/* */

லியோ அடுத்த சிங்கிள் ரெடி! ஆனால்...!?

லியோ படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

லியோ அடுத்த சிங்கிள் ரெடி! ஆனால்...!?
X

லியோ படத்திலிருந்து இதுவரை 3 சிங்கிள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த பாடலும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் இந்த படத்தில் 5 பாடல்கள் இருப்பதாகவும் அதில் இப்போது வெளியாகவுள்ள பாடல்தான் லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்கு பிறகு தளபதி விஜய்யும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, நண்பராக கௌதம் மேனன், அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, வில்லன்களாக மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எப்படி துவங்கியது?

படம் சென்னை, காஷ்மீர், கொடைக்கானல் என 3 இடங்களில் கிட்டத்தட்ட 90 நாட்கள் முழுமையாக ஷூட்டிங் நிறைவு பெற்று, டப்பிங் பணிகளையும் முடித்துக் கொண்டு தற்போது கடைசி கட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.

படத்திலிருந்து நா ரெடிதான் வரவா, பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம் என்று 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இன்னும் 2 பாடல்கள் படத்திலேயே வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத் தனது குரலில் பாடல்களைப் பாடி பலரது எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

எப்போது வெளியாகிறது?

லியோ படத்தின் அடுத்த சிங்கிள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருக்கிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் சனிக்கிழமை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

புகை நமக்கு பகை!

ஆரம்பத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்காக பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்நிலையில் டிரைலரில் விஜய்யை கெட்ட வார்த்தைபேச வைத்துவிட்டார் லோகி என அவரையும் எதிர்க்க ஒரு கட்டத்தில் அதை மியூட் செய்து வெளியிட்டுள்ளனர். இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி படம் வெளியாக சரியாக 1 வாரம் இருக்கிறது என்று நினைக்கும்போது, 4 மணி காட்சிகள் மட்டுமின்றி, 7 மணி, 9 மணி காட்சிகளும் இல்லாமல் 11 மணிக்குதான் முதல் காட்சி திரையிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இருப்பதாக தகவல் கிளம்ப, விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து வந்த அறிவிப்பில் படக்குழுவிடமிருந்து கேட்கப்பட்ட அனுமதி கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், படத்தை 4, 7 மணிக்கு திரையிட அனுமதி அளிப்பதாக அந்த உத்தரவு கூற, விஜய் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

4 மணி ஷோ... லலித் உறுதி.!

இதனையடுத்து ஒரு குண்டைத் தூக்கி போட்டனர். அதாவது முதல் காட்சி என்பது 4 மணிக்குதான் அல்லது 7 மணிக்கு தான் என்பதை குறிப்பிடாமல் அந்த உத்தரவு வந்திருப்பதை எடுத்துக் காட்டி, அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்பதற்கே அனுமதி என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.

4வது சிங்கிள்

லியோ படத்தின் 4வது சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. மொத்தமுள்ள 5 பாடல்களையும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் விழா நடக்காமல் போனதால், பட வெளியீட்டுக்கு முன்பே 5 பாடல்களையும் லிரிக் வீடியோவாக வெளியிட வேண்டும் என லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டுள்ளாராம். இதற்கு காரணம், ரசிகர்கள் திரையரங்குக்கு வரும்போது அவர்கள் பாடலை புதிதாக கேட்டால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், ஏற்கனவே கேட்டு நல்ல வைப் ஆகி வந்தால் படத்துடன் ஈஸியாக கணெக்ட் ஆவார்கள் என்றும் நினைக்கிறார்களாம்.

Updated On: 14 Oct 2023 8:03 AM GMT

Related News