/* */

நலம் பெற்று வருகிறேன்; அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் - இயக்குநர் பாரதிராஜா

‘நலம் பெற்று வருகிறேன்; விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்’ என, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நலம் பெற்று வருகிறேன்; அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் - இயக்குநர் பாரதிராஜா
X

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் பாரதிராஜா. தற்போது நடிகராகவும் வலம் வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சென்னை, தி.நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாக்டர்களின் ஆலோசனைப்படி சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார்.

‛‛பாரதிராஜா நலமாக இருக்கிறார், சளி தொற்று தொல்லை இருக்கிறது. விரைவில் நலம் பெற்று பாரதிராஜா வீடு திரும்புவார்'' என அவரை நேரில் சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது உதவியாளர் சுரேஷ் கூறுகையில், ‛‛பாரதிராஜா நலமாக உள்ளார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மெல்ல தேறி வருகிறார். இப்போதைக்கு பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஒரு வாரத்திற்குள் வீடு திரும்புவார்,'' என்றார்.


பாரதிராஜா வேண்டுகோள்

இதனிடையே பாரதிராஜா சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர், ‛‛உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால், நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், என்னை நேரில் காண வர வேண்டாம். என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று, உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும், போனிலும், இணையதளம் மூலமும் நலம் விசாரித்த, நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Aug 2022 1:47 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!