்ன ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு காஷ்மீருக்கு பறந்தது படக்குழு. கிட்டத்தட்ட 3 மாதங்கள் படப்பிடிப்பு அங்கு நடந்தது. இந்நிலையில் இப்போது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. விஜய், திரிஷா காட்சிகள் இன்றோடு முடிவடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை தாமதமானாலும் நாளையோடு படப்பிடிப்பு முடிந்து 23ம் தேதி சென்னை திரும்புகிறது படக்குழு.


விஜய், திரிஷா ஆகியோருக்கான காட்சிகள் பெரிய பாதிப்பை தரும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதுதான் படத்தின் மற்ற காட்சிகளுக்கு காரணமாக அமையுமாம். இதனால் கிளைமாக்ஸில் ஏற்படும் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியும் உருவாகிறதாம். அந்த காட்சிதான் அடுத்து படம்பிடிக்கப்படவிருக்கிறது.

மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருடன் விஜய்க்கு இருக்கும் காம்பினேஷன் காட்சிகள் தனித்தனியே படம்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமேக்ஸ் காட்சி கடைசியாக படம்பிடிக்கப்பட இருக்கிறதாம்.

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.


23 ம் தேதி சென்னை திரும்பும் லியோ படக்குழு அடுத்து 10 நாட்கள் ஓய்வெடுக்கிறது. காஷ்மீரில் கடும் குளிரில் இருந்தவர்கள் இப்போது சென்னையில் சில தினங்கள் ஓய்வெடுக்க தயாரிப்பு தரப்பே அனுமதி அளித்துள்ளதாம். அதேநேரம் திரிஷா பொன்னியின் செல்வன் 2 புரமோசனுக்கு செல்கிறார். ஏற்கனவே சொன்னது போல ஹைதராபாத் செட் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறதாம். 40 நாட்களில் முழு செட்டையும் போட டைம் கேட்டிருக்கிறார்களாம். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கி, ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துவிட்ட அடுத்த ஷெட்யூலுக்கு சென்னையில் 1 வாரம் திட்டமிட்டிருக்கிறார்களாம். அத்துடன் படமும் முடிவடைய இருக்கிறது என்கிறார்கள்.

லியோ ரிலீஸ் தேதி | leo vijay movie release date

வெகு விரைவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு லோகேஷ் கனகராஜ் படத்தை அக்டோபர் மாதத்துக்குள் ஒப்படைக்கிறாராம். அதனடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் அக்டோபர் மாதம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை தினங்களில் வெளியாகி வசூல் மழை பொழிய காத்திருக்கிறது. லியோ பட ரிலீஸ் தேதி வரும் அக்டோபர் 19,2023 ஆகும்


Updated On: 21 March 2023 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...