/* */

பீஸ்ட்டே பரவால... ஜெயிலர் பற்றி நெட்டிசன்கள்!

ஜெயிலர் படத்தின் திரைவிமர்சனம்

HIGHLIGHTS

பீஸ்ட்டே பரவால...  ஜெயிலர் பற்றி நெட்டிசன்கள்!
X

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் ஜெயிலர். Jailer Review in Tamil இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இது ரஜினியின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றி பெறும் என்று தெரிவிக்கின்றனர். அதே வேளையில் படம் பார்த்துவிட்டு வந்த ரஜினியின் ரசிகர் அல்லாதோர் படத்தை கழுவி ஊற்றுவதைப் பார்க்க முடிகிறது.

ஜெயிலர் படம் திருப்திகரமானதாக இல்லை எனவும் இதற்கு பீஸ்ட்டே பரவாயில்லை எனவும் சொல்லி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தைப் பற்றிய நமது விமர்சனத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழகத்தில் தாமதமாக ரிலீஸ் ஆகும் ஜெயிலர்

ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் செய்யப்பட்டாலும் அது ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை. 3 மணி நேரங்கள் முன்னும் பின்னுமாக ரிலீஸ் நேரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூரு மாநகரில்தான் முதன்முதலாக படம் ரிலீஸாகிறது. அதிகாலையிலேயே படத்தை திரையிடுகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மற்ற மாநகரங்களில் 8 மணி காட்சிகளும் 9 மணி காட்சிகளும் திட்டமிடப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.

திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 9 மணிக்கு வெளியாகவேண்டிய படம் 10 மணிக்கே வெளியானதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் சட்டப்படி காலை 9 மணிக்கு முன் திரையங்கம் திறக்கப்படக்கூடாது என்பது விதிமுறை. இந்த விதிமுறை சில சமயங்களில் சிறப்பு அனுமதி பெற்று தளர்த்தப்படும். பொதுவாக தீபாவளி, பொங்கல் சமயங்களில் இதுபோன்ற தளர்வுகளுக்கான கோரிக்கை எழுப்பப்படும். ஆனால் ஜெயிலர் பண்டிகை அல்லாத நாளில் ரிலீஸ் ஆகியுள்ளதால் அதற்கான தேவை இல்லை என அமைதியாகிவிட்டார்கள் போல.

பீஸ்ட் வில்லனே பரவாயில்ல

பீஸ்ட் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் மிகவும் எளிமையானதாக இருக்கும் அதுவே படத்துக்கு மைனஸாகி விட்டது. இரண்டு வில்லன்களை கொண்டிருந்தாலும் படத்துக்கு அது பவர்ஃபுல்லான விசயமாக இல்லாமல் ஆகிவிட்டது.

ஆனால் ஜெயிலர் படத்தின் வில்லனுக்கு அதுவே பரவாயில்லை என்று கூறியிருக்கிறார் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒருவர்.

பீஸ்ட் திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த படமாகும். இது வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சனங்களில் கழுவி ஊற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறைகள் என்று பலரும் சொல்லிய விசயங்கள் இதோ!

  • திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் நெல்சன்
  • கதை ரொம்பவும் தொங்குகிறது சரியாக கவனம் செலுத்தவில்லை
  • டார்க் காமெடி சரியாக ஒர்க் ஆகவில்லை

ஜெயிலர் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் Jailer Review in Tamil வந்து கொண்டிருக்கின்றன. இப்போது ரசிகர் ஷோ நடந்து வருகிறது என்பதால் அடுத்த பொதுமக்கள் ஷோவின் போதுதான் உண்மையான நிலவரம் தெரியவரும்.

Updated On: 10 Aug 2023 4:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்