/* */

ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று? படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்

நடிகர் ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது சோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று? படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்
X

ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அவர் நடிச்சு வந்த அகமது படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுது.

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் பூமி படத்தில் நடித்திருந்தார். ஓரளவு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த இந்த படத்தை தொடர்ந்து தற்போது ' ஜன கண மன ' பட இயக்குனர் அகமது மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றுகிறார் . இது குறித்து சமீபத்தில் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் அகமதுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து கேக்கின் படத்தையும் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் விருப்பத்திற்கு பதிலளித்த அகமது, அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார். அதில் "பரஸ்பர நம்பிக்கை, அன்பு மற்றும் மரியாதையை வளர்க்கும் உண்மையான மனிதர்களை சந்திப்பது மிகவும் அரிது. எல்லாவற்றிற்கும் நன்றி. 2 படங்கள் பின்னோக்கி, எங்கள் பயணம் தொடரட்டும். நீங்கள் தான் சிறந்தவர். என்று சூசகமாக புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது . அதன்படி ஜெயம் ரவி, அகமது இணையும் புதிய படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது..இதற்கிடையில், ஜெயம் ரவி, டாப்ஸி பண்ணு , ரஹ்மான் , அர்ஜுன் சர்ஜா மற்றும் நானா படேகர் நடித்துள்ள 'ஜன கன மன' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. அதோடு ஜெயம் ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் , அகமது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

Updated On: 19 April 2022 5:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்