/* */

புகைப்படங்களில் அழகு தேவதையாக அசத்திய கீர்த்தி சுரேஷ்

keerthy suresh latest photos- சமீபத்தில் வெளியான நடிகை கீர்த்தி சுரேஷின் அசத்தலான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

புகைப்படங்களில் அழகு தேவதையாக அசத்திய கீர்த்தி சுரேஷ்
X

 keerthy suresh latest photos- நடிகை கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh latest photos, keerthy suresh latest pics- நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தமிழில் விஜய் உடன் 'பைரவா', தனுஷ் உடன் தொடரி, நடிகை சாவித்திரி கேரக்டரில் நடிகையர் திலகம், விஷால் உடன் 'சண்டக்கோழி 2', சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்களின் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 'பென்குயின்' என்ற த்ரில் படத்தில்,மகனை இழந்து தவிக்கும் கர்ப்பிணித்தாய் வேடத்தில், கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை தந்திருந்தார். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கையாக ' அண்ணாத்தே' படத்தில் நடித்து, பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.


தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகமானார்.


அதனைத் தொடர்ந்து, இவர் 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். மேலும், இவர் லீட் ரோலிலும் பல படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான 'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டது.


இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் 'பிஸி'யாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த 'சாணி காயிதம்' என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 'ராக்கி' படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான படம் 'சாணி காயிதம்'. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், லிஸ்டில் ஆண்டனி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி இருந்தது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.


தற்போது கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் 'சைரன்' என்ற படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.


இந்நிலையில் அம்மா, பாட்டியின் பூர்வீக கிராமத்திற்கு கீர்த்தி சுரேஷ் சென்றிருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இவருடைய தாயார் மேனகா, இவருடைய பாட்டி சரோஜா. இவர்கள் இருவருமே சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருந்தவர்கள். இவர்களுடைய பூர்வீக ஊர் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் திருக்குறுங்குடி. பூர்வீக ஊருக்கு சென்ற கீர்த்தி சுரேஷ்: அங்கு தங்களுடைய சொந்த பூர்வீக வீட்டை சுற்றிப்பார்த்து அங்கு எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


அது மட்டுமின்றி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நம்பி ராயர் கோயிலுக்கும் சென்று புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து, பலரும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Updated On: 19 Dec 2022 10:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  5. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  8. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  10. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!